சித்ரா விசித்ரா கண்காட்சி

ஆள்கூறுகள்: 24°20′45″N 73°07′35″E / 24.345828°N 73.126276°E / 24.345828; 73.126276
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா விசித்ரா கண்காட்சி
Chitra Vichitra Mela
சித்ரா விசித்ரா கண்காட்சிக்கு வந்தவர்
வகைபண்பாடு மற்றும் மத விழா
நாட்கள்மார்ச் அல்லது ஏப்ரல்l (ஹோலிக்குப் பின்னர் 2 வாரங்களில்[1]
தொடக்கம்31 மார்ச் 2023
முடிவு1 ஏப்ரல் 2023
காலப்பகுதிவருடாந்திர
அமைவிடம்(கள்)குனபான்காரி, சபர்கந்தா மாவட்டம், குசராத்து
ஆள்கூறுகள்24°20′45″N 73°07′35″E / 24.345828°N 73.126276°E / 24.345828; 73.126276
நாடுஇந்தியா
வருகைப்பதிவு60,000[2]

சித்ரா விசித்ரா கண்காட்சி என்பது இந்தியாவின் குஜராத்தில் வடக்குப் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் பழங்குடியினர் கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சி கடந்த ஆண்டில் ஓர் உறுப்பினரை இழந்த குடும்பங்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் நிகழ்வாகும்.[3][4] இந்த கண்காட்சிக்கு சுமார் 60,000 பார்வையாளர்கள் வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் குசராத்து மற்றும் இராசத்தான் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர்.

இந்தக் கண்காட்சி குசராத்து-இராசத்தான் எல்லைக்கு அருகில், குசராத்து மாநிலம், சபர்கந்தா மாவட்டம், போஷினா வட்டத்தின் குன்பன்காரி கிராமத்தில் நடைபெறுகிறது.[5] இக்கண்காட்சி நடைபெறும் இடம் வாகல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் சபர்மதி, வாகல் மற்றும் ஆகல் ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிப்பதால் இந்த இடம் புனிதமாகக் கருதப்படுகிறது.

கிரெகொரியின் நாட்காட்டியில் பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும் ஹோலி பண்டிகையைத் தொடர்ந்து வரும் அமாவாசை முதல் இரண்டு நாட்களில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. [6] அமாவாசைக்கு முன்னதாக, குடும்பங்கள் தங்கள் பிரிந்த குடும்ப உறுப்பினர்களின் சாம்பலை ஆற்றில் கரைத்து, இரவு முழுவதும் துக்கம் அனுசரித்து, திருவிழாவினைத் தொடங்குகின்றனர்.[3][7] அடுத்த நாள், இந்த இடத்தில் ஒரு கண்காட்சி நடைபெறுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bradnock, Robert; Bradnock, Roma (1999). Footprint India Handbook 2000. Bath: Footprint Handbooks. https://archive.org/details/isbn_9781900949415. 
  2. District Census Handbook Sabarkantha Part XII-B. Directorate of Census Operations. 2011. http://censusindia.gov.in/2011census/dchb/2405_PART_B_DCHB_SABAR%20KANTHA.pdf. 
  3. 3.0 3.1 . 15 May 1994. 
  4. . 5 April 2019. 
  5. . 9 March 2018. 
  6. Kumvare desa ke adivasi. 1989. 
  7. 7.0 7.1 Desai, Anjali, தொகுப்பாசிரியர் (2007). India Guide Gujarat (1st ). India Guide Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780978951702. https://books.google.com/books?id=gZRLGZNZEoEC. பார்த்த நாள்: 6 April 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]