வெள்ளி (தனிமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளி (உலோகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
47 பல்லேடியம்siவெள்ளிகாட்மியம்
Cu

Ag

Au
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
siவெள்ளி, Ag, 47
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
11, 5, d
தோற்றம் l பளபளப்பான, வெண் மாழை
அணு நிறை
(அணுத்திணிவு)
107.8682(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d10 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 1
இயல்பியல் பண்புகள்
நிறம் வெள்ளி நிறம்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
10.49 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
9.320 g/cm³
உருகு
வெப்பநிலை
1234.93 K
(961.78 °C, 1763.2 °F)
கொதி நிலை 2435 K
(2162 °C, 3924 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
11.28 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
258 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.350 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1283 1413 1575 1782 2055 2433
அணுப் பண்புகள்
படிக அமைப்பு முகநடு, கட்டகம் fcc
ஆக்சைடு
நிலைகள்
1
(இருமுக ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.93 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 731.0 kJ/mol
2nd: 2070 kJ/mol
3rd: 3361 kJ/mol
அணு ஆரம் 160 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
165 pm
கூட்டிணைப்பு ஆரம் 153 pm
வான் டெர் வால்
ஆரம்
172 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை எதிர்மென்காந்தத் தன்மை
மின் தடைமை (20 °C) 15.87 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 429
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப விரவுமை (300 K) 174 mm²/s
வெப்ப நீட்சி (25 °C) 18.9 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) 2680 மீ/நொ
யங்கின் மட்டு 83 GPa
Shear modulus 30 GPa
அமுங்குமை 100 GPa
பாய்சான் விகிதம் 0.37
மோவின்(Moh's) உறுதி எண் 2.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
251 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
24.5 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-22-4
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: வெள்ளி (தனிமம்) ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
105Ag செயற்கை 41.2 d ε - 105Pd
γ 0.344, 0.280,
0.644, 0.443
-
106mAg செயற்கை 8.28 d ε - 106Pd
γ 0.511, 0.717,
1.045, 0.450
-
107Ag 51.839% Ag ஆனது 60 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
108mAg செயற்கை 418 y ε - 108Pd
IT 0.109 108Ag
γ 0.433, 0.614,
0.722
-
109Ag 48.161% Ag ஆனது 62 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
111Ag செயற்கை 7.45 d β- 1.036, 0.694 111Cd
γ 0.342 -
மேற்கோள்கள்

வெள்ளி (ஜெர்மன்: Silber, பிரெஞ்சு: Argent, ஸ்பானிஷ்: Plata, ஆங்கிலம்: Silver, சில்வர் (IPA: /ˈsɪlvə(ɹ)/) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ag என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் இலத்தீன் மொழிப் பெயராகிய ஆர்கெண்ட்டம் (Argentum) என்பதில் இருந்து உருவானது. இதன் அணுவெண் 47, மற்றும் இதன் அணுக்கருவினுள் 60 நொதுமிகள் உள்ளன. மேலும் இதன் அணு நிறை 107.86 amu ஆகும்

வரலாறு[தொகு]

வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்பட்டு வருகிறது. இது பொதுவாகத் தங்கத்திற்கு அடுத்து இரண்டாவது மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் வெள்ளி நோய் தொற்றுக்கள் மற்றும் சிதைவுகளை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

ஐசோடோப்புகள்[தொகு]

இயற்கையாகத் தோன்றும் வெள்ளியில் 107Ag மற்றும் 109Ag, 109Ag என்ற இரண்டு நிலையான ஐசோடோப்கள் உள்ளன. 107Ag ஐசோடோப்பு இயற்கையில் சற்று அதிகமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட தனிமவரிசை அட்டவணையில் அரிதாகவே இந்த அளவுக்கு அதிகமாக இயற்கையில் கிடைக்கும் ஐசோடோப்புகள் உள்ளன. இதன் அணு எடை 107.8682(2) அணுநிறை அலகுகளாகும்[1][2]. வெள்ளி சேர்மங்களில் இந்த அளவு மிகமுக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக ஆலைடுகளின் எடையறி பகுப்பாய்வில் இந்த அளவு முக்கியமாகக் கருதப்படுகிறது. இரண்டு ஐசோடோப்புகளும் விண்மீன்களில் எசு-செயல்முறையிலும் மீயொளிர் விண்மீன்களில் ஆர்-செயல்முறையிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன[3].

வெள்ளி தனிமத்தைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 28 வகையான கதிரியக்க ஐசோடோப்புகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றில் 41.29 நாட்களை அரைவாழ்வுக்காலமாகக் கொண்டுள்ள 105Ag ஐசோடோப்பு அதிக நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. 111Ag ஐசோடோப்பு 7.45 நாட்களும் 112Ag 3.13 மணி நேரமும் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டுள்ளன. மேலும், வெள்ளி தனிமமானது எண்ணற்ற உட்கரு மாற்றியன்களைப் பெற்றுள்ளது. இவற்றில் 108mAg 418 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலமும், 110mAg 249.79 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் 106mAg 8.28 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் கொண்டுள்ளன. எஞ்சியிருக்கும் பிற கதிரியக்க ஐசோடோப்புகள் யாவும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தை மட்டுமே கொண்டுள்ளன. இதிலும் பெரும்பாலானவை 3 நிமிடத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டவையாக உள்ளன [4].

வெள்ளி ஐசோடோப்புகள் ஒப்பீட்டு அணுநிறை அளவு 92.950 93Ag முதல் அணுநிறை அளவு 129.950 130Ag வரை காணப்படுகின்றன. நிலைப்புத் தன்மை மிகுந்த 107Ag ஐசோடோப்புக்கு முன்னர் உள்ளவை எலக்ட்ரான் பிடிப்பு முறை சிதைவை முதன்மையாகக் கொண்டும், இதற்கு பின்னர் உள்ளவை பீட்டா சிதைவு முறையை முதன்மையாகக் கொண்டும் உருவாகின்றன[5]. இவ்வாறு உருவாகும் 107Ag ஐசோடோப்புக்கு முன்னரான சிதைவு விளைபொருட்கள் பல்லேடியம் (தனிமம் 46) மற்றும் பின்னரான சிதைவு விளைபொருட்கள் காட்மியம் ( தனிமம் 48) ஐசோடோப்புகளாகும்.

பலேடியம் ஐசோடோப்பான 107 Pd யானது 107Ag ஐசோடோப்பின் பீட்டா சிதைவால் உருவாகிறது. இதன் அரைவாழ்வுக் காலம் 6.5 மில்லியன் ஆண்டுகளாகும். இரும்பு விண்கற்களில் மட்டுமே போதுமான அளவுக்கு இந்த பலேடியம் வெள்ளி ஐசோடோப்பு விகிதங்கள் காணப்படுகின்றன. கதிரியக்கச் சிதைவு 107Ag சாண்டா கிளாரா விண்வீழ் கல்லில் 1978 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது[6].

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

  • வெள்ளி ஒரு மென்மையான உலோக உள்ளது.மேலும் இது பணமாகவோ அல்லது நகைகள் பயன்படுத்தப்படும் மதிப்புமிக்க உலோகமாக உள்ளது
  • இது பெரும்பாலும் தங்கத்துடனோ அல்லது வேறு சில உலோகங்களுடனோ அவற்றை கடினமாக்க கலக்கப்படுகிறது.
  • மிகவும் பளபளப்பு வாய்ந்த நீலம் கலந்த வெள்ளை நிறம் உடையது
  • இது ஒரு சிறந்த மின்கடத்தியாக உள்ளது.

வெள்ளியின் அங்கிலப்பெயரான சில்வர் ஆங்கில மொழியில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றாகும்.இது மதிப்புமிக்கதானதால் உலகம் முழுவதும் வெள்ளி நாணயங்கள் மற்றும் பார்கள் கடைகளில் வாங்கி விற்கப்படும். இத்தனிமம் மிகஅதிகமான தகடாக்க தன்மை கொண்ட ஒரு உலோகம்.வெள்ளியில் செய்த குவளை, உணவுத் தட்டு, கிண்ணம் போன்ற பாத்திரங்களைப் பலரும் பார்த்திருப்பதால் இது நன்கு அறியப்பட்ட, நன்கு தட்டி கொட்டி, தகடாக்க வல்ல ஒரு மாழையாகும்

இரசாயன பண்புகள்[தொகு]

  • இது வினைதிறன் மிகவும்குறைவான உலோகம்
  • இது அமிலங்கள் கரையும் திறனை அதிகமாக கொண்டதல்ல எனினும் நைட்ரிக் அமிலம் இதை கரைக்கின்றது.கரைத்து வெள்ளி நைட்ரேடை உருவாக்கும்.
  • இது பொட்டாசியம் டை குரோமேற்றுடன் அல்லது பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற வலுவான ஆக்ஸிஜனேற்றம் பொருளுடன் எந்த வினைபுரியும் செய்வதில்லை.
  • இது எளிதில் அரிக்கப்படுவதில்லை.காற்றுடன் ஹைட்ரஜன் சல்பைட் இருக்கும் போது மட்டுமே அது வினைபுரிந்து ஒரு வெள்ளி ஆக்ஸைடு என்ற கருப்பு படலத்தை உருவாக்குகிறது

வெள்ளியின் +1 மற்றும் +2 சேர்மங்கள்: வெள்ளியின் சேர்மங்களில் +1 அதிகம் உள்ளது.ஒரு சில கலவைகள் +2 நிலையில் உள்ளது எனினும் இவை மிகுந்த விஷத்தன்மை வாய்ந்ததாகும் மேலும் அவை மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன. வெள்ளியின் சேர்மங்கள், பழுப்பு கருப்பு, மஞ்சள், சாம்பல், அல்லது நிறமற்றதாக இருக்கலாம்.பொதுவாக வெள்ளி சேர்மங்கள் கிருமிநாசினிகளாக உள்ளன.

வெள்ளி (|) சேர்மங்கள்[தொகு]

வெள்ளி (|) சேர்மங்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன.அவை மிகவும் விலை உயர்ந்தவை.அவை

  • வெளிர் மஞ்சள் நிற வெள்ளி புரோமைடு,
  • மஞ்சள் நிற வெள்ளி கார்பனேட், மஞ்சள்
  • வெள்ளை நிற வெள்ளி குளோரைடு,
  • மஞ்சள் பழுப்பு நிற வெள்ளி (|) ஃப்ளோரைடு,
  • நிறமற்ற வெள்ளி அயடேற்று,
  • மஞ்சள் நிற வெள்ளி அயடைடு,
  • நிறமற்ற வெள்ளி நைட்ரேட்,
  • பழுப்பு அல்லது கறுப்பு நிற வெள்ளி ஆக்சைடு,
  • கருப்பு நிற வெள்ளி சல்பைட்,

வெள்ளி (||) சேர்மங்கள்[தொகு]

வெள்ளி (||) சேர்மங்களும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற முகவர்களாகும் மற்றும் அரிதானவை ஆகும். வெள்ளி (||) ஃப்ளோரைடு, வெள்ளை அல்லது சாம்பல் நிற மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற முகவராகும்.

வெள்ளி தனிமம் செம்பு, தங்கம், துத்தநாகம் போன்ற தனிமங்களுடன் சேர்ந்து உலோகக் கலைவைகளை உருவாக்குகிறது.

நிகழ்தல் மற்றும் பிரித்தெடுத்தல்[தொகு]

பூமியின் மேற்பரப்பில் வெள்ளி ஒரு லட்சத்திற்கு 0.08 பாகங்களாகக் காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட பாதரசத்தின் அளவைப் போலவே உள்ளது. பெரும்பாலும் சல்பைட் தாதுக்களில் வெள்ளி காணப்படுகிறது. அகாண்டைட்டு மற்றும் அர்ச்செண்டைட்டு போன்றவை முக்கியமான வெள்ளியின் தாதுக்களாகும். இயற்கையாக வெள்ளி தங்கத்துடன் உலோகக்கலவையாகவும் மற்றும் ஆர்சனிக், கந்தகம், அந்திமனி அல்லது குளோரின் போன்றவற்றுடன் கலந்த தாதுப்பொருளாகவும் கிடைக்கின்றது. அர்சென்டைட், குளொரார்கைரைட் மற்றும் பைரார்கைரைட் போன்றவை வெள்ளியின் தாதுக்கள்.

பயன்கள்[தொகு]

தனிமமாக பயன்கள்[தொகு]

வெள்ளி உலகமெங்கும் பணமாகவும் நகையாகவும் மற்றும் பல விஷயங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது சாம்பல் வண்ணத்தில் தெரிந்தாலும் கூட ஒரு வெள்ளை உலோகம் என அழைக்கப்படுகிறது.வெள்ளி பாத்திரங்களை செய்ய பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு கலவையாக செயற்கை பற்கள் தயாரிக்கவும் பற்களின் இடைவெளியை நிரப்பவும் பயன்படும். மேலும் வெள்ளி ஒரு வினை ஊக்கியாக பயன்படுகிறது.

சேர்மமாக அதன் பயன்கள்[தொகு]

வெள்ளி சேர்மங்கள் பல கிருமிநாசினிகளாக உள்ளன. இது பாக்டீரியா கொல்லவும் மற்றும் மற்ற சில பயனுகாவும் பயன்படுகிறது. இது மின்சேமிப்பு களங்களில் வெள்ளி ஆக்சைடாக பயன்படுத்தப்படுகிறது.அவைகள் புகைப்படம் எடுக்கும் இழைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் ஆடையில் வாசனை குறைக்க பயன்படுகிறது. சில வெள்ளி கலவைகள் தீக்காயங்கள் ஆற உதவும் என்று கிரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தனியாகவும், துணைவிளைப்பொருளாகவும்[தொகு]

இது இயற்கையில் தனியாகவும் ஆர்செண்ட்டைட், குளோரார்கைரைட் ஆகிய கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. வெள்ளிதான் யாவற்றினும் அதிக மின்கடத்துமையும், வெப்பக்கடத்துமையும் கொண்ட தனிமம் (தனிம மாழை). செப்பு, தங்கம், ஈயம், துத்தநாகம் முதலான தனிமங்களைக் கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கையில் வெள்ளி கூடவே கிடக்கும் ஒரு துணைவிளைப்பொருளாக உள்ளது.

பாதுகாப்பு[தொகு]

வெள்ளியினால் மனிதர்களுக்கு ஒரு பெரிய ஆபத்து ஏதும் இல்லை. எனினும் வெள்ளி கலவைகள் நச்சு தன்மை வாய்ந்தது.இதனால் பாதிக்கப்பட்டவரின் தோல் நீல நிறமாக மாறும். ஆனால் கூழ்மவெள்ளி, மிகக்குறைந்த அளவில் ஒரு பொதுவான ஹோமியோபதி மருந்தாக பயன்படுகிறது.

உலகில் வெள்ளி இருப்பும் பிரித்தெடுப்பும்[தொகு]

வெள்ளி உண்மையில் தங்கத்தை விட அதிக பயன்கொண்டதாகும். மேலும் 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோண்டி எடுக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவே உலகில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெள்ளி வேகமாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. வெள்ளி விற்கும் நிறுவனங்களிடம் இருந்து அதை பயன் படுத்தும் நிறுவனங்கள் அதன் விலைகளை செயற்கையாக குறைந்து பெறுகிறது. இதுவே மறைவற்ற குறைவான விற்பனை என அழைக்கப்படுகிறது. உலகின் வெள்ளி சேமிக்கப்படும் அனைத்து வெள்ளியும் காலியான பின் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கள் பங்கு வெள்ளியை கேட்க தொடங்கும் போது வெள்ளி விலை மிக அதிகமாக உயரும்.

வெள்ளியின் விலை ஜூன் 2010 ல் அவுன்ஸ் ஒன்றிற்கு 18 அமெரிக்க டாலர்கள் வரை ஆகும்.

வெள்ளியின் விலை டிசம்பர் 2010 ல் அவுன்ஸ் ஒன்றிற்கு 28 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளது.

வெள்ளி உலகில் மொத்த வெள்ளி எடுப்பு (உற்பத்தி) வளர்ச்சி
நாடு சுரங்க உற்பத்தி(மெட்ரிக் டன்) உலக சுரங்க உற்பத்தியில் பங்கு(%) சேமிப்பு(மெட்ரிக் டன்) உலக சேமிப்பில் இருப்பு %
பெரு 3,200 16.4 37,000 6.5
மெக்ஸிக்கோ 3,000 15.4 40,000 7.0
சீனா 2.550 13,1 120.000 21,1
ஆஸ்திரேலியா 2.150 11.0 37,000 6.5
சிலி 1,400 7.2 இல்லை இல்லை
கனடா 1.310 6.7 35.000 6.1
போலந்து 1,300 6.7 140,000 24.6
அமெரிக்காவில் 1,100 5.6 80,000 14.0
தென் ஆப்ரிக்கா 90 0.5 இல்லை இல்லை
மற்ற நாடுகளில் 3,400 17.4 80,000 14.0
உலக மொத்தம் 19,500 100 570,000 100

99.9% தூய்மையான வெள்ளி தனிமம் வர்த்தக ரீதியாகக் கிடைக்கிரது. 2014 ஆம் ஆண்டில் மெக்சிகோ உலக வெள்ளி தனிமம் உற்பத்தியில் 5000 டன் வெள்ளியை உற்பத்தி செய்து முதலிடம் பிடித்தது. இந்நாட்டைத் தொடர்ந்து சீனா 4060 டன்களும் பெரு 3780 டன்களும் உற்பத்தி செய்தன [7].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Atomic Weights of the Elements 2007 (IUPAC)". பார்க்கப்பட்ட நாள் 11 November 2009.
  2. "Atomic Weights and Isotopic Compositions for All Elements (NIST)". பார்க்கப்பட்ட நாள் 11 November 2009.
  3. Cameron, A. G. W. (1973). "Abundance of the Elements in the Solar System". Space Science Review 15: 121–146. doi:10.1007/BF00172440. Bibcode: 1973SSRv...15..121C. https://pubs.giss.nasa.gov/docs/1973/1973_Cameron_ca06310p.pdf. பார்த்த நாள்: 2017-05-16. 
  4. Audi, Georges; Bersillon, O.; Blachot, J.; Wapstra, A. H. (2003). "The NUBASE Evaluation of Nuclear and Decay Properties". Nuclear Physics A (Atomic Mass Data Center) 729: 3–128. doi:10.1016/j.nuclphysa.2003.11.001. Bibcode: 2003NuPhA.729....3A. 
  5. "Atomic Weights and Isotopic Compositions for Silver (NIST)". பார்க்கப்பட்ட நாள் 11 November 2009.
  6. Kelly, William R.; Wasserburg, G. J. (1978). "Evidence for the existence of 107Pd in the early solar system". Geophysical Research Letters 5 (12): 1079–1082. doi:10.1029/GL005i012p01079. Bibcode: 1978GeoRL...5.1079K. 
  7. Hilliard, Henry E. "Silver". USGS.

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.britannica.com/EBchecked/topic/544756/silver-Ag

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_(தனிமம்)&oldid=3417840" இலிருந்து மீள்விக்கப்பட்டது