சித்ரானிபா சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரானிபா சௌத்ரி
பிறப்புநிபானானி போசு
27 நவம்பர், 1912
சியாகுஞ்சே, பிரித்தானிய இந்தியா
இறப்பு9 நவம்பர் 1999(1999-11-09) (அகவை 85)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்கலா பவனா
விசுவ பாரதி பல்கலைக்கழகம்
பணிஓவியர்
பெற்றோர்மருத்துவர் பகாபன் சந்திரா போசு
சரத்குமாரி தேவி
வாழ்க்கைத்
துணை
நிரஞ்சன் சுவுத்ரி
பிள்ளைகள்சித்ரலேகா சவுதிர்
ரனாசித் சவுத்ரி

சித்ரனிபா சௌத்ரி (Chitranibha Chowdhury 27 நவம்பர் 1913 - 9 நவம்பர் 1999) இருபதாம் நூற்றாண்டின் இந்தியக் கலைஞர், வங்காளக் கலைப் பள்ளியின் உறுப்பினர் மற்றும் வங்காளத்தின் முதல் பெண் ஓவியர்களில் ஒருவராவார். இயற்கைக் காட்சிகள், நிலைப்படம், அலங்காரக் கலை, சுவரோவியங்கள் மற்றும் உருவப்படங்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை இவர் உருவாக்கினார். நந்தலால் போசின் மாணவரும் மற்றும் சாந்திநிகேதன் கோலபாபனின் முதல் பெண் ஓவிய ஆசிரியரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தற்போதைய மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள சியாகுஞ்சே என்ற இடத்தில் சரத்குமாரி தேவி மற்றும் மருத்துவர் பகபன் சந்திர போசு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இளமைப் பருவத்தில், இவரது குடும்பம் கோமோவிற்கும் பின்னர் சந்த்பூருக்கும் இடம்பெயர்ந்தது. அங்கு, 1927 இல், பதினான்கு வயதில், நவகாளி மாவட்டம் உயர் படித்த மற்றும் பண்பட்ட ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்த மோனோரஞ்சன் சௌத்ரி தனது இளைய சகோதரரான நிரஞ்சன் சவுத்ரியை மணக்க ஏற்பாடு செய்தார். [1] [2] [3]

சாந்திநிகேதனில் வாழ்க்கை[தொகு]

கலா பவனாவில் உள்ள காலோ பாரி

1928 ஆம் ஆண்டில், இவரது மாமியார் தனது கணவருடன் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு இவரை அனுப்பினார். பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் தலைவருமான இரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடமான கலா பவனாவில் ஓவியம் மற்றும் இசையைக் கற்க நந்தலால் போஸ் மற்றும் தினேந்திரநாத் தாகூர் ஆகியோரிடம் அனுப்பினார். இவர் இரவீந்திரஸ்மிருதி என்ற தலைப்பில் ஒரு நூலினை எழுதினார், இது ரவீந்திரநாத் தாகூர் தனது கலை வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முழுவதும் எவ்வாறு ஆதாரமாக இருந்தார் என்பது குறித்து இருந்தது. [4]

நந்தலால் போசின் மேற்பார்வையில் சித்ரானிபா சௌத்ரியின் கலைப் பயிற்சி ஐந்தாண்டுகள் தொடர்ந்தது. இந்த சமயத்தில் இராம்கிங்கர் பைஜ் மற்றும் பிறருடன் இணைந்து கலா பவனாவில் பிரபலமான கலோ பாரி (கருப்பு மாளிகை) கட்டுமானத்தில் பங்கேற்றார்.[2] சாந்திநிகேதனுக்கு வருபவர்களின் உருவப்படங்களை வரைவதற்கு இவர் சிறப்பு அனுமதி பெற்றார் - இதில் மகாத்மா காந்தி, ஹசாரி பிரசாத் த்விவேதி, சி. ராஜகோபாலாச்சாரி, பிதான் சந்திர ராய், கான் அப்துல் கஃபர் கான், நீல்ஸ் போர் மற்றும் சரோஜினி நாயுடு போன்ற இந்திய அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றின் பல முக்கிய பிரமுகர்கள் அடங்குவர். இவரது படைப்புகள் கலை விமர்சகர்களால் பாராட்டப்பட்டார்.[4] [5] [6] [7] ஜெயஸ்ரீ இதழில் அவரது படைப்புகளின் பகுதிகள் வெளியிடப்பட்டன.[8] 1934 இல் கலா பவனாவில் தனது முறையான பயிற்சியை முடித்த பிறகு, ரவீந்திரநாத் தாகூரின் விருப்பப்படி 1935 இல் முதல் பெண் பேராசிரியராக ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[சான்று தேவை]

சான்றுகள்[தொகு]

  1. Haq, Fayza. "The first woman painter of Bangladesh" (in en). https://www.thedailystar.net/the-first-woman-painter-of-bangladesh-3217. 
  2. 2.0 2.1 Ghosh, Chilka. "Kalabhavan Veteran: Chitranibha" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
  3. Roy, Aparna Baliga (2015). The Women Artist of Early 20th Century Bengal, their Spaces of Visibility, Contributions and the Indigenous Modernism (PhD). Maharaja Sayajirao University of Baroda. p. 216-219. hdl:10603/133152.
  4. 4.0 4.1 Chowdhury, Chitranibha. Rabindrasmriti. 
  5. Hussain, Nisara. Kaliokalam https://www.kaliokalam.com/চিত্রনিভা-চৌধুরী-কাছে-যব/. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. The Statesman. 20 March 1976. 
  7. Amrita Bazar Patrika. 25 February 1982. 
  8. Roy, Aparna Baliga (2015). The Women Artist of Early 20th Century Bengal, their Spaces of Visibility, Contributions and the Indigenous Modernism (PhD). Maharaja Sayajirao University of Baroda. p. 216-219. hdl:10603/133152.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரானிபா_சௌத்ரி&oldid=3821867" இலிருந்து மீள்விக்கப்பட்டது