சிமு லியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமு லியு
Simu Liu speaking at the San Diego Comic-Con International in 2019
தாய்மொழியில் பெயர்劉思慕
பிறப்பு19 ஏப்ரல் 1989 (1989-04-19) (அகவை 33)
ஜொகூர், மலேசியா
குடியுரிமைகனடியன் [1]
பணிநடிகர், சண்டை பயிற்சியாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

சிமு லியு[2] (ஆங்கில மொழி: Simu Liu) (பிறப்பு:19 ஏப்ரல் 1989) என்பவர் கனடா நாட்டு நடிகர், சண்டை பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 2021 இல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்து வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'சாங்க் சி'[3][4] என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[5][6] இவர் பிளட் அண்ட் வாட்டர் (2015), கிம்'ஸ் காணவேணியின்ஸ் (2016-2021)[7] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

லியு 19 ஏப்ரல் 1989 இல் மலேசியா நாட்டில் ஜோகூரில் பிறந்தார் மற்றும் அவரது வாழ்க்கையின் முதல் நான்கு வயது வரை அவரது தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்ட பின்னர் ஐந்து வயதில் கனடா நாட்டிற்கு குடியேறினார்.[8] அதை தொடர்ந்து ஒன்ராறியோவின் மிசிசாகா பகுதியில் உள்ள எரின் மில்ஸில் ஒரே குழந்தையாக வளர்ந்தார்.

இவர் தனது உயர்நிலைப் பள்ளியை டொராண்டோ பல்கலைக்கழகப் பள்ளிகளில் பயின்றார் மற்றும் மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் ஐவி வணிகப் பள்ளியில் வணிக நிர்வாகத்தைப் பயின்று 2011 இல் பட்டம் பெற்றார்.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Simu Liu [SimuLiu] (20 January 2017). "I'm a Canadian citizen. I'm good" (Tweet). 20 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. Despite some sources that give "Nora Lum Ying", Awkwafina said in 2018 it is simply "Nora Lum". Awkafina [awkwafina] (June 19, 2018). "MY FULL NAME IS👏NORA👏LUM👏 NOT NORA LUM... YING" (Tweet). January 6, 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 16, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. Worgaftik, Gabe (22 July 2019). "Shang-Chi star Simu Liu asked Marvel about playing Shang-Chi on Twitter 8 months ago". AV Club.
  4. "Simu Liu – Academy.ca". Academy.ca. 22 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. Sandra Gonzalez. "Marvel's latest leading man Simu Liu will soon be a 'household name'". CNN. 21 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
  6. Smith, Neil (22 July 2019). "Marvel Phase 4: A new era for diversity in Hollywood?". BBC.
  7. "Kim's Convenience – CBC Media Centre". Canadian Broadcasting Corporation. 29 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. Clay, Chris (27 October 2016). "Mississauga-raised actor stars in Kim's Convenience, lands role in NBC's Taken". Mississauga News (Mississauga ON). http://www.mississauga.com/whatson-story/6932846-mississauga-raised-actor-stars-in-kim-s-convenience-lands-role-in-nbc-s-taken/. 
  9. "KollabCast Episode 144 – Simu's Convenience w/ Simu Liu". Kollaboration. 2 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
  10. Lee, Traci G. (31 August 2018). "'Kim's Convenience' actor Simu Liu on being an accountant, his big break, and 'Crazy Rich Asians' momentum". NBC News. 23 August 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமு_லியு&oldid=3302258" இருந்து மீள்விக்கப்பட்டது