சித்த லால் முர்மு
Appearance
சித்த லால் முர்மு Sidha Lal Murmu | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | மன்மோகன் துடு |
பின்னவர் | பாகே கோபர்தன் |
தொகுதி | மயூர்பஞ்சு, நாடாளுமன்றத் தொகுதி, ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தாந்போசு கிராமம், ரைரங்பூர் தாலுக்கா, மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 1 நவம்பர் 1935
இறப்பு | 4 சூன் 1999 | (அகவை 63)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ருக்குமணி முர்மு |
மூலம்: [1] |
சித்த லால் முர்மு (Sidha Lal Murmu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளில் ஒடிசாவின் ரைரங்பூர் தாலுக்காவில் உள்ள தாந்போசு கிராமத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ரகுநாத் முர்மு என்பதாகும். சித்த லால் முர்முவின் மனைவியின் பெயர் ருக்மணி முர்முவாகும். இளங்கலை படித்த இவர் சட்டப் பாடத்திலும் பட்டம் பெற்றார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சித்தலால் முர்மு ஒடிசா அரசியலில் காங்கிரசு, இந்திய தேசிய காங்கிரசு மற்றும் சார்க்கண்ட்டு விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளில் உறுப்பினராக இருந்துள்ளார். ஒடிசா சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1999. p. 15. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
- ↑ Sir Stanley Reed (1983). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 881. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
- ↑ India. Parliament. Lok Sabha (1989). Lok Sabha Members. Lok Sabha Secretariat. p. 107. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
- ↑ "Lok Sabha Debates References Made To The Passing Away". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.