"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,770 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
((edited with ProveIt))
 
== வரைவிலக்கணமும், வகைபிரிப்பும் ==
கனிமம் தொடர்பான ஒரு வரையறை <ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=2–4 | isbn=978-0939950812}}</ref>. கீழ்க்காணும் வரன்முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறது.
* இயற்கையில் கிடைப்பதாக
* அறை வெப்பநிலையில் நிலையானதாக
* வேதியியல் வாய்ப்பாடால் குறிக்கப்படக்கூடியதாக
* உயிரியல் மூலம் அற்றதாக
* ஒழுங்கமைக்கப்பட்ட அணு அமைப்பைக் கொண்டதாக
 
முதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன.
ஒரு [[பதார்த்தம்]], [[திண்மம்|திண்மமாகவும்]], [[படிகம்|படிக]] அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட [[வேதியியல்]] அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய [[கனிம வேதியியல்]] பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாக கிைடக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே '''கனிமம்''' (mineral)என அழைக்கப்படுகிறது. இவ்வாறான கனிமங்களில் எந்த கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் '''தாதுக்கள்''' (ore) என அழைக்கப்படுகின்றன.<ref>{{cite book | title=Advanced Inorganic Chemistry | publisher=S. Chand Publishing | author=R. D. Madan | year=1985 | location=New Delhi | pages=753}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2301997" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி