சிப்ரினஸ் கார்பியோ கார்பியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்ரினஸ் கார்பியோ கார்பியோ
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சி . கார்பியோ
இருசொற் பெயரீடு
சிப்ரினஸ் கார்பியோ
லின்னேயஸ், 1758

சிப்ரினஸ்  கார்பியோ கார்பியோ (Cyprinus carpio carpio) என்பது ஐரோப்பாவில் பொதுவாகக் காணப்படும் பொதுவான கெண்டை மீன் வகையின் ஒரு துணையினமாகும். இவை ஐரோப்பாவின் பெரும்பகுதியை (குறிப்பாக தன்யூபு ஆறு மற்றும் வோல்கா ஆறு ) தாயகமாகக் கொண்டவை. காக்கேசியா மற்றும் மத்திய ஆசியாவிலும் காணப்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ ஆய்வில் சி. கார்பியோ கார்பியோ மற்றும் சி. ருப்ரோபசுகசு இடையே வேறுபாடு காணப்படுகிறது.[1] இவை ஓர் அனைத்துண்ணி. வகையின. மெல்லுடலிகள் , பூச்சிகள், ஓடுடைய காணுக்காலிகள் மற்றும் விதைகளை உணவாக உண்கின்றன.[2] இருண்ட நிறத்திலிருந்தாலும், சில காட்டுப்பகுதியில் பிடிக்கப்பட்ட மாதிரிகள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளன (சில வளர்க்கப்பட்ட மீன்கள் ஆறுகளில் வெளியிடப்படுகின்றன). இந்த துணையினம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஐரோப்பிய குளங்களில் வளர்க்கப்படுகிறது.[3] பெரும்பாலான அமெரிக்க மாநிலங்களில் இவை இயற்கையான இனமாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zhou, Jian Feng; Wu, Qing Jiang; Ye, Yu Zhen; Tong, Jin Gou (2003). "Genetic divergence between Cyprinus carpio carpio and Cyprinus carpio haematopterus as assessed by mitochondrial DNA analysis, with emphasis on origin of European domestic carp". Genetica 119 (1): 93–7. doi:10.1023/A:1024421001015. பப்மெட்:12903751. https://www.researchgate.net/publication/10625153. பார்த்த நாள்: 3 March 2017. 
  2. "Common carp (Cyprinus carpio carpio) - Aquatic Invasive Species | Washington Department of Fish & Wildlife". wdfw.wa.gov. Washington Department of Fish and Wildlife. Archived from the original on 3 March 2017. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017.
  3. Tsipas, George; Tsiamis, George; Vidalis, Kosmas; Bourtzis, Kostas (13 November 2008). "Genetic differentiation among Greek lake populations of Carassius gibelio and Cyprinus carpio carpio". Genetica 136 (3): 491–500. doi:10.1007/s10709-008-9331-1. பப்மெட்:19005765.