கல்லீரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: km:ថ្លើម
சி தானியங்கி: 122 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 28: வரிசை 28:
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:சமிபாட்டுத்தொகுதி]]
[[பகுப்பு:சமிபாட்டுத்தொகுதி]]

[[af:Lewer]]
[[am:ጉበት]]
[[an:Figado]]
[[ang:Lifere]]
[[ar:كبد]]
[[arc:ܟܒܕܐ]]
[[ast:Fégadu]]
[[av:ТӀул]]
[[ay:K'iwcha]]
[[az:Qaraciyər]]
[[be:Печань]]
[[be-x-old:Печань]]
[[bg:Черен дроб]]
[[bn:যকৃৎ]]
[[br:Avu]]
[[bs:Jetra]]
[[ca:Fetge]]
[[ckb:جەرگ]]
[[cs:Játra]]
[[cv:Пĕвер]]
[[cy:Afu]]
[[da:Lever]]
[[de:Leber]]
[[diq:Kezebe]]
[[dv:ފުރަމޭ]]
[[el:Ήπαρ]]
[[en:Liver]]
[[eo:Hepato]]
[[es:Hígado]]
[[et:Maks]]
[[eu:Gibel]]
[[fa:کبد]]
[[fi:Maksa]]
[[fr:Foie]]
[[ga:Ae]]
[[gd:Àdha]]
[[gl:Fígado]]
[[hak:Kôn-tshóng]]
[[he:כבד]]
[[hi:यकृत]]
[[hr:Jetra]]
[[ht:Fwa]]
[[hu:Máj]]
[[hy:Լյարդ]]
[[id:Hati]]
[[io:Hepato]]
[[is:Lifur]]
[[it:Fegato]]
[[ja:肝臓]]
[[jv:Ati]]
[[ka:ღვიძლი]]
[[kk:Бауыр (орган)]]
[[km:ថ្លើម]]
[[kn:ಯಕೃತ್ತು]]
[[ko:간]]
[[ku:Kezeb]]
[[la:Iecur]]
[[lbe:ТтиликӀ]]
[[lez:Лекь (анатомия)]]
[[lmo:Fídech]]
[[ln:Libale]]
[[lt:Kepenys]]
[[lv:Aknas]]
[[mhr:Мокш]]
[[mk:Црн дроб]]
[[ml:കരൾ]]
[[mn:Элэг]]
[[mr:यकृत]]
[[ms:Hati]]
[[mt:Fwied]]
[[my:အသည်း]]
[[nah:Ēltapachtli]]
[[nds:Lebber]]
[[new:सें]]
[[nl:Lever]]
[[nn:Lever]]
[[no:Lever]]
[[oc:Fetge]]
[[om:Tiruu]]
[[or:ଯକୃତ]]
[[pag:Altey]]
[[pam:Ate]]
[[pl:Wątroba]]
[[pnb:کلیجہ]]
[[ps:اينه]]
[[pt:Fígado]]
[[qu:Kukupin]]
[[ro:Ficat]]
[[ru:Печень]]
[[rue:Печунка]]
[[sa:यकृत्]]
[[sah:Быар]]
[[scn:Fìcatu]]
[[sh:Jetra]]
[[simple:Liver]]
[[sk:Pečeň]]
[[sl:Jetra]]
[[sn:Chitaka]]
[[so:Beer (xubin)]]
[[sq:Mëlçia]]
[[sr:Јетра]]
[[su:Ati]]
[[sv:Lever]]
[[sw:Ini]]
[[te:కాలేయం]]
[[tg:Ҷигар]]
[[th:ตับ]]
[[tk:Bagyr]]
[[tl:Atay]]
[[tr:Karaciğer]]
[[ug:جىگەر]]
[[uk:Печінка]]
[[ur:جگر]]
[[vec:Figà]]
[[vi:Gan]]
[[wa:Foete]]
[[war:Atay]]
[[yi:לעבער]]
[[za:Daep]]
[[zh:肝臟]]
[[zh-min-nan:Koaⁿ]]
[[zh-yue:肝]]

18:31, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கல்லீரல்
கல்லீரல்
கல்லீரல் மார்பு எலும்புக்கூட்டிற்குள் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு

கல்லீரல் (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலத்தே இரைப்பைக்கு அருகில் இருக்கும் ஓர் உறுப்பு. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் தோலுக்கு அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.

கல்லீரல் சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய கிளைக்கொஜனைச் சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் பித்தநீரை உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களைச் சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.

மாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு. கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று கருதுவது பொருந்தும். கல்லீரல் செரித்த உணவை இரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது.

மீளுருவாக்கம்

கல்லீரல், தான் இழந்த (கெட்டுப் போன அல்லது சிதைந்த) திசுக்களைத் தானே மீளுருவாக்ககூடிய ஓர் உள்ளுறுப்பு. இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது. சிலவகையான ஸ்டெம்செல் (வித்துக்கண்ணறைகள் அல்லது வித்துசெல்கள்) இவ்வுறுப்பில் காணப்படுகின்றது.

கல்லீரலின் செயல்பாடுகள்

மனிதர்களின் உடல்கள் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிக்கிறது. பித்தநீர் சுரக்கவும், இரும்பு மற்றும் உயிர்ச்சத்துக்களைத் தேக்கி வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும் இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும் நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.

கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் காமாலை நோய் உண்டாகும்.

கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு உணவைச் செரிக்க உதவும். பித்தநீர் பித்தநீர்ப்பையிலும் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தநீர்ப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும்.

கல்லீரல் நோய்கள்

இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. இவற்றையும் பார்க்க: கல்லீரல் அழற்சி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி, கல்லீரல்நோய் மூளைக்கோளாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லீரல்&oldid=1348956" இலிருந்து மீள்விக்கப்பட்டது