பேச்சு:சில்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg சில்லு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஆழி, சில்லு - இச்சொற்களை நான் உரைநடையில் எங்கும் படித்ததில்லை. இவற்றின் மூலம் அறிந்து கொள்ள ஆவல்.--Sivakumar \பேச்சு 15:49, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

சில், சில்லு என்பவை பரவலாகப் பயன்படுவதைக் கண்டுள்ளேன். ஆழி என்று எங்கும் கண்டதில்லை. --கோபி 15:51, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

சில்லு பரவலாகப் பயன்படுகிறது என்று கோபி சொல்லி உள்ளதும் எனக்கு புதிய செய்தி தான். சில்லு, ஆழி - இரண்டுக்குமே tamil lexiconல் சக்கரம் என்ற பொருள் வருகிறது. சக்கரம் தமிழ் இல்லையா??? ஆழி என்றால் கடல் என்று மட்டும் நினைத்துக் கொண்டு இருந்தேன். சக்கரம் என்பதை விட சில்லு என்பதை முதன்மைப்படுத்துவதற்கான காரணங்களை செல்வா விளக்கினால் நன்றாக இருக்கும்--ரவி 16:00, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

தேராழி (தேர் + ஆழி) என்று யாரும் கேடதில்லையா?! மனுநீதிச் சோழன் கதையிலாவது அல்லது வேறு எங்கேனும்? ஆழி என்றால் வட்டம்,, சுழற்சி. வண்டிகளில் பாதையில் ஆழ்வதாலும் ஆழி. அறவாழி என்பது தர்மச்சக்கரம் என்பது பலரும் அறிந்தது (ஆனால் தமிழ்ப்பொருள் சற்று வேறு). ஆழி என்பது கடலுக்கு இரு பொருளால் வருவது. ஆழம் நிறைந்ததால் பெருங்கடலுக்குப் பொருந்தும். உலகைச் சூழ்ந்துள்ளதால் அதற்கு ஆழி என்று பெயர். நீராழி மண்டபம் என்றால் நீரால் சூழப்பட்டுள்ள மண்டபம் (தெப்பக்குளத்தில்) என்று பொருள். பிறவாழி என்றால் பிறவி என்னும் கடல் ஆனால் பிறவி என்னும் சுழற்சி (பிறப்பு-இறப்பு என்னும் சுழற்சி). நூற்றுக்கணக்கான கலைச்சொற்களுக்கு ஆழி என்பது பயன்படும். --செல்வா 16:44, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]
ஆழி- கேள்விப் பட்டதில்லை :(. விளக்கத்திற்கு நன்றி செல்வா--Sivakumar \பேச்சு 16:46, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

நல்லதொரு சொல். விளக்கத்துக்கு நன்றி செல்வா. --கோபி 16:48, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

சில்லு என்பதைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன். சில்லு என்பது இலங்கை வழக்கு. நல்ல தமிழ்ச்சொல். இது பெரும்பாலும் சிறு வட்டத்திற்குப் பொருந்தும். ஆனால் இலங்கையின் பயன்பாடு வேறு விதமாக உள்ளது. சிறு வட்டத் துண்டு சில்லு. இது சக்கரம் என்பதற்கு இணையாக இலங்கையில் ஆள்கின்றனர். சக்கரம் என்பதும் பல இந்தோ-ஐரோப்பிய மொழிசொற்களும் தமிழ் சறுக்கு என்னும் சொல்லில் இருந்து வருவதாக மறுப்பதற்குக் கடினமான முறையில் தேவநேயப் பாவாணர் எழுதியுள்ளார். எனவே சக்கரமும் தமிழ்தான், பாவாணரின் ஆய்வுப்படி. ஒரு சொல் இந்தோ-ஐ லும் திராவிடத்திலும் இருந்தால், கண்மூடித்தனமாக திராவிடம்தான் கடன் பெற்றது என்று நினைக்கும் போக்கால் தமிழ் ஆர்வலர்கள் அத்தகு சொற்களை தவிர்க்கின்றார்கள். தமிழில் பல சொற்கள் இருக்கும் பொழுது என்ன கவலை என்பது அவர்கள் நினைப்பாக இருக்கலாம்.--செல்வா 16:56, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

செல்வா, தேராழி, அறவாழி, .நீராழி எல்லாமே கேள்விப்பட்ட சொற்கள். ஆனால், இப்படிப் பொருள் புரித்துப் புரிந்து கொண்டதில்லை. எடுத்துக்காட்டியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சக்கரம் என்ற சொல்லைக் காட்டிலும் கலைச்சொல்லாக்கத்துக்கு உதவும் என்று நினைக்கிறீர்களா? சக்கரம் தமிழ்ச் சொல்லாக இருக்கையில் அதை ஏன் முதன்மைப்படுத்தக்கூடாது? சக்கரம் என்ற சொல் பொது மக்களுக்கு இலகுவில் புரியும் தானே? --ரவி 18:40, 21 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]

சக்கரம் தமிழ் மூலம் கொண்ட வடசொல். நான் தமிழ்தான் என்றது, தமிழ் மூலம்தான் என்று இருந்திருக்க வேண்டும். சக்கரம் என்பதை முதன்மைப் படுத்தலாம். இது தென் வடிவம் இல்லை எனினும் பிற்காலத்தில் வழக்கூன்றிய ஒரு சொல். gear என்பதற்கு பற்சக்கரம் (பல்லிணை என்பது பொறியியலில் பயன்படும் சொல்) முதலான சொற்களுக்கும் பயன்படும். சறுக்கரம் என்றால் நல்ல தமிழ்வடிவமாக இருக்கும், ஆனால் இது உள்ள சொல்லுக்கு ஒரு புது வடிவம் -எடுபடுவது கடினம். சில்லு, ஆழி, சக்கரம் ஆகிய அனைத்தும் கட்டுரையினுள் இருப்பது நல்லது. சில்லு என்பது இப்பொழுது முதன்மையாக இருப்பதால் மாற்றுவது தேவை இல்லை. ஈழத்து நண்பர்கள் சில்லு என்று இருப்பதையே விரும்புவார்கள். --செல்வா 00:47, 22 மார்ச் 2007 (UTC)Reply[பதில் அளி]


"" ஆழ முகக்கினும் ஆழி முகவாது நாநாழி " என்றொரு பழம் பாடல் இருக்கிறது. ஆழி என்பது கடலைக் குறிக்கும். −முன்நிற்கும் கருத்து மாதேவன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

காட்சிமேடைக் கோப்பு அறுபட்டுள்ளது. சரிசெய்து உதவுக!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:47, 26 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சில்லு&oldid=2318769" இருந்து மீள்விக்கப்பட்டது