உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தர்கோயில் (sitherkovil), சேலம் மாவட்டம் கஞ்சமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்[1]. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் சித்தர்கோயில் உள்ளது. இங்கு இக்கோவிலை உருவாக்கிய காலங்கிநாதர் என்ற சித்தர் சமாதிநிலை அடைந்துள்ளார். இவர் பழனியில் முருகன் சிலையை உருவாக்கிய போகரின் குரு ஆவார். இங்கு ஒரு முருகன் கோவிலும் உள்ளது. திருவண்ணாமலையைப் போலவே இங்கும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுகிறது. அமாவாசை நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

மேற்கோள்

[தொகு]
  1. "இளம்பிள்ளை சித்தர்கோயில் மலைஅடிவாரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா". தினகரன் (இந்தியா). 30-04-2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305023808/https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=452906&cat=504. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்_கோயில்&oldid=3728205" இலிருந்து மீள்விக்கப்பட்டது