உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திவேனி ரபுக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திவேனி ரபுக்கா
Sitiveni Rabuka
2020 இல் ரபுக்கா
பிஜி பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 திசம்பர் 2022
குடியரசுத் தலைவர்விலியம் கத்தோனிவேரே
முன்னையவர்பிராங்க் பைனிமராமா
பதவியில்
2 சூன் 1992 – 19 மே 1999
முன்னையவர்கமிசேசி மாரா
பின்னவர்மகேந்திர சவுத்திரி
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
26 நவம்பர் 2018 – 7 திசம்பர் 2020
பிரதமர்பிராங்க் பைனிமராமா
முன்னையவர்தெய்மூமு கெப்பா
பின்னவர்நைக்காமா லலபலாவு
பிஜி இராணுவப் படைகளின் தளபதி
பதவியில்
1987–1992
சக்கோடிரோவ் மாகாண சபைத் தலைவர்
பதவியில்
24 மே 2001 – 2008
சமூக சனநாயக தாராண்மைவாதக் கட்சித் தலைவர்
பதவியில்
24 சூன் 2016 – 28 நவம்பர் 2020
முன்னையவர்தெய்மூமு கெப்பா
பின்னவர்விலியம் கவோக்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 செப்டம்பர் 1948 (1948-09-13) (அகவை 75)
கேக்காவ்துரோவ், பிஜி
அரசியல் கட்சிமக்கள் கூட்டணி (2021 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
  • சொக்கோசொக்கோ கட்சி (1991–2006)
  • சமூக சனநாயக லிபரல் கட்சி (2014–2015; 2016–2020)
துணைவர்சுலுவெத்தி துய்லோமா (தி. 10 ஏப்ரல் 1975)
புனைப்பெயர்கள்
  • இசுட்டீவ்[1]
  • ரம்போ[2]
Military service
பற்றிணைப்பு
கிளை/சேவைபிஜி இராணுவம்
சேவை ஆண்டுகள்1968–1991
தரம்மேஜர் செனரல்
கட்டளைபிஜி படைப்பிரிவு
போர்கள்/யுத்தங்கள்லெபனான் உள்நாட்டுப் போர்
விருதுகள்செவாலியே விருது (பிரான்சு)

சித்திவேனி லிகமமாடா ரபுக்கா (Sitiveni Ligamamada Rabuka[3]; பிறப்பு: 13 செப்டம்பர் 1948) பிஜி அரசியல்வாதி ஆவார். இவர் 2022 திசம்பர் 24 முதல் பிஜியின் பிரதமராகப் பதவியில் உள்ளார்.[4] இவர் 1987 இல் இரண்டு முறை இராணுவப் புரட்சிகளைத் தூண்டினார். பிஜியின் பிரதமராக 1992 முதல் 1999 வரை பதவியில் இருந்த இவர் 2022 முதல் மூன்று கட்சிக் கூட்டணிக்குத் தலைமையேற்று மீண்டும் பிரதமரானார். இவர் 1999 முதல் 2001 வரை இராணுவத் தளபதிகளின் பேரவைக்குத் தலைவராக இருந்துள்ளார். பின்னர் 2001 முதல் 2008 வரை கேக்காவ்துரோவ் மாகாணசபையின் தலைவராக இருந்துள்ளார்.

ரபுக்கா 2016 இல் எதிர்க்கட்சித் தலைவரான ரோ தெய்முமு கெப்பாவுக்குப் பிறகு, சமூக சனநாயக லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2018 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, 2018 இல் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ரபுக்கா நியமிக்கப்பட்டார்.[6] 2020 நவம்பரில் இவர் லிபரல் கட்சித் தலைவர் போட்டியில் விலியம் கவோக்காவிடம் தோல்வி அடைந்ததை அடுத்து தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[7] அதைத் தொடர்ந்து ரபுக்கா பிஜியில் நல்லிணக்கம், முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையை உருவாக்க பிஜித் தலைவர்கள் எடுக்கும் இருதரப்பு அணுகுமுறைக்கு தான் இனி தடையாக இருக்க மாட்டார் எனக் கூறி, நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகினார்.[8] தொடர்ந்து 2022 தேர்தலில் போட்டியிட, மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.[9]

2022 தேர்தலைத் தொடர்ந்து ரபுக்காவின் மக்கள் கூட்டணி இரண்டாவது பெரிய கட்சியாக உருவானது, அத்துடன் 16 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பிராங்க் பைனிமராமாவை வெற்றிகரமாக வெளியேற்றி, லிபரல் கட்சி, தேசிய கூட்டமைப்பு கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ரபுக்கா தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்க்கப்பட்டது. ரபுக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார்.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Transparency Lessons for the US from Fiji". 22 December 2022.
  2. "Sitiveni 'Rambo' Rabuka confirmed as Fiji's new prime minister".
  3. Howell, Bronwyn (22 December 2022). "Electoral Transparency Lessons for the US from Fiji". AEI. https://www.aei.org/technology-and-innovation/electoral-transparency-lessons-for-the-us-from-fiji/. 
  4. "Fiji parliament confirms Sitiveni Rabuka as prime minister after days of uncertainty". The Guardian. 24 December 2022.
  5. "Sitiveni Rabuka wins leadership of Fiji's SODELPA". RNZ International. 24 June 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.
  6. "Rabuka named as Fiji opposition leader". RNZ International. 26 November 2018. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018.
  7. "Fiji's main opposition party chooses a new leader". RNZ. 27 November 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2020.
  8. "Rabuka resigns from Parliament". 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
  9. Nacei, Luke (10 December 2020). "Rabuka forming new party". FijiTimes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 December 2022.
  10. Needham, Kirsty (20 December 2022). "Fiji has new government after three parties form coalition" (in en). Reuters. https://www.reuters.com/world/asia-pacific/fiji-has-new-government-after-three-opposition-parties-form-coalition-2022-12-20/. 
  11. "Sitiveni Rabuka is Fiji's new prime minister". RNZ. 24 December 2022 இம் மூலத்தில் இருந்து 24 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20221224042426/https://www.rnz.co.nz/international/pacific-news/481392/sitiveni-rabuka-is-fiji-s-new-prime-minister. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திவேனி_ரபுக்கா&oldid=3790030" இலிருந்து மீள்விக்கப்பட்டது