"மாக்சிம் கார்க்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,479 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
சி (AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
==வாழ்க்கை==
 
மாக்சிம் கார்க்கி ருஷ்யாவில், ரிஸ்னி ரங்கரோட் நகரத்தில் 1868ம் ஆண்டு, மார்ச் மாதம் 28 (பழைய தேதி 16) அன்று பிறந்தார். அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் என்ற இயற்பெயருடைய கார்க்கியின் இளமைப் பருவம் அத்தனை உவப்பானதல்ல. தன்னுடைய மூன்று வயதில் தந்தையை இழந்தார். தாயாரின் ஆதரவும் இல்லை. தாத்தா வாசிலி காசிரின் கொடுமைக்காரராக இருந்தார். பாட்டி அக்குலினா மட்டும் இல்லையென்றால் கார்க்கியின் வாழ்வும் இளமையிலேயே முடிந்திருக்கும்.
மாக்சிம் கார்க்ககுருசியாவில் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.
 
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.
 
பாட்டியிடமிருந்துதான் மானுடத்தின் மகத்துவம் பற்றி கதைகள்மூலமாக அறிந்துகொண்டதாக, ‘எனது குழந்தைப் பருவம்’ நூலில் எழுதியிருக்கிறார். தாத்தாவின் கொடுமை தாளாமல் பத்து வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார்.
 
ருஷ்யாவின் நிலப்பரப்பெங்கும் குறுக்குமறுக்காக அலைந்து திரிந்தார். உயிர் வாழ்வதற்காக எல்லா வேலைகளையும் செய்தார். செருப்பு தைத்தார், மூட்டை தூக்கினார், மண்பாண்டங்கள் செய்தார், ரயில்நிலைய காவலனாக இருந்தார், மீன்பிடித் தொழில் செய்தார், தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். நாடக நடிகனாக, பழ வியாபாரியாக இன்னும் பல்வேறு தொழில்களைச் செய்ததால்தான் கார்க்கி, பின்னாட்களில் அடித்தட்டு மக்களின் வாழ்நிலையை, மனநிலையை தன்னுடைய படைப்புகளில் அற்புதமாகச் சித்தரிக்கும் ஆற்றலைப் பெறமுடிந்தது.
 
கசந்த, தன் கடந்தகாலத்தை நினைத்தே கார்க்கி (கசப்பு) என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார். ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றார். அவர் எழுதி, அரங்கேறிய நாடகங்களுக்காகப் பலமுறை சிறை சென்றார். போல்ஷ்விக் கட்சியின் ஆதரவாளராக இருந்த கார்க்கி, [[லெனின்]] லூனாசாவ்ஸ்கி போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார் .பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக்லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர்சன், சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
 
லெனினுடைய வேண்டுகோளுக்கேற்ப, புரட்சிக்கு நிதிதிரட்ட அமெரிக்கா சென்ற கார்க்கி, 1906ம் ஆண்டிலிருந்து 1913ம் ஆண்டுவரை காப்ரி நகரில் இருந்தார். 1913ம் ஆண்டு ருஷ்யா திரும்பியவர், மீண்டும் 1921ம் ஆண்டு உடல்நலம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினார். 1932ம் ஆண்டு, ஸ்டாலினுடைய வேண்டுகோளை ஏற்று சோவியத் திரும்பி வந்தார்.
 
கார்க்கி 1896 முதல் 1903 வரை யெகாடெரினா பெஷ்கோவா மற்றும் 1903 முதல் 1919 வரை மரியா ஆண்ட்ரேயவா ஆகியோரை மணந்தார். அவருக்கு மூன்று மகன்கள், ஜினோவி, மாக்சிம் மற்றும் யூரி, மற்றும் இரண்டு மகள்கள், யெகாடெரினா மற்றும் கேத்தரின்.
 
==எழுத்துப்பணிகள்==
109

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2988494" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி