சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20: வரிசை 20:

கி.மு ஐந்தாயிரம் ஆண்டளவில் நடுவண் கிழக்குப் பகுதியில் "உருட்டிகள்" எனும் "மெதுசக்கரங்கள்" சக்கரங்கள் உருவாவதற்கு முன்பே வழக்கில் இருந்துள்ளன. இதற்கான மிகப்பழைய எடுத்துகாட்டு ஈரானில் உள்ள தெப்பே பார்திசுவில்கி.மு5200–4700 அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.இவை கல்லாலோ களிமண்ணாலோ செய்யப்பட்டு மையத்தில் ஒரு முளையால் தரையில் நாட்டப்பட்டுள்ளன. ஆனால் இதைச் சுழற்ற முயற்சி தேவைப்பட்டுள்ளது. உண்மையான கட்டற்று சுழலும் குயவர் சக்கரம் மெசபடோமியாவில் கி.மு 3500 ஆண்டளவில் ஏன், கி.மு 4000 ஆண்டளவில் இருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளது.<ref>{{cite book|title=A Companion to the Archaeology of the Ancient Near East|author=D. T. Potts|year=2012|page=285}}</ref> இதன் மிகப்பழைய எச்சம் ஈராக்கில் உள்ள ஊர் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 3100 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது .

3500 கி.மு நான்காம் ஆயிரப் பிந்திய அரைப்பகுதியில், சக்கரம் பூட்டிய வண்டியின் தோன்றியதற்கான முதல் சான்று, மெசபடோமியாவிலும் (சுமேரிய நாகரிகம்) வட காக்காசசிலும் (மைகோப்பியப் பண்பாடு) நடுவண் ஐரோப்பாவிலும் (குக்குதேனி-திரிப்பில்லியப் பண்பாடு) கிடைத்துள்லது. எனவே சக்கரம் எங்கே எந்தப் பண்பாட்டில் முதலில் தோன்றியது என்ற கேள்விக்கான விடை தீர்க்கப்படாமலே உள்ளது.

==காட்சி மேடை==
==காட்சி மேடை==

11:34, 26 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

ஒரு தொடர் வண்டியின் சில்லுகளில் ஒன்று
பண்டைய மூவுருளியில் உள்ள மூன்று சக்கரங்கள்
மிகப்பழைய சக்கரங்கள் மரத் துண்டால் செய்யப்பட்டன.
சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சில்லுகளைக் கொண்ட விலங்குகளால் இழுக்கப்படும் தேர்கள். (கி.மு 2600)
உருவம் பொறித்த புத்துலகம் தற்சார்பாக புனைந்த சக்கரம்

சக்கரம் (wheel) அல்லது சில்லு என்பது இறுசிலோ தாங்கியிலோ உருளத்தகு வட்டவடிவ உறுப்பாகும். ஆறு தனி எந்திரங்களில் ஒன்றான கப்பி-இறுசுத் தொகுதியில் சக்கரங்கள் முதன்மை வாய்ந்த உறுப்புகளாகும். இறுசு பூட்டிய சக்கரங்கள், எடைமிகுந்த பொருள்களையும் எளிதாக நகர்த்தி போகுவரத்துக்கு உதவுவதோடு எந்திரங்களில் அரியவினைகளை எளிதாகச் செய்யவும் உதவும். வேறு பல நோக்கங்களுக்காகவும் சக்கரங்கள் பயன்படுகின்றன. எடுத்துகாட்டாக, கப்பல் சக்கரம், திசைதிருப்பச் சக்கரம், குயவர் சக்கரம் சமனுருள் அல்லது சமன்சக்கரம் ஆகியவற்றைக் கூறலாம். சக்கரங்களுக்கான பொதுவான பயன்பாடுகள் போக்குவரத்தில் அமைகின்றன. இறுசில் உருண்டு இயங்கி சக்கரம் உராய்வைப் பெரிதும் குறைக்கிறது. சக்கரங்கள் சுழல, அதற்கு திருப்புமையை அதன் இறுசில் ஈர்ப்பாலோ புற விசை அல்லது திருக்கத்தாலோ தரவேண்டும்.

வரலாறு

பிந்தைய புதிய கற்காலத்தில் சக்கரங்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டன. தொடக்க வெண்கலக் காலத்தின் பிற தொழில்நுட்பப் பெருவளர்ச்சியோடு இவை பின்னிப்பிணைந்து அமைகின்றன. புதிய கற்காலப் புரட்சியில் வேளாண்மையும் மட்பாண்டங்களும் உருவாகிய பின்பும் சில ஆயிரம் ஆண்டுகள் சக்கரமின்றியே கழிந்துள்ளன. புதிய கற்காலப் புரட்சி (கி.மு 9500–6500).

சுமேரிய போர்ச்செந்தர ஒனேகர் பூட்டிய சக்கர வண்டியின் காட்சி" (அண். கி.மு 2500)

ஆலாப் பண்பாடு (கி.மு 6500–5100) மிகப்பழைய சக்கர வண்டியின் உருவத்தை வரைந்த்தாகக் கூறப்பட்டாலும், அலாபியர்கள் சக்கரவண்டியை ஏன், குயவர் சக்கரத்திக் கூட பயன்படுத்தியதற்கான சான்றேதும் கிடைக்கவில்லை.[1]

கி.மு ஐந்தாயிரம் ஆண்டளவில் நடுவண் கிழக்குப் பகுதியில் "உருட்டிகள்" எனும் "மெதுசக்கரங்கள்" சக்கரங்கள் உருவாவதற்கு முன்பே வழக்கில் இருந்துள்ளன. இதற்கான மிகப்பழைய எடுத்துகாட்டு ஈரானில் உள்ள தெப்பே பார்திசுவில்கி.மு5200–4700 அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.இவை கல்லாலோ களிமண்ணாலோ செய்யப்பட்டு மையத்தில் ஒரு முளையால் தரையில் நாட்டப்பட்டுள்ளன. ஆனால் இதைச் சுழற்ற முயற்சி தேவைப்பட்டுள்ளது. உண்மையான கட்டற்று சுழலும் குயவர் சக்கரம் மெசபடோமியாவில் கி.மு 3500 ஆண்டளவில் ஏன், கி.மு 4000 ஆண்டளவில் இருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளது.[2] இதன் மிகப்பழைய எச்சம் ஈராக்கில் உள்ள ஊர் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 3100 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது .

3500 கி.மு நான்காம் ஆயிரப் பிந்திய அரைப்பகுதியில், சக்கரம் பூட்டிய வண்டியின் தோன்றியதற்கான முதல் சான்று, மெசபடோமியாவிலும் (சுமேரிய நாகரிகம்) வட காக்காசசிலும் (மைகோப்பியப் பண்பாடு) நடுவண் ஐரோப்பாவிலும் (குக்குதேனி-திரிப்பில்லியப் பண்பாடு) கிடைத்துள்லது. எனவே சக்கரம் எங்கே எந்தப் பண்பாட்டில் முதலில் தோன்றியது என்ற கேள்விக்கான விடை தீர்க்கப்படாமலே உள்ளது.

காட்சி மேடை

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. V. Gordon Childe (1928). New Light on the Most Ancient East. p. 110.
  2. D. T. Potts (2012). A Companion to the Archaeology of the Ancient Near East. p. 285.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wheels
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Automobile wheels
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லு&oldid=2318465" இலிருந்து மீள்விக்கப்பட்டது