கலப்புலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sk:Zliatina அழிப்பு: ug:قېتىشماق மாற்றல்: id:Aloi
சி தானியங்கி இணைப்பு: hu:Ötvözet
வரிசை 47: வரிசை 47:
[[he:סגסוגת]]
[[he:סגסוגת]]
[[hr:Legura]]
[[hr:Legura]]
[[hu:Ötvözet]]
[[id:Aloi]]
[[id:Aloi]]
[[io:Aloyo]]
[[io:Aloyo]]

11:44, 10 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கலப்புலோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, குறைந்தது ஒரு உலோகத்தையாவது உள்ளடக்கிய, தனிமங்களைக் கரைசல் அல்லது சேர்வை நிலையில் கொண்டதும், உலோக இயல்பு கொண்டதுமான ஒரு கலப்புப் பொருள் ஆகும். உருவாகும் உலோகப் பொருள் அதன் கூறுகளிலும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கும்.


கலப்புலோகங்கள் அவற்றை உருவாக்கிய பொருள்கள் கொண்டிருப்பதிலும் கூடிய விரும்பத்தக்க இயல்புகளைக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப் படுகின்றன. இரும்பின் கலப்புலோகமான உருக்கு இரும்பிலும் உறுதியானது. பித்தளை அதன் கூறுகளான செப்பிலும் நீடித்து உழைக்கக் கூடியதும், துத்தநாகத்திலும் கவர்ச்சி பொருந்தியதுமாகும்.


தூய உலோகங்களைப் போல் கலப்புலோகங்கள் ஒரு உருகுநிலையைக் கொண்டிருப்பதில்லை. மாறாக, பல கலப்புலோகங்கள் அவை திரவம், திண்மம் ஆகிய இரு நிலைகளினதும் கலவை நிலையில் இருக்கும் வீச்சு எல்லைகளைக் (range) கொண்டிருக்கின்றன. உருகல் தொடங்கும் வெப்பநிலை solidus எனப்படும், உருகல் முடிவடையும் போதுள்ள வெப்பநிலை liquidus எனப்படும். ஒற்றை உருகுநிலை கொண்ட கலப்புலோகங்களையும் வடிவமைக்கலாம். இத்தகைய கலப்புலோகங்கள் எளிதில் உருகிகள் என்று அழைக்கப்படுகின்றன.


சில சமயம் கலப்புலோகம் அதன் கூறுகளில் ஒன்றான உலோகமொன்றின் பெயராலேயே அழைக்கப்படுவதும் உண்டு. 58% தங்கத்துடன் வேறு உலோகங்கள் சேர்ந்த கலப்புலோகமான 14 கரட் தங்கம், தங்கம் என்றே அழைக்கப்படுகின்றது. இதே நிலை நகைகள் செய்யப் பயன்படும் வெள்ளிக்கும், கட்டுமானத்துக்குரிய அலுமினியத்துக்கும் பொருந்தும்.

சில கலப்புலோகங்கள்:

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்புலோகம்&oldid=307268" இலிருந்து மீள்விக்கப்பட்டது