சிதம்பரநாதன் சபேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிதம்பரநாதன் சபேசன் பிரித்தானியாவின் இளம் கண்டுபிடிப்பாளர். பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சபேசன் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றுச் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியியற் கல்வியை 2007-ஆம் ஆண்டு நிறைவு செய்து இங்கிலாந்து அளவில் தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தொடர்ந்து தனது முதுமாணிக் கல்வியை இங்கிலாந்து கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்றுத் தொடர்ந்தார்.

கண்டுபிடிப்பு[தொகு]

இவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி எந்தவொரு பொருளுடனும் ஒரு சிறு பொறியை இணைத்து விட்டால் அந்தப் பொருளுக்கான அடையாளமாகவும் அது இன்னாருடையது எனத் தெரிவிப்பதாகவும் அமைகிறது. அத்துடன் தனது இருப்பிடத்தைத் தொடர்ந்து அறிவித்துக் கொண்டும் உள்ளது. இது போன்ற அடையாள இணைப்புகள் ஏற்கனவே சந்தையில் இருந்தாலும் இவரது கண்டுபிடிப்பான பொறியை மிகக் குறைந்த விலையில் உருவாக்க முடியும் என்றும் மின்கலம் இல்லாமலேயே இயங்கவல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பின் பயன்கள்[தொகு]

இவரது கண்டுபிடிப்பான intelligent wireless passive sensor technology system விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது. இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

விருதுகள்[தொகு]

இவரது கண்டுபிடிப்புக்காக அவருக்கு "ஐக்கிய இராச்சிய முன்னோடி" (UK Pioneer) விருதையும் "முடியாட்சியின் கல்விசார் தொழில் முனைவு" (Royal academic enterpreneurship) விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இவர் Master Of Physicology in Electronic Engg மற்றும் Doctor Of Physicology in Electronics Engg என்ற உயரிய படடங்களையும் பெற்றுக் கொண்டார். "Sir William Siemen Medal" பதக்கம் பெற்றுக் கொண்டார். இரண்டு Patents Inventer என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவர் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கெட் கழக தலைவராகவும் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில் நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இவரது கண்டு பிடிப்பான radio real time tagging system ஆனது பல வணிக நிறுவனங்களுக்கும் விமான நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பரநாதன்_சபேசன்&oldid=2428355" இருந்து மீள்விக்கப்பட்டது