சின்னகொத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சின்னகொத்தூர் என்பது கிருட்டிணகிரி மாவட்டத்தின் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கிராமமாகும். இதன் பழைய பெயர் குந்தாணி ஆகும். [1]

குந்தாணி வரலாறு[தொகு]

குந்தாணியாது ஒரு காலத்தில் போசளப் பேரரசின் தலைநகராக இருந்தது. 800 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசு வலுவிழந்த நிலையில் இருந்தபோது, கர்நாடகத்தில் ஆண்டுவந்த போசளர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். சோழப் பேரரசுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் பெரும்படையுடன் போசளர்கள் நுழைந்தனர். சோழ மன்னன் மூன்றாம் இராசராசனுக்கு உதவியாக வந்தவர்கள் பாண்டியனையும் அவனுக்கு துணையாக வந்த சிற்றரசர்களையும் விரட்டினர். இன்றைய சமயபுரமும் அன்றைய கண்ணணூர் கொப்பத்தில் சோழன் தன் தலை நகரை மாற்றினான். இந்நிலையில் மூன்றாம் இராசராசச் சோழனை கோப்பெருஞ்சிங்கன் என்ற சிற்றரசன் சிறைவைத்தான். சோழனை மீட்க போசளர்கள் சமயபுரத்தையே தங்களின் இன்னொரு தலைநகராக ஆக்கிக்கொண்டு தங்கினர். போசள மன்னன் வீர சோமேசுவரனின் காலத்தில் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு தமிழகப் பகுதி வீரராமநாதனின் வசமும் கர்நாகடப் பகுதி மூன்றாம் நரசிம்மன் வசமும் சென்றன. இதன் பிறகு பாண்டியன் மாறவர்மனிடம் தன் பகுதிகளை இழந்த வீரராமநாதன் சமயபுரத்தைக் கைவிட்டு கிருட்டிணகிரிமாவட்டத்தில் உள்ள சின்ன கொத்தூரை தன் தலைநகராக ஆக்கிக்கொண்டு ஆண்டான். அதன்பிறகு அவன் மகன் வீர விசுவநாதன் ஐம்பது ஆண்டுகள் இங்கிருந்து ஆண்டான். இந்த ஊரில் போசளர்களின் கோட்டை, அவர்கள் கட்டிய கோயில்கள் போன்றவற்றின் இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு". செய்தி. தினமணி (2016 நவம்பர் 27). பார்த்த நாள் 18 சூன் 2017.
  2. "அழிவின் விளிம்பில் ஒய்சாள அரண்மனை மண்டபம்: சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை". செய்தி. தினமலர் (2017 சனவரி 17). பார்த்த நாள் 18 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னகொத்தூர்&oldid=2308082" இருந்து மீள்விக்கப்பட்டது