இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vep:Oza மாற்றல்: da:Lykke
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: kk:Бақыт
வரிசை 55: வரிசை 55:
[[ja:幸福]]
[[ja:幸福]]
[[ka:ბედნიერება]]
[[ka:ბედნიერება]]
[[kk:Бақыт]]
[[ko:행복]]
[[ko:행복]]
[[ky:Бакыт (философиялык түшүнүк)]]
[[ky:Бакыт (философиялык түшүнүк)]]

22:05, 6 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இன்பம் வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பம் என்பதை இறுதியாக வரையறை செய்வது கடினம் எனினும் இன்பத்தைக் கண்டுணரலாம்.


மழலையின் பேச்சில், இசையின் இனிமையில், காற்றின் வருடலில், மழையில் நனைதலில், கூழின் ருசியில், இயற்கையில், நட்பில், காதலில், உழைப்பில் என வாழ்வின் பல தடங்களில் இன்பத்தை மனிதர் உணரலாம். சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்." என சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.


மேலும் அவர் "பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது" என்று சுட்டி காட்டுகிறார்.[1] தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. சோ.ந.கந்தசாமி. (2004). இந்தியத் தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். பக்கம் 43.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பம்&oldid=1272585" இலிருந்து மீள்விக்கப்பட்டது