சிப்கி லா கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிப்கி லா
Shipki La
ஏற்றம்5,669 மீ (18,599 அடி)
Traversed byதேசிய நெடுஞ்சாலை 5
அமைவிடம்சீனாஇந்தியா எல்லை
ஆள்கூறுகள்31°49′N 78°45′E / 31.817°N 78.750°E / 31.817; 78.750ஆள்கூறுகள்: 31°49′N 78°45′E / 31.817°N 78.750°E / 31.817; 78.750

சிப்கி லா கணவாய் (Shipki La) இந்திய-சீனா எல்லையில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். இங்கு பன்னிரண்டு கட்டிடங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உயரங்களில் அமைந்துள்ளன. இந்த கணவாய்க்கு அருகிலுள்ள வழியாகத்தான் லாங்கன் சாங்போ என திபெத்தியர்களால் அழைக்கப்படும் சத்லச் ஆறு இந்தியாவிற்குள் நுழைகிறது. இக்கணவாய் பண்டைய பட்டுச்சாலையின் ஒரு கிளை பாதையாக கருதப்படுகிறது [1]. இது உலகிலேயே பயணம் செய்யத்தக்க உயரமான கணவாய்களில் ஒன்றாக இருக்கும் இதன் உயரம் 5669 மீட்டர் (18,599 அடி) களாகும்.

இக்கணவாய் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் கின்னௌர் மாவட்டம், மற்றும் சீனாவின் திபெத்தில் அமைந்துள்ளது. சிக்கிமிலுள்ள நத்து லா மலைக் கணவாய் மற்றும் உத்தரகாண்டின் லிபு லேக் கணவாய் ஆகியவற்றுடன் சேர்ந்து திபெத்துடனான வணிகத்திற்கு இரண்டாவது எல்லை மையமாக இக்கணவாய் திகழ்கிறது. மேலும் காப் நகருக்கு மிக அருகிலும் இந்த கணவாய் உள்ளது.

தற்பொழுது இந்த கணவாய் சிறிய அளவிளான எல்லை கடந்த வணிகத்திற்கு மட்டும் பயன்பட்டு வருகிறது [2]. மற்ற எல்லை கணவாய்களை போல இந்த கணவாயும் வசிப்பவர் அல்லாதோருக்கு திறக்கப்படுவதில்லை [3]. சாலை வழியாக இந்தியா மற்றும் திபெத்திற்கு இடையே பயணம் செய்பவர்கள் நேபாளம் வழியாக பயணிக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா), சிப்கி லா நோக்கி செல்லும் சாலை

சீன - இந்தியா வாணிபம்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 5 பாதையைப் பயன்படுத்தி நிலத்தின் வழியாக அரபிக் கடலை அடையலாம் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் காரகோரம் நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து மிகவும் கடினமாக இருக்கும். சிப்கிலாவிலுள்ள எல்லையை திறந்தால் இரு பக்க எல்லையிலும் வாணிபத்தின் மதிப்பு அதிகளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது [1][4].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "India-China trade through Shipki La reaches new high". பார்த்த நாள் 9 June 2017.
  2. http://www.hindustantimes.com/India-news/HimachalPradesh/Chinese-horses-Bought-for-peanuts-sold-at-a-premium/Article1-777475.aspx
  3. "Shipki La". www.dangerousroads.org. பார்த்த நாள் 18 August 2017.
  4. "India-China Bhai Bhai revisited - India Global News - IBNLive". Ibnlive.in.com. பார்த்த நாள் 2011-12-14.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்கி_லா_கணவாய்&oldid=2975114" இருந்து மீள்விக்கப்பட்டது