வீர சோமேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீர சோமேசுவரன் ( கன்னடத்தில் : ವೀರ ಸೋಮೇಶ್ವರ) (ஆட்சிக்காலம் 1235-1254) என்பவன் ஒரு போசாளப் பேரரசின் மன்னனாவான். தமிழ் நாட்டு விவகாரங்களில் இரண்டாம் வீர நரசிம்மன் அதிக கவனம் செலுத்தி, வடக்கு பிரதேசங்களைப் புறக்கணித்ததின் விளைவாக, யாதவர்களின் படைகளிடம் துங்கபத்திரை ஆற்றுப் பகுதிகளில் சில பகுதிகளை இவன் இழக்க வேண்டியிருந்தது.

தமிழ் நாட்டில் அரசியலில் செல்வாக்கு[தொகு]

கி.பி.1225-1250 காலப்பகுதியில் போசாளர்கள் சோழர்கள், பாண்டியர்கள் மீது தமது செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொண்டனர். மகதி மண்டலத்தில் சில பகுதிகளை வீர சோமேசுவரன் 1236-இல் கைப்பற்றினான்.

மேற்கோள்[தொகு]

Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041 K.A. Nilakanta Sastri, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, New Delhi (Reprinted 2002), ISBN 0-19-560686-8

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_சோமேசுவரன்&oldid=2698621" இருந்து மீள்விக்கப்பட்டது