உள்ளீடு/வெளியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 9: வரிசை 9:


== வெளி இணைப்பு ==
== வெளி இணைப்பு ==
[http://www.bbc.co.uk/guides/zx8hpv4 What are input and output devices?]
* [http://www.bbc.co.uk/guides/zx8hpv4 What are input and output devices?]


[[பகுப்பு:கணினியியல்]]
[[பகுப்பு:கணினியியல்]]

10:33, 28 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

உள்ளீடு/வெளியீடு அல்லது உ/வெ (ஆங்கிலம்: I/O) என்பது கணித்தலில் தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் (கணினி போன்றன) வெளி உலகிற்கும், அதாவது மனிதருக்கும் அல்லது வேறொரு தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் இடையிலான தகவல் தொடர்பாகும்.[1] உள்ளீடுகள் என்பவை கணினி மூலம் பெற்ற சமிக்கை அல்லது தரவுகளாகவும், வெளியீடுகள் என்பவை கணினி மூலம் அனுப்பப்பட்ட சமிக்கை அல்லது தரவுகளாகவும் உள்ளன. இப்பதமானது ஓர் உள்ளீடு அல்லது வெளியீடு செயற்பாட்டை செய்து முடிக்க செய்யப்படும் ஓர் செயலின் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது. உ/வெ கருவிகள் ஒரு நபரால் (அல்லது ஓர் கணினியால்) கணினியுடன் தகவல் பரிமாற்றத்திற்காக பாவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, விசைப்பலகை, சுட்டி ஆகியன கணினியுடனான உள்ளீட்டு கருவிகளாகவும், காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி ஆகியன வெளியீடு கருவிகளாகவும் கருத முடியும். கணினிகளுக்கடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு சில கருவிகளான இணக்கி, பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் ஆகியன உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டுக்கும் பாவிக்கக் கூடியன.

ஒரு கருவியின் செயற் தன்மையானது உள்ளீடு அல்லது வெளியீடு ஆக அது செயற்படும் தன்மையினைக் கொண்டே அமையும். மனித பாவனையாளரின் வெளியீடு பௌதீக உள்ளீட்டு நகர்வாக சுட்டி, விசைப்பலகை ஆகியவற்றால் எடுக்கப்பட்டு கணினி புரிந்து கொள்ளக் கூடிய சமிக்கையாக மாற்றப்படுகிறது. இக் கருவிகளின் வெளியீடு கணினிக்கு உள்ளீடாகும். இவ்வாறே, கணினி அச்சுப்பொறி, காட்சித்திரை ஆகியன கணினியின் வெளியீடுகளை உள்ளீடு சமிக்கைகளாக எடுக்கிறது. அவை மனித பயனாளர்கள் பார்க்கக் கூடியவாறு அல்லது வாசிக்கக் கூடியவாறு சமிக்கையை செயல் வடிவமாக மாற்றுகின்றன. ஒரு மனித பயனாளருக்கு பார்க்கும் அல்லது வாசிக்கும் செயல்முறையின் இச் செயல் வடிவம் பெற்றுக் கொள்ளும் உள்ளீடு ஆகவுள்ளது. கணினிக்கும் மனிதர்களுக்குமிடையிலான இச் செயற்பாடு மனித-கணினி இடையூடாட்டம் என ஒரு களமாக கற்பிக்கப்படுகிறது.

கணினி அமைப்பில் மையச் செயற்பகுயினதும் பிரதான நினைவகத்தினதும் இணைப்பு கணினியின் மூளை என கருதப்படுகிறது. ஆகவே, அங்கிருந்து பறிமாறப்படும் தகவல் உள்ளீடு/வெளியீடு எனப்படும்.

உசாத்துணை

  1. "Input/output device". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளீடு/வெளியீடு&oldid=2029798" இலிருந்து மீள்விக்கப்பட்டது