சாவகச்சேரி இந்துக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Chavakachcheri Hindu College
சாவகச்சேரி இந்துக் கல்லூரி
அமைவிடம்
சங்கத்தானை
சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம், இலங்கை
அமைவிடம் 9°39′53.00″N 80°10′22.20″E / 9.6647222°N 80.1728333°E / 9.6647222; 80.1728333ஆள்கூற்று: 9°39′53.00″N 80°10′22.20″E / 9.6647222°N 80.1728333°E / 9.6647222; 80.1728333
தகவல்
பள்ளி வகை பொது தேசியப் பாடசாலை 1AB
குறிக்கோள் நலமே நாடுக
நிறுவல் 1904
நிறுவனர் வி. தாமோதரம்பிள்ளை
பள்ளி மாவட்டம் தென்மராட்சி கல்வி வலயம்
ஆணையம் கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம் 1003002
அதிபர் திரு நடராஜா சர்வேஸ்வரன்
உதவி அதிபர் வி. கந்தசாமி
என். பாலச்சந்திரன்
உதவி அதிபர் எஸ். ரி. இரத்தினம்
ஆசிரியர் குழு 88
தரங்கள் 1-13
பால் கலவன்
வயது வீச்சு 5-18
மொழி தமிழ், ஆங்கிலம்
மாணவர்கள் எண்ணிக்கை 2,152
இணையத்தளம்

பொருளடக்கம்

அறிமுகம்[தொகு]

சாவகச்சேரி இந்துக் கல்லூரி இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரி நகரத்தில் கண்டி வீதியில் அமைந்திருக்கும் ஒரு தேசிய பாடசாலை ஆகும், இப் பாடசாலையே சாவகச்சேரி கோட்டக் கல்லூரியுமாகும். இங்கு ஆரம்ப பள்ளி, சாதாரண தரம், உயர் தரம் வரையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆரம்ப பள்ளியானது (ஆண்டு 1 தொடக்கம் 5வரை) தனியான அலகாகவும் தரம் 6 முதல் தரம் 13 வரை தனியான அலகாகவும் இயங்கிவருகின்றது.. தென்மராட்சியில் இருக்கும் தேசிய பாடசாலைகளில் இது முன்னிலையில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

  1904 இல் சாவகச்சேரிச் சந்தைக்கண்மையில் ஒரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை வி.தாமோதரம்பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டது. 1905 அது சங்கத்தானைக்கு மாற்றப்பட்டது. இதன் முதற்றலைமையாசிரியர் கே. எஸ். கந்தசாமி ஆவார்.[1] 1907 துவிபாசா பாடசாலையானது. 1908 இல் தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு இடம் மாறியது. 1921 (அரசினர் நன்கொடையுடன்) ஆங்கிலப்பாடசாலை வி. தாமோதரம்பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்டது. 1922 இல் யாழ்ப்பாணம் இந்துச் சபையினரிடம் ஆங்கிலப்பாடசாலை ஒப்படைக்கப்பட்டது. 1926 இல் கோவிலடித் தமிழ்ப் பாடசாலை சாவகச்சேரிக்குக் கொண்டு வரப்பட்டது. 1934 இல் சி பிரிவுக் கல்லூரியானது. க.பொ.த (சா. த) வகுப்புகள் ஆரம்பித்தன. 1937 இல் தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துச்சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1943 இல் விளையாட்டு இல்லங்கள் அமைக்கப்பட்டன. 1945 இல் பி பிரிவுக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. க.பொ.த. வகுப்பிற்கு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்பட்டது. 1949 இல் ஏ பிரிவாகத் தரமுயர்த்தப்பட்டது. க. பொ. த (உ.த) வகுப்புகள் ஆரம்பமாயின. 1954 இல் முதன்முதலாக இரு விஞ்ஞானத்துறை மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுந்தனர். 1957 இல் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. தமிழ்ப் பாடசாலை ஆங்கிலப்பாடசாலையுடன் இணைக்கப்பட்டது.1962 ஏப்ரல் 15 இல் அரசாங்கம் பொறுப்பேற்றது. 1979 இல் இப்பள்ளி மத்திய மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1989 ஆகத்து 29 இல் இருந்து இந்து ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பப்பிரிவு தனித்து இயங்கத் தொடங்கியது. அவ்வேளை 6 – 13 வரையான வகுப்புக்களுடன் இந்துக் கல்லூரி தொடர்ந்து இயங்கியது. 1993 பெப்ரவரி 5 இல் தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது

பாடசாலையின் பௌதீக வளவிருத்தி (2004 - 2014 வரையான காலப்பகுதியில்)[தொகு]

ஒரு பாடசாலையின் முன்னேற்றமானது அப்பாடசாலையில் காணப்படும் பௌதிகவள மேம்பாட்டிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக மாணவர்களின் கல்விக்கு அவசியமான உபகரணங்கள், தளபாடங்கள், மூலப்பொருள்கள், நூலகம், வகுப்பறைக் கட்டிடங்கள், ஏனைய அனைத்து சொத்துக்களும் பௌதிகவளம் என வரையறுக்கப்படும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்பதற்கு இணங்க ஒரு பாடசாலையில் பௌதிகவளம் விருத்தியடைந்தாலே கல்விப்புலம் மேம்பாடு அடையும் எனக் குறிப்பிடலாம். எமது கல்லூரியில் கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் பௌதிக வளவிருத்தி எவ்வாறு மேம்பாடு அடைந்துள்ளது என நோக்குவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமுடையதாகும். இக்காலப்பகுதியில் எமது கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி வருபவர் திரு அருணாசலம் கயிலாயிபள்ளை ஆவார். அவர் இக்கல்லூரியில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியவர். அதன் பிரதியுபகாரமாக தனது அதிபர் சேவைக் காலப்பகுதியை பௌதிகவள விருத்தி மீது கவனம் செலுத்த விரும்பினார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

ஒரு சமூகம் பாடசாலைக்கு எவ்வாறு உதவ முடியுமோ அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் எமது கல்லூரி அதிபர் அவர்களே. பாடசாலையின் அபிவிருத்திச் சபை, அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உதவியை கல்லூரியின் பௌதிகவள விருத்திக்காக அதிபர் அவர்கள் பயன்படுத்தியுள்ளார். எனவே இவற்றை விரிவாக நோக்கும் போது எமது கல்லூரியின் பௌதிக வள விருத்தி பற்றிய முக்கிய உண்மை நிலைமை புலப்படும்.

இக்கல்லூரி 1904 ஆம் ஆண்டளவில் கொடைவள்ளல் அமரர் தாமோதரம் பிள்ளை அவர்களால் தாபிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இக்கல்லூரி 100 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அதனையொட்டி நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ஒரு தசாப்த காலப்பகுதியே (2004 - 2014) க்கிடையிலான) இங்கு நோக்கப்படுகின்றது. கல்லூரி தாபிக்கப்பட்டதன் அடையாளச் சின்னமான நூற்றாண்டு விழா மலரில் நூறுவருடகாலப்பகுதியின் பௌதிக வள விருத்தி பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வந்த ஒரு தசாப்த காலப்பகுதியின் பௌதிகவள விருத்தி பற்றியே இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

2004 ஆம் ஆண்டளவில், மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட உலக வங்கியின் நிதியுதவியுடன் 60 ஒ 25' அளவான நூலகக் கட்டிடத் தொகுதியின் கீழ்மாடி அமைக்கப்பட்டது. இக்கட்டிடத் தொகுதியில் கறறல் வள நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டளவில் கல்வியமைச்சின் நிதியுதவியுடன் கல்லூரியின் நு மண்டபத்திலுள்ள 16 வகுப்பறைகள் சேதமடைந்த நிலையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட தரைப்பகுதி சுமார் 5 இலட்சம் ரூபா (500000ஃ-) செலவில் புனரமைக்கப்பட்டது. இதனால் வகுப்பறைத் தளபாடங்களை ஒழுங்குபடுத்தி வைத்து சீரான வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எமது கல்லூரியின் முற்றப்பகுதியே மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சி மையமாக உள்ளது. இம் மையப்பகுதியின் தரைப்பகுதி பள்ளமும், திட்டியுமாகக் காணப்பட்டது. இதனால் மாணவர்களது விளையாட்டுப் பயிற்சி நிகழ்வுகளுக்கும் இடையூறாக அமைந்தது. மைதானத்தின் தரைப்பகுதியை மட்டப்படுத்தி உயர்த்தி செப்பனிடுவதற்கு 2006 ஆம் ஆண்டளவில் ஐக்கிய ராச்சியத்தின் பழைய மாணவர், ஆசிரியர் சங்கம் வழங்கிய 2 இலட்சம் ரூபா (200000ஃ-) பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் மைதானத்தின் நிலமட்டம் உயர்த்தப்பட்டு அத்திபாரம் இடப்பட்டு மேற்பகுதிக்கு மண்போட்டு நிரப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகின்ற பல வீரர்கள் வலய மட்ட, மாகாண மட்ட, தேசிய மட்ட இடங்களைப் பெற இம்மைதானம் உதவியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக் கற்றலில் ஈடுபடும் போது தமது குறிப்புக்களையோ அல்லது அவசியமான வரைபடங்கள், புத்தகக் குறிப்புக்களையோ நிழற்படப்பிரதியை குறைந்த செலவில் பிரதி செய்து கொள்வதற்கு வசதியாக, கல்லூரியின் நோர்வே பழைய மாணவர் சங்க கிளை ரூபா 175,000ஃ- செலவில் நிழற்படப் பிரதி இயந்திரத்தையும், கணினி அச்சுப்பதிவுக் கருவியையும் வழங்கியது. அது மாணவர்களின் கற்றலுக்கு உதவுகின்றது. இதற்கென பழைய மாணவர் சங்கம் கல்லூரியில் அமைந்துள்ள புத்தகசாலை மூலம் இப்பணியைச் செய்து வருகின்றது.

வகுப்பறைக் கற்பித்தலுக்கு மேலாக மாணவர் நலன்கருதி நடாத்தப்படும் செயலமர்வுகள், பரீட்சைக் கருத்தரங்குகளின் போது அவசியமான பல்லூடக எறியியினை (ஆரடவi - ஆநனயை Pசழதநஉவநச) சுவீஸ் நாட்டு பழைய மாணவர் சங்கக்கிளை வழங்கியுள்ளது. இது இன்றைய காலத்தில் மிகமிக அவசியமான கற்றல் கற்பித்தல் கருவியாகவுள்ளது.

எமது கல்லூரியின் வகுப்பறைத் தொகுதிகள் பரந்த பரப்பளவில் அமைந்துள்ளன. அதனால் பாடவேளைகள் முடிவடையும் போது அதற்கான மணி ஒலிக்கும் போது அது சகல வகுப்புக்களுக்கும் தெளிவாகக் கேட்பதில்லை. இதனால் கற்றல் கற்பித்தல் நேரங்களில் குழப்ப நிலை காணப்பட்டது. இக்குழப்ப நிலையை நீக்கும் முகமாக சிறுவர் பாதுகாப்பு நிதியம் வழங்கிய 250 000ஃ- ரூபாவுடன் பாடசாலை அபிவிருத்திச் சபையின் 140000 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 390 000 ரூபா செலவில் உள்ளக ஒலி அமைப்பு வசதி மேற்கொள்ளப்பட்டது. இது நேரமுகாமைத்துவத்தை வலுப்படுத்தப் பெரிதும் உதவுகின்றது. தென்மராட்சியில் வகுப்பு முழுவதும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்ளக் கூடிய தகவல் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் பாடசாலையிலுள்ள மண்டபங்களில் ஒன்றான வு.ஏ மண்டபம் யுத்தத்தினால் சேதமடைந்து காணப்பட்டது. அதனைச் செப்பனிட்டு கேட்போர் கூடமாக அமைப்பதற்கு யுனிசெவ் நிறுவனம் 651921ஃ- ரூபாவை வழங்கியது. அத்துடன் கல்லூரியில் சேதமடைந்த தளபாடங்களைத் திருத்தியமைக்க 446, 275ஃ- ரூபாவும் எல்லைப்புற மதில் அமைப்பதற்கு ரூபா 50,000ஃ- ரூபாவும் யுனிசெவ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. கு மண்டபத்தின் எல்லையோர மதிலுக்கான அத்திபார வேலைகள் இந் நிதி மூலம் செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டளவில் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும், பழைய மாணவர் சங்கமும் இணைந்து பாடசாலைக்கு அருகிலுள்ள 3 1ஃ3 பரப்புக் காணியை 125, 000ஃ- ரூபா செலவில் கொள்வனவு செய்தது. இத்தொகையில் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் வழங்கிய 654,000ஃ- ரூபாவும் உள்ளடங்கும். மிகுதிப் பணம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் வழங்கப்பட்டது.

அதேபோல் 2008 ஆம் ஆண்டளவில் நெகோட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் 958,150ரூபா செலவில் பாடசாலைக்கு வேண்டிய மாணவர் மேசை, மாணவர் கதிரை, ஆசிரியர் மேசை ஆகிய தளபாட வகைகள் செய்யப்பட்டன. இதனால் கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிய தளபாடப் பிரச்சினை நீங்கியது. இவ் வேலைத்திட்டத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிறைவேற்றியது.

2009 ஆம் ஆண்டளவில் கல்லூரியின் கட்டிடத் தொகுதிகள் யாவும் வர்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. இதற்கான நிதியை யுனிசெவ் நிறுவனமும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் வழங்கியுள்ளன. இக்காலப் பகுதியில் 125,000 ரூபா செலவில் குழாய்க்கிணறு அமைத்து நீர்ப்பற்றாக்குறைப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. அத்துடன்ரூபா 350,000ஃ- பெறுமதியான 117 யு வகை மேசைகள் செய்யப்பட்டன.

அத்துடன் இக்காலப்பகுதியில் அரசின் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் 220 ஒ 25 நீள அளவான சுயுயுN மண்டபத்தின் மாடிப் பகுதி வேலைகள் 10 மில்லியன் ரூபா செலவில் நிறைவு செய்யப்பட்டது. இதில் 60 ஒ 25 அளவான நூலகத்தின் மேல்மாடியும் ஏழு வகுப்பறைகளும் அமைக்கப்பட்டது. இக்கட்டிடத் தொகுதி வடக்குமாகாண ஆளுநர் பு.யு சந்திரசிறி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இடவசதி அதிகரிக்கப்பட்டதுடன் இறுதிவரை சுயுயுN மண்டபத்தில் இருந்த வெப்பம், மழை, நீர் கசிவு ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்பட்டது.

இதே காலப்பகுதியில் இத்தாலியில் வசிக்கும் தென்மராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.குமாரசுவாமி ரவிச்சந்திரன்எ ன்பவர் தனது மனைவியின் (சியாமளா ரவிச்சந்திரன்) அகால மரணத்தின் ஞாபகார்த்தச் சின்னமாக அன்னார் கல்வி பயின்ற எமது கல்லூரியின் வடக்குப் பக்கமாக ஓர் அழகிய நுழைவாயில் முகப்பு அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இதன் பெறுமதி ரூபா 500,000ஃ- ஆகும். அத்துடன் மாணவர்களுக்காக அவர் நினைவாக 50,000 ரூபா புலமைப்பரிசிலும் ஆரம்பிக்கப்பட்டது.

எமது கல்லூரிக்கு 2010 ஆம் ஆண்டளவில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுதலின் பெயரில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் தூதுவராலயம் 17 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது. இவ்வுபகரணங்கள் இன்றைய மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டுக்களில் பங்குபற்ற வாய்ப்பளித்துள்ளன. கொழும்பு பழைய மாணவர் சங்கம் இதற்கான முன்னெடுப்பைச் செய்தது. இப்பணத்துக்கு பல்வேறு விளையாட்டுக்களுக்கான கோல உடைகள், தடியூன்றிப் பாய்தலுக்கான மெத்தைகள், கோல்கள்,கிரிக்கெட் உபகரணங்கள், மைதான விளையாட்டுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இவ் உபகரணங்களை ஜேர்மன் நாட்டுத் தூதுவர் மேன்மைதங்கிய திரு திருமதி ஜீன்ஸ் போல்ட்னர் கல்லூரி மண்டபத்தில் வழங்கிச் சிறப்பித்தார். இவ்வாண்டு காலப்பகுதியில் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியுதவியுடன் டுப்ளோர் அச்சிடும் உபகரணம் 5 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டதால் மாணவர்களது தவணைப் பரீட்சை நடாத்துவதற்கான விiனாத்தாள்களைக் குறைந்த செலவில் அச்சிட முடிகின்றது.

அதே போல 2010 ஆம் ஆண்டில் எமது கல்லூரியின் பழைய மாணவனான திரு.ம.கமலேஸ்வரன் என்பவர் 100 பிளாஸ்டிக் கதிரைகளையும் ஏஆமு நிறுவனத்தினர் 50 பிளாஸ்டிக் கதிரைகளையும் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்துள்ளனர். அவை இன்று பிரதான மண்டபத்தில் பல்வேறு வைபவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த புலேந்திரன் (கட்டார்) குடும்பத்தினர் 50 நீள வாங்குகளை பிரதான மண்டபத்தில் மாணவர் இருப்பதற்காகச் செய்து வழங்கினர். இதற்கு ரூபா 75,000 செலவிடப்பட்டது.

2010 ஆம் ஆண்டளவில் எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 425,000ரூபா நிதியில் கல்லூரியில் 16 இணைப்புக்கள் கொண்ட உள்ளகத் தொலைபேசி வசதியும், 08 கண்காணிப்பு கமரா இணைப்புக்களும் வழங்கப்பட்டது. இவ்வசதிகள் கல்லூரியின் ஒழுக்க நிர்வாகங்களைக் கண்காணிக்கவும் தொடர்பூட்டலை இலகுபடுத்தவும் உதவுகின்றன.

2011 ஆம் ஆண்டளவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி அவர்களின் நிதியுதவியினால் 100,000ஃ- ரூபா பெறுமதியான பல்லூடக எறியி(Multi - Media Projecter) கொள்வனவு செய்ய்பபட்டதால் மாணவர்களது கல்விக் கருத்தரங்குகளை நடாத்துவதற்குப் பெரிதும் பயன்படுகின்றது.

அதேவேளை கல்லூரியின் பழைய மாணவரான திரு.க.கனகசபை அவர்கள் (நில அளவையாளர் கிளிநொச்சி) 120 பிளாஸ்டிக் கதிரைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

2011 ஆம் ஆண்டளவில் மேலும் பல்வேறு வளங்கள் கல்லூரிக்கு கிடைத்தன. இக்காலப்பகுதியில் யுனிசெவ் நிறுவனம் வழங்கிய 550,000ஃ- ரூபா செலவில் சுயுயுN மண்டப பகுதியில் பெண்களுக்கான கழிப்பறைத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் எமது கல்லூரியின் தாபகரின் வழித்தோன்றல் திரு.திருமதி சிறிகுமார் சுதர்சினி தம்பதிகளின் அன்பளிப்பாகிய 38 இலட்சம் ரூபா பெறுமதியான நிதியில் 42 இருக்கைகள் கொண்ட (TATA STAR BUS) பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு பாவனையிலுள்ளது. (NPNடீ - 0558) இப்பேருந்து மாணவர்களினது கல்விச் சுற்றுலாக்களுக்கு உதவுகின்றது. இதே காலப்பகுதியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன் 4 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியொன்றை (NPலுஐ - 7604) தனது சொந்தப் பணத்தில் வழங்கியுள்ளார். இது அவசர வேளைகளில் மாணவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும், வேறும் பலதேவைகளுக்கும் உதவுகின்றது.

2011 ஆம் ஆண்டில் எமது கல்லூரியின் ஆசிரியரும் பழைய மாணவருமாகிய திரு.த.இரகுலேசன் கல்லூரிக்கு அன்பளிப்பாகக் கிடைத் பேருந்தை நிறுத்தி வைப்பதற்கான தரிப்பிடம் அமைப்பதற்கு தனது ஒருமாதச் சம்பளத்தை (ரூபா 20000ஃ) வழங்கி நிதியுதவியைத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் ஆசிரிய சகோதரத்துவம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் மொத்தம் 675இ000ஃ- ரூபா செலவில் பேருந்த தரிப்பிடக் கட்டிடம் பூர்த்தி செ;யயப்பட்டது.

2011 ஆம் ஆண்டில் உலக உணவுத் திட்டத்தின் 125,000ஃ- ரூபாவுடனும் மீதித்தொகையான 71,000ஃ- ரூபா பாடசாலை அபிவிருத்திச் சபை நிதியுடனும் சேர்த்து மொத்தமாக 196,000ஃ- செலவில் சமையலறை அமைக்கப்பட்டது. அதேயாண்டில் பிரான்ஸ் நாட்டு பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் ரூபா 3 இலட்சம் பெறுமதியான விஞ்ஞான ஆய்வுகூட உபகரணம், இரசாயனப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அதுபோல கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் கிரிக்கட் பயிற்சித் திடல் ஒன்று 200இ000ஃ- ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் கல்லூரியின் மின்சாரத்தடை நேரங்களில் பாவிப்பதற்கென கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.சுமந்திரன் 250இ000ஃ- ரூபா பெறுமதியான மின்பிறப்பாக்கியை வழங்கியுள்ளார். இதே ஆண்டில் கல்வி அமைச்சு நூலகத்துக்கான புத்தகக் கொள்வனவுக்காக 65,000ஃ- ரூபாவை வழங்கியுள்ளது.

2012 ஆம் ஆண்டில் யாழ் - கண்டி வீதி (யு9) விஸ்தரிப்புக்காக கல்லூரியின் வீதியோர மதில் எல்லை உடைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீள உருவாக்கப்பட்ட 900 அடி நீளமான புதிய மதிலுடன் 4 துவிச்சக்கர வண்டிகள் தரிப்பிடங்களும் அமைக்கப்பட்டன. இம்மதில் அமைப்புக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை (சுனுயு) வழங்கிய நிதியுடன் மீதித் தொகையை பாடசாலை அபிவிருத்திச்சபை வழங்கியது. இதனால் இன்று கல்லூரியின் வீதியோரத்தில் அழகான மதில் அமைப்பு கல்லூரிக்கு மெருகூட்டிக் கொண்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிறைவேற்றியது. 2012 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர வகுப்புக்கென 3 1ஃ2 இலட்சம் ரூபா செலவில் இரு வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டன. இதனையும் பாடசாலை அபிவிருத்திச் சபையே பொறுப்பேற்றுக் கொண்டது. இதேயாண்டில் கல்லூரியின் பிரான்ஸ் நாட்டின் பழைய மாணவர் சங்கம் வழங்கிய 500இ000ஃ- ரூபா நிதியில் 80 ஒ 19 அளவான கொட்டகை ஒன்று பிரான மண்டபத்துடன் இணைந்ததாக அமைக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டளவில் கல்லூரி அலுவலகத்தின் தரைப்பகுதிக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியுதவியுடன் 300,000ஃ- ரூபா செலவில் மாபிள் பதித்து அழகுபடுத்த ப்பட்டது. அத்துடன் இதே காலப்பகுதியில் 100,000ஃ- ரூபா செலவில் டு மண்டபத்தின் 3 வகுப்பறைகளின் தரைப்பகுதி முற்றாகப் புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டதுடன் சுவருக்கு வர்ணம் பூசப்பட்டது. இன்று அலுவலகக் கட்டிடத்தொகுதி புதுப் பொலிவுடன் மிளிர்கின்றது. இதே ஆண்டு காலப்பகுதியில் 100,000ஃ- ரூபா செலவில் டு மண்டபத்தின் 3 வகுப்பறைகளின் சேதமடைந்திருந்த தரைப்பகுதி முற்றாகப் புதுப்பிக்கப்பட்டு சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலப் பகுதியில் முக்கிய பெரும் அபிவிருத்தித் திட்டமாகிய மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைய நாடளாவிய ரீதியில் தாபிக்கப்பட்டு வரும் 1000 இடைநிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தித் திட்டத்துக்கமைய 2013 இல் மகிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் நிறுவப்பட்டுள்ளது. இது இரண்டு மாடிக் கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 90 இலட்சம் ரூபா நிர்மாணச் செலவு ஏற்பட்டுள்ளது. இதில் 4 ஆய்வுகூடங்கள் உள்ளன. இங்கு கணினி ஆய்வுகூடம், கணித ஆய்வுகூடம், விஞ்ஞான ஆய்வுகூடம், மொழி ஆய்வுகூடம் என்பன உள்ளடங்குகின்றன. இன்றைய காலக் கல்வியின் முக்கிய 4 துறைகளும் ஒரே கூரையின் கீழ் அமைந்துள்ளமை மிக முக்கிய அம்சமாகும்.

எமது கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம்,க ணிதம் ஆகிய துறைகளே நீண்டகால கற்கை நெறிகளாக விளங்கின. குறிப்பாக கலைத்துறையில் அதிக மாணவர்கள் கல்வி கற்று வந்தாலும் வரையறுக்கப்பட்ட சில திறமையான மாணவர்களைத்தவிர ஏனைய மாணவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகவே காணப்பட்டது. இதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு 15.07.2013 இலிருந்து எமது கல்லூரியை 1AB super பாடசாலையாகத் தரமுயர்த்தியுள்ளது. இதனால் உயர்தர வகுப்பில் தொழினுட்ப பாட நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பாட நெறிக்கு என தொழினுட்ப பீடக் கட்டட வேலைகளுக்கான அத்திபாரமிடும் வேலை ஆரம்பிக்கப்பட்டு கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன. இக்கட்டிடம் கல்லூரியில் அமையவுள்ள முதலாவது 3 மாடிக் கட்டிடமாகும். இதன் கட்டுமான வேலைகள் பூர்த்தியானதும் தொழினுட்ப பாடநெறி மாணவர்களுக்கு சகல வசதிகளுமுள்ள கல்விப் பீடமாக அது தொழிற்படும். இதற்கு 30 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத் தொகுதிகளும், கல்வியமைச்சினால் ஒதுக்கப்படுகிறது.

2014 ஆகஸ்ட் மாதம் எமது கல்லூரி அதிபர் கனடா நாட்டுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அதனைக் கேள்வியுற்ற கனடா வாழ் பழைய மாணவர் சங்கம் அவரைச் சந்தித்தது. கல்லூரியின் முன்னேற்றம், தற்போதய தேவைகள் பற்றிக் கலந்துரையாடியது. ஆசிரியர் ஓய்வு விடுதி, தேநீர்சாலைகள் கொண்ட ஆசிரியர் மாணவர் நலனோம்பு நிலையம் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தினுடைய அன்பளிப்பாக அமையவுள்ளது. இதனை நிறுவுவதற்கு சுமார் 7 மில்லியன் ரூபா வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இக்கட்டடத் தொகுதியின் கீழ்த்தளம் கல்லூரிக்கான சிற்றுண்டிச்சாலையாகவும் மேல் மாடி ஆசிரியர்களுக்கன ஓய்வு அறையாகவும் அமையவுள்ளது. இக்கட்டிடத்துக்கான நிர்மாண வேலைகள் எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் கட்டிட வேலைகள் நிறைவு பெற்றதும் எமது கல்லூரி ஓர் நிறைவு பெற்ற பௌதிகவளங்களுடனான கல்லூரியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

1904 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட எமது படசாலை 1993 ஆம் ஆண்டளவில் தேசிய பாடசாலையாகவும் 2013 ஆம் ஆண்டளவில் 1AB super பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வழிகளிலும் முக்கியம் பெற்ற பாடசாலையாகக் காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் துணைபுரிகின்றன. தென்மராட்சியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதும் ஆண், பெண் பிள்ளைகள் சேர்ந்து கல்வி கற்கும் கலவன் பாடசாலையாக விளங்குவதும், கல்லூரியின் அயற் சமூகத்துடனும் ஏனைய நிறுவனங்களுடனும் நல்லுறவு பேணிவரும் பாடசாலை யாகவும் திகழ்வதுடன் வருடந்தோறும் கணிசமான மாணவர்கள்; பல்கலைக் கழகத்தின் பல்வேறு பாட நெறிகளுக்கும் அனுமதி பெறும் வாய்ப்பைப் பெறுவதும் இக் கல்லூரியின் முக்கியத்துவத்துக்குக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

மறுபுறம் யாழ் குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வந்து கற்பிக்கும் ஆசிரியர்களது அயராத உழைப்பும், அர்ப்பணிப்புச் சிந்தனையும் பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் அக்கறையும் பின்னணியிலுள்ள காரணிகளாகக் குறிப்பிடலாம்.

எமது கல்வி வலயத்தின் முன்னணிப் பாடசாலையாகவும் பௌதிக மனித வளங்களைக் கொண்ட பாடசாலையாகவும் இருப்பதுடன் சிறந்த கல்வி முகாமைத்துவம் கொண்ட பாடசாலையாக விளங்குவதும் இதன் பெருமைக்குச் சான்று பகர்கின்றன.

மகுடவாசகம்[தொகு]

நலமே நாடுக வளர்க ஒழிக

சாவகச்சேரி இந்துக் கல்லூரி[தொகு]

தூர நோக்கு[தொகு]

ஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் ஒரு முன்னணிப் பாடசாலையாக விளங்க வைத்தல்.

பணிக்கூற்று[தொகு]

தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப சகல மாணவர்களையும் வழிப்படுத்தி, சைவத் தமிழ் மரபுகளையும் விழுமியங்களையும் பேணி, நவீனத்துவத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்கான பலத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு வழங்குதல்.

பாடசாலைக் கீதம்[தொகு]

இராகம் - தர்பார்

தாளம் - ரூபகம்

பல்லவி

வாழ்க இந்துக்கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே - வாழ்கவே

அனுபல்லவி

வாழ்க நம்திரு வாழ்க நம் கலை

நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே (வாழ்க)

சரணம்

அறமும் அன்பும் அருளும் தழைக்க

ஆன்மநேய உணர்வு செழிக்க

உறவு கனிந்தே உயர்வு நிலைக்க

உலகில் புகழும் அறிவும் தரிக்க (வாழ்க)

கல்லூரிப்பா பற்றிய விளக்கம்[தொகு]

கல்லூரிப்பா கல்லூரிச் சின்னம் விளக்கிக் கொண்டிருப்பதை கலலூரிப்பா மேலும் தெளிவாக்குகிறது. பரந்த உள்ளத்தோடு பார்க்கும் போது ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய சமயம், கலை கலாசாரம் முதலியன அவ்வந் நாட்டிற்கு அந்த அந்த கலாசாரத்துனக்கு கூடுதலான பொருத்தமுடையனவாக அமைந்திருப்பதைக் காணலாம். அவையாவும் மாறிவரும் சூழலுக்குப் பொருத்தமான முறையில் தன் தனித்தனமை திரியாது வளர்சசி பெறுவதே சிறப்பு. இக்கல்லூரி தோன்றிய காலம் அயல் நாட்டு சமயமும், கலை, கலாசாரமும் எம் நாட்டுக்கென்றே தனித்தனமையோடு விளங்கிய சமயம் முதலியவற்றை விழுங்கிக் கொண்டிருந்த காலம் அதனை மீட்கவும் இதன் தாபகர் இதனைத் தொடங்கினார். அதனையே வாழ்க நம் திரு குறிக்கின்றது. தூர சமயத்துவச் செல்வம் கழலை பரத நாட்டியம் கர்நாடக இசை முதலலானவை எம் நாட்டுச் சமயம், தத்துவம் கலையாவும் இணைந்து நன்மையும் உண்மையும் நம்மிடையே வளர உதவுகின்றன. நன்மை, - சிவம், உண்மை – மெய்யறிவு, திருவருள் - அறிவு அதன் விளக்கம் பாடல் முடிவிலே தரப்படுகிறது. அறத்தால் அன்பு முறைகொண்டு வளர்கின்றது. அந்த அன்பு அனைத்துயிரிடமும் வைக்கும் அருளாகத் தழைத்து வளருகிறது. அது ஆன்மநேய உணர்வென்னும் மலர் அரும்பாகத் தழைக்கின்றது. ஆன்ம மரபாக அந்த உயர்வான சிவக்கனியை நாம் உண்டு மகிழும் போது உலகத்தில் எம் சமயத்தரமும், அறிவும் நிலையாகப் போற்றப்படுகின்றது. இந்த நற்பணியைத் திறம்படச் செய்து முடிக்கும் ஆர்வமும் திறமையும் சிறப்பும் பெற்று வாழ்க என பாடலாசிரியர் வாழ்த்துகிறார்

இப்பாடசாலையின் அதிபர்கள்[தொகு]

• திரு எஸ். சுவாமிநாதன் 1923 - 1929
• திரு அருணாசலம் 1934 - 1935
• திரு ரி. முத்துக்குமாரு 1942 - 1951
• திரு ஏ.எஸ். கனகரட்ணம் 1952 - 1953
• திரு ஏ. மண்டலேஸ்வரன் 1954 - 1962
• திரு எ.கே. கந்தையா 1963 - 1965
• திரு எம். வைத்திலிங்கம் 1966 - 1970
• திரு பி. வெற்றிவேலு 1970 – 1984
• திரு கே.எஸ். குகதாசன் 1985 – 1990
• திரு கே. சந்திரசேகரன் 1990 – 2000
• திரு ஆர். கயிலைநாதன் 2000 – 2004
• திரு ஏ. கயிலாயபிள்ளை 2005 - 2015
• திரு நடராஜா சர்வேஸ்வரன் 2016

கல்லூரி இல்லங்கள்[தொகு]

1943 ஆம் ஆண்டிலே த.முத்துக்குமாரு அவர்கள் அதிபராக இருந்த காலத்திலே முதன் முதலாக இல்லங்கள் அமைக்கப்பட்டு மாணவரிடையே இல்லரீதியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. முதலில் மாணவர் தொகையைக் கருத்திற் கொண்டு ஆனந்தா, நேரு, ஸ்ரீசுமங்கலா, தாமோதரம் என நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டன. மாணவர் தொகை அதிகரித்துச் செல்லச் செல்ல மேலும் ஒரு இல்லம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு 1975 ஆம் ஆண்டு அதிபராகவிருந்த பூ.வெற்றிவேலு அவர்களால் ஐந்தாவது இல்லமாக முத்துக்குமாரு இல்லம் அமைக்கப்பட்டது.

இவ்வாறாக அமைக்கப்பட்ட இல்லங்கள் ரீதியாக விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பாடல் போட்டி, பேச்சுப் போட்டி என்பனவும் நடத்தப்படுகின்றன.

கல்லூரிக்கொடி[தொகு]

கல்லூரிக்கொடியும் மனிதன் பெற வேண்டிய நற்பேற்றின் சின்னமாக விளங்குகின்றது. அவன் எந்த நலத்தைப் பெற விரம்பினாலும் தன்னை மையமாகக் கொண்டே சிந்திக்கின்றான்.செயற்படுகின்றான். ஆதனால் முரண்பாடுகளும், போராட்டங்களும் அழிவுச் சநிதனைகளும் வளர்கின்றது.

நீலம்

தன் நல்வாழ்வு ஏனையோரு;ககுப் பாதகமில்லாமல் அமைய ஒருவன் செயற்படுவதற்கு உலக்தின் போக்கை சிறப்பாக மனித உள்ளங்களின் போக்கை அறிந்திரு;கக வேண்டும். ஓவ்வோர் உயிராகவும் தான் இருந்து அவற்றின் உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தைப் பரந்த மனப்hன்மை என்பகின்றோம். கடலும், விண்வெளியும் நீலநிறமானவை,. முனிதன் நலம்பெற வேண்டுமானால் கடல்கேபால் குளிர்மையும் விண்Nபுhல் பரந்த மனப்பான்மையும் வேண்டும் என்பதை நீலம் குறிப்பிடுகுpன்றது.

வெண்மை

அதற்கு அடுத்தபடி வெண்மை தோற்றுகிறது. வேள்ளை நிறம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இல்லாத தூய்மையைக் குறிக்கிறது. ஆத்துடன் அறிவொளியைக் குறிக்கிறது. ஏனெனில் அடிப்படை நிறங்களின் கலவையான வெள்ளொளியே பொருள்களின் ண்மைத் தன்மையை உள்ளபடி காட்டுகிறது. புரந்த மனத்தோடு கூடிய அறிஞர்களி;ன பார்வையையே சைவசித்தாந்தம் திருவருளின் துணைகொண்டு பார்க்கும் போதே சிவத்தைக் காணலாம். ஏன்கிறது.

மஞ்சள்

பரந்ததும் தூயதுமான அறிவு என்னும் திருவருள் கொண்டு அறிவை விரு;ததி செய்தால் மட்டும் போதாது மனிதன் தானும் மகிழ்ந்து தன்னையடுத்தவரையும் மகிழ வைக்கும் ஆற்றல் பெற வேண்டும். ஆந்த அறிஞன் செல்லுமிடமெல்லாம் அமைதியும் மகிழ்வும் நிலவ வேண்டும். அவலம் ஒளித்தோட வேண்டும். மஞ்சள் மங்கல்ததின்,நன்மையில் அறிகுறி எனவே பரந்த தூய அறிவாகிய திருவருட்சக்தி மூலம் உலகெங்கும் பரந்தள்ள நன்மையாகிய வித்துடன் இரண்டறக்கலத்தலாகிய சைவசித்தாந்த அத்துவித முத்தியே எம் கல்லூரி குறிக்கோள் என்பதை கல்லூரிக்கொடி தெளிவாக்கிக் கொண்டிருக்கின்றது.

கல்லூரிச்சின்னம்[தொகு]

மக்களிடையே உயர்ந்த எண்ணங்களை வளர்ப்பதற்கு சின்னங்கள் பயன்படுகின்றன. கோவில்கள், விக்கிரகங்கள்.சிவசின்னங்கள் சைவர்களின் தரத்தை உயர்த்தும் சிறப்பு வாய்ந்தது. அதில் ஓர் உறுதி மொழி மேலே நீர்நிலை அதன் மேல் தாமரை மலர் அதன் இருமருங்கிலம் கதிரீன்றி தலை வணங்கி நிற்கும் நெற்கள், கிழக்கே உதயசூரியன், அதன் பின்னர் நலவானம் சற்று மேலே கல்லூரிப்பெயர் எழுத்துக்ககள் அவற்றிற்கிடையே சுவஸ்திகா யோகக் குறி என்பன காணப்படுகின்றன.

கல்வியின் குறிக்கோள் சிவத்தை அடைதல். சுpவம்,நன்மை, நலம் என்பன ஒரு பொருட்செல்கள் இன்பம் வேறு நன்மை வேறு, இன்பம் நிலையற்ற புல இன்பத்தை மட்டும் குறிக்கும். நன்மையோ அதனையும் உள்ளடக்கி பண்பட்ட உள்ளத்தால் அனுபவிக்கும் நிலையான இன்பத்தை அல்லது வீடுபேற்றைக் குறிக்கும். அந்தச் சிவானந்தம் இம்மையும் அம்மையும் ஒருங்கே நலந்தருவது என்கிறார் சுந்தரர். கல்வியி;ன நோக்கத்தை மறவாதே வெறும் பொருள் இன்பத்தை மட்டும் கருதாதே. அது நீடிக்க அக இன்பத்தையும் நாடி , அதற்காக முயற்சி செய், அதற்கான அறிவு விளங்கட்டும் என்ற உறுதி வாக்கியம் உள்ளது. அதனைப் பெறுவது எப்படி? சின்னங்கள் விளக்குகின்றன.

1.நீர்நிலை

எம் செயல் யாவரையும் ளிரச் செய்யுமு; அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அன்பு இணைக்கும் பசை, அதன் பயன் மாணவர் ஆசிரியர் அதிபர் மனமொன்றிணைந்த செயற்பர்டு 2.தாமரை மலர்

அப்பொழுது இதுவரை குவிந்து மொட்டாய் இருந்த இதயதாமரை மலர்கின்றது. மோட்டு தன்னளவில் மட்டும் வளர்ச்சி மலர் தானும் பொலிந்து தன்னை அடுத்தவரையும் மகிழ வைப்பது. அதுமட்டுமல்ல எப்பக்த்திலிருந்துவரும் ஒளிக்கதிர்களையும் ஏற்கும் சிறப்பு வாய்ந்தது. அறிவு எங்கிருந்துவரினும் நட்புரிமையோடு ஏற்கும் மனப்பான்மையைக் குறிக்கிறது.

3.உதயசூரியன்

அப்பொழுது மாணவன் உள்ளத்தில் அடங்கியிருந்த அறிவு வெளிப்படுகிறது. அறிவுக்கு எல்லையில்லை. இறக்கும் வரை தேடினாலும் பூரணமடைந்து விட்டேன் எனச் செருக்கும் கொள்ளாமல் எல்லாக் காலங்களிலும் எல்லாப் பொருட்களிலும் இருந்தும் அறிவைத் தேடும் மனப்பான்மை இரு;கக வேண்டுமு; எனப் பாதிச்சூரியன் போதிக்கின்றது.

4.நெற்பயிர்

மாணவப் பயிர் அந்த நீர்வரம்புள் வளர்ந்து காய் முற்றி தலைகுனிந்து ஒன்றோடு ஒன்று ஒழுங்குபட இணைய முயல்கிறது. உண்மையான கல்வியால் நிறைந்த மாணாக்கர் நிலைமையை காட்டுகிறது. அவர்கள் கல்லூரியின் கட்டுப்பாட்டை மதித்து நடப்பதன் மூலம் தாமும் பயன்பெற்று தம்மை அடுத்தவர்களுக்கும் உதவகின்றார்கள். இவ்வளவையும் தரும் நிறுவனமாக எம் இந்துக்கல்லூரி உள்ளது.

5.சுவாஸ்திகா குறியீடு

புலனடக்கம், சிந்தையடக்கம், ஆர்வம் சிரத்தை என்பன சேரும்போது ஆற்றல் மிக்க மக்களை உருவுhக்கும் சக்தி மிக்க நிலையமாக இந்துக்கல்லூரி விளங்கும் என்ற ஆர்வத்தை இது காட்டுகிறது. இவை மட்டுமல்ல இதனை உற்றுக் கவனிக்கும் போது இன்னும் பல கல்வித் தத்துவங்கள் இதில் புலனாகும்.

கல்லூரியின் நினைவழியாத்தடங்கள்[தொகு]

1904 ஆம் ஆண்டில் [சைவத்தமிழ்ப் பாடசாலை]யாக ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரி 112வருடங்களைக் கடந்து பெருவிருட்சமாக நிமிர்ந்து நிறைந்து நிற்கின்றது. 1993 ஆம் ஆண்டு தேசியபாடசாலையாகத் தரமுயர்ந்து தேசு பெற விளங்குகின்றது. கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் முயற்சியின் பலனாய் இக் கல்லூரியினால் உருவாக்கப்பட்ட பல்துறை சார்ந்த சான்றோர்களும், அறிஞர்களும் கல்லூரியின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றனர். அந்தவகையிலே எமது கல்லூரியில் பத்து ஆண்டுகளாக அதிபராக அரும் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற திரு.திரு.அருணாசலம் கயிலாயபிள்ளை, பிரதி அதிபராகப் பணியாற்றிய திரு.நடராசா பாலச்சந்திரன் ஆசிரியராகப் பணியாற்றிய திரு.கந்தையா ஜெயவீரசிங்கம் ஆகியோரினதும் சேவையின் தடங்களாய் இப்பகுதி அமைந்துள்ளது.


ஓய்வு பெற்ற அதிபர் திரு. அருணாசலம் கயிலாயபிள்ளை (2004 - 2015)[தொகு]

யாஃசாவகச்சேரி இந்துக் கல்லூரி தனது நூற்றாண்டைக் கொண்டாடி மகிழ்ந்திருந்த வேளையில் திரு.அ.கயிலாயபிள்ளை அவர்கள் புதிய அதிபராக 2004 இல் இக்கல்லூரியில் பதவியேற்றுக் கொண்டு நூற்றாண்டு விழாவை இனிதே நடாத்தினார். கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்காலிக விரிவுரையாளராக, ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்வி அதிகாரியாக பல்வேறு படிநிலைகளில் பணிகளை ஆற்றிய அனுபவத்தோடு எமது கல்லூரியில் அதிபர் பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபர் பதவியேற்பதற்கு முன்னரே பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக செயலாற்றியதனால் கல்லூரியின் தேவைகளையும் நிலைப்பாடுகளையும் நன்கு அறிந்திருந்தார். இதனால் அதிபர் பதவி கிடைத்த பின் அவர் பல காத்திரமான பணிகளை ஆற்றக்கூடியதாக இருந்தது. கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் உறவுகளை வலுப்படுத்தி அதனூடாக மாணவர்களின் கல்வி உயர்ச்சிக்கு வழிவகுத்தார். இவருடைய காலத்தில் கல்லூரியில் கல்விச் சாதனைகள் மிக உயர்வாகக் காணப்பட்டன. க.பொ.த உயர்தர சித்தி வீதம் 90க்கு மேல் அதிகரித்தமையும் கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான துறைகளில் வருடாந்தம் 50 பேருக்கு மேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றமையும் ஒரே வருடத்தில் நான்கு மாணவர்கள் மருத்துவத்துறைக்குச் சென்றமையும் ஒன்பது மாணவர்கள் பொறியியல் துறைக்குச் சென்றமையும் இவருடைய காலத்தில் நிகழ்ந்த சாதனைகள் ஆகும்.

கல்லூரியின் பௌதீக வள மனிதவள விருத்தியில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு வழிகளிலும் நிதிகளைப் பெற்று கல்லூரியை அழகாகவும் அர்த்த முள்ளதாகவும் ஆக்கிய பெருமை இவரைச்சாரும். இவருடைய காலப் பகுதியிலேயே வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டம் மூலம் 10 மில்லியன் ரூபா செலவில்; சுயுN மண்டப மேற்தளம் பூர்த்தியாக்கப்பட்டது. நூலக மேற்தளம் கட்டப்பட்டு நூலகச் செயற்பாடுகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன. அலங்கார நுழைவாயில் அமைக்கப்பட்டதோடு மூன்று இலட்சம் ரூபா செலவில் 905 அடி நீளமான முகப்பு மதிலும் அமைக்கப்பட்டது. மகிந்தோதய ஆய்வு கூடமும் இவர் காலத்தில் அமைக்கப்பட்டதோடு தொழினுட்ப ஆய்வு கூடத்திற்கான ஆரம்ப வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன. நவீன கலையரங்கத்திற்கான ஆரம்ப மாதிரித்தோற்றம் ஒன்றினை வடிவமைத்து உதவியதோடு எதிர் காலத்தில் அதனை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளிலும் தற்போதைய அதிபருக்குப் பேருதவி வழங்கி வருகின்றார்.

கல்லூரி மாணவர்கள் தமது கலைத்திட்ட, இணைக் கலைத்திட்ட செயற்றிறன் வெளிப்பாட்டிற்காக வேறு இடங்களுக்குச் செல்வதற்கு பெருந்தொகைப் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டி இருந்ததோடு பல இடர்களையும் அனுபவித்தனர். பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அதிபர் அவர்கள் 38 இலட்சம் ரூபா பெறுமதியுடைய பேருந்து ஒன்றைக் கொள்வனவு செய்தார். அதற்கான பாதுகாப்புக் காப்பகமும் ரூபா 10 இலட்சம் செலவில் கட்டப்பட்டது. அத்துடன் முச்சக்கர வண்டி ஒன்றையும் பெற்றுக்கொண்டார்.

கல்லூரிக்கான உள்ளகத் தொலைபேசி இணைப்பு, கண்காணிப்பு கமரா, மின்பிறப்பாக்கி, மேலைத்தேய வாத்தியக்கருவிகள் என்பனவற்றைப் பெற்று கல்லூரியின் வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யவும் அயராது உழைத்தார்.

ஜேர்மன் நாட்டு தூதரகமூடாக 1.7 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள விளையாட்டு உபகரணங்களை கல்லூரிக்கு உரிமையாக்கிக்கொண்டார். உலகெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கல்லூரியின் பௌதிக வளத்தேவைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக இன்று அவர்களது கவனத்தை அன்னை இந்துவின்பால் திசை திருப்பிய பெருமையையும் தனதாக்கிக் கொண்டார். அன்பாகவும் கண்டிப்பாகவும் மாணவர்களை வழிநடாத்தி ஒரு தசாப்த காலம் இக்கல்லூரியின் வரலாற்றில் தடம் பதித்த பெருமதிப்புக்குரிய அதிபர் திரு. அ கயிலாயபிள்ளை அவர்களின் பொறுப்பியம் மிக்க கடமைக் கூறுகளை இச்சஞ்சிகையூடாக நினைவு கூருவதில் அகம் மகிழ்கின்றோம்.

கல்லூரி ஆசிரியர்களின் செயற்றிறனை அளவிடுவதிலும் கடமைகள் பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பதிலும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்தவர். தாம் எண்ணியதை எண்ணியபடியே கூறும் இதய சுத்தி உடையவர். மாணவர்கள், கல்விசார் ஆளணியினர், கல்விசாரா ஆளணியினர் என்ற வேறுபாடுகளின்றி அனைவரையும் நேசித்த இப்பெருமகனாரின் ஓய்வு காலம் அமைதியும் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்ததாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

திரு. நடராசா பாலச்சந்திரன் (பிரதி அதிபர் - நிர்வாகம்)[தொகு]

05-08-1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று எமது கல்லூரியில் 15-08-1989 முதல் 26 வருடங்களாக, ஆசிரியராக, பாடஇணைப்பாளராக, பகுதித்தலைவராக, ஒழுக்காற்றுச்சபைப் பொறுப்பாசிரியராக, பிரதி அதிபராகப் பணியாற்றி 15-10-2015 அன்று ஓய்வு பெற்றுச் சென்றவர் திரு. நடராசா பாலச்சந்திரன் அவர்கள். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் உயர்தர, இடைநிலை வகுப்புக்களில் புவியியல், சமூகக்கல்வி ஆகிய பாடங்களைத் திறம்படக் கற்பித்து மாணவர் விரும்புகின்ற ஆசிரியராகச் செயலாற்றியவர்.

ஒழுக்காற்றுச் சபைப் பொறுப்பாசிரியராக இருந்து மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் அக்கறையோடு செயற்பட்டவர். மாணவர் முதல்வர் சபையினரால் வெளியிடப்படும் 'முதன்மை' சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவருவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தவர். மாணவரை நல்வழிப்படுத்துவதிலும் மாணவரிடம் தலைமைத்துவப் பண்பை விருத்தி செய்வதிலும் இவர் ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும்.

பிரதி அதிபராகப் பணியாற்றிய காலத்தில் சிறந்த நிர்வாகியாகவும்,தகுதியறிந்து கடமைப் பொறுப்புக்களை ஆசிரியர்களுக்கு வகுத்தளிப்பவராகவும் விளங்கியவர். கண்டிப்பு நிறைந்தவராக விளங்கிய போதும் மிகவும் இளகிய உள்ளம் கொண்டவராகவும், மாணவர் நிலையறிந்து இரங்குகின்ற மனப்பாங்குடையவராகவும் விளங்கியவர். ஓய்வு பெறும்வரை ஓயாது பணிபுரிந்து இந்துக்கல்லூரியின் உயர்வுக்கு வித்திட்ட பெருந்தகை.

1984 இல் முதல் நியமனம் பெற்ற பாடசாலையான நுவரெலியாஃ இராகலை தமிழ் மகாவித்தியாலயத்திலும் 14.08.1989 வரை மிகச் சிறப்புறப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர் ஒழுக்கம்,கல்வி அடைவுமட்டத்தை உயர்த்துதல் போன்ற பல செயற்பாடுகளில் முன்னின்று பணியாற்றியவர். 26 வருடங்களின் பின்னும் அப்பாடசாலையில் கற்ற மாணவரும் கற்பித்த ஆசிரியர்களும் உணர்வுபூர்வமாகக் கூறுமளவிற்குச் சிறந்த பணியாற்றியவர்.

ஆசிரிய சகோதரத்துவத் தலைவராக இருந்த காலத்தில் ஆசிரியரிகளிடையே சிறந்த முறையில் சகோதரத்துவ உறவு பேணப்படுவதற்கு வித்திட்டவர். சிறந்த நண்பனாகவும் சிறந்த நிர்வாகியாகவும் ஆசிரியர்களது இன்ப துன்பங்களில் பங்காளனாகவும் செயற்பட்டவர். சிறப்பான பணிபுரிந்த பிரதி அதிபரது ஓய்வு காலம் சிறக்க இறைவனைப் பணிகின்றோம்.

திரு.கந்தையா ஜெயவீரசிங்கம்[தொகு]

02- 01- 1984 இல் ஆசிரிய நியமனம் பெற்று 12- 08- 2002 இல் எமது கல்லூரியில் ஆசிரியராக இணைந்துகொண்டார். திரு.கந்தையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 13 வருட காலம் ஆங்கில ஆசிரியராக சிறப்புறப் பணியாற்றி 18-03-2015 அன்று ஓய்வு பெற்றுச் சென்றவர். ஆசிரியராக இல்லப் பொறுப்பாசிரியராக, ஆசிரிய சகோதரத்துவத் தலைவராக எனப் பல்வேறு நிலைகளில் மிகச் சிறந்த பணியாற்றியவர் ஆசிரியர் அவர்கள். ஆங்கில மொழிப் பாடத்தை இடைநிலை, உயர்நிலை வகுப்புக்களில் மாணவர் நிலைமையை நன்கு அறிந்து அவரவர்க்கேற்றவகையில் நகைச்சுவையாகக் கற்பிப்பதில் அவருக்கு நிகராக எவரையும் கூறமுடியாது. பல பாடசாலைகளில் கற்பித்த அனுபவமும் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருடைய கற்பித்தல் செயற்பாடுகளில் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம். ஆசிரிய சகோதரத்துவச் செயலாளராகச் செயற்பட்ட காலத்தில் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களைச் செயற்படுத்தியவர். தான் எடுத்த கருமத்தில் சிறிதும் தளராது நின்று திறம்படப் பணியாற்றும் தனித்துவம் மிக்கவராக விளங்கியதோடு ஆசிரியர்களிடத்தும் மிக்க நட்புரிமையுடனும் அன்புடனும் பழகும் இனிய சுபாவம் உடையவராகவும் விளங்கியவர். நிறைந்த ஆங்கிலப் புலமைவாய்ந்த ஆசிரியரவர்கள் ஆங்கில பாடத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் மாணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தவர். தானும் தன்னைச் சூழ்ந்து இருப்பவர்களையும் மகிழ்ச்சியோடு வைத்திருப்பதில் ஆசிரியர் அவர்களுக்குத் தனியிடம் உண்டு. ஆசிரியர் அவர்களது ஓய்வுக்காலம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமுடையதாகவும் அமைய வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன்.

கல்லூரியின் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் அடிக்கல் நாட்டும் விழா[தொகு]

எமது கல்லூரியில் மகிந்த சிந்தனைத் திட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் ஒரு அம்சமான மகிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த 03.07.2013 அன்று நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் கௌரவ பு.யு.சந்திரசிறி அவர்கள் அன்றைய தினம் மாலை 3.15 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கௌரவ ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்தினார். வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மட்டுமே மகிந்தோதய ஆய்வு கூடம் அமைக்கப்படவுள்ளது என்றும், அந்த வகையிலே எமது கல்லூரியும் இதற்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும் மாணவர்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேற வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தினார். எமது கல்லூரியின் பிரதான மண்டபம் மிகப் பழைய கட்டிடமாகவும், மாணவர்களுக்கு போதுமானதாக இல்லாமை யையும் கண்டு அதனைச் சீரமைப்புச் செய்து சிறந்த முறையில் அமைப்பதற்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் திரு.இளங்கோவன், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு சி.சத்தியசீலன், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.வ.செல்வராசா தென்மராட்சிக் கல்வி வலயப் பணிப்பாளர் திரு.சு.கிருஷ்ணகுமார், மற்றும் மாகாணத் திணைக்கள அதிகாரிகள், தென்மராட்சிக் கல்வி வலயத்தைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், எமது கல்லூரி முன்னைநாள் அதிபர் திரு.இ.கயிலைநாதன், கோட்டக் கல்வி அலுவலர் திரு.கு.சிவானந்தம் தென்மராட்சி பாடசாலைகளின்; அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நலன்விரும்பிகள், பெற்றோர், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மிகச் சிறந்த முறையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாடசாலையின் மாணவர் மன்றங்களும் அமைப்புக்களும்[தொகு]

இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலே எமது கல்லூரியில் உயர்தரக் கலைமன்றம், உயர்தர மாணவர் மன்றம், உயர்தர வர்த்தக மன்றம், உயர்தர விஞ்ஞான மன்றம், இடைநிலைத் தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், இந்துமன்றம் என்பனவும், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், சாரணர் கழகம், பெண்கள் வழிகாட்டி, இன்டரக்ட் கழகம், லியோக்கழகம், சூழல் பாதுகாப்புக்கழகம், புத்தாக்குநர் கழகம், கடேற் (மாணவர்படையணி) விவசாய விஞ்ஞானக் கழகம், வாசகர் வட்டம் ஆகிய அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.

மாணவர் மன்றங்கள்[தொகு]

விஞ்ஞான மன்றம் :

இம்மன்றத்தின் செயற்பாடுகளை நோக்குவோமாயின் மாணவர்களின் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. 2004 ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞான மன்றமானது கல்லூரிப் பூங்காவை அமைப்பதில் கணிசமான பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2007 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவர்களின் செய்முறைத்திறன் விருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் 'செய்முறைகளின் செய்துகாட்டல்' என்ற கண்காட்சியை ஒழுங்கு செய்து சிறப்புற நடத்தியமை.

2008 இல் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞானத்துறையில் சிறந்த பெறுபேறு பெற்ற மணாவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளது.

08.07.2013 - 12.07.2013 வரை விஞ்ஞான வாரம் நிகழ்வை ஒழுங்கு செய்து கண்காட்சி, கருத்தரங்கு, பாடசாலைகளுக்கிடையிலான புதிர்ப்போட்டி என்பவற்றை நடத்தியதுடன் அறிவியல் ஊற்று 5 ஆவது சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. களப்பயணமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இம்மன்றத்தின் செயற்பாடுகள் மேலும் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டால் மேலும் விஞ்ஞானத்துறை முன்னேற்றமடைய வழியேற்படும் என்பதில் ஐயமில்லை.

உயர்தரக் கலைமன்றம்

இம்மன்றத்தினூடாக கலைமுரசு என்ற கையெழுத்துச் சஞ்சிகை 1992 ஆம் ஆண்டிலிருந்து 29 சஞ்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டின் பின் அச்சஞ்சிகை ஆக்கப்பணி இடம்பெறவில்லை. கருத்தரங்குகள், களப்பயணங்கள் இடம்பெற்றுள்ளன.

உயர்தர வர்த்தக மன்றம்

இம்மன்றத்தினர் இந்துவணிகன் என்ற சஞ்சிகை நான்கினை வெளியீடு செய்துள்ளனர். 2014 ஆம் ஆண்டில் 4 ஆவது சஞ்சிகை வெளியிடப்பட்டது. 2012 இல் 'தேசத்தின் மகுடம்' வர்த்தகக் கண்காட்சியில் மாணவர்கள் பங்குபற்றியமை, மன்னாருக்கான களப்பயணம் மற்றும் பாடமேம்பாடு தொடர்பான கருத்தரங்குகள் என்பன இம்மன்றத்தின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்தர மாணவர் மன்றம்

உயர்தர மாணர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிய வகையிலே இம்மன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய நான்கு துறை மாணவர்களின் கூட்டான செயற்பாட்டிலே வருடந்தோறும் ஒன்றுகூடலை நிகழ்த்தி வருகிறது. அண்மைய 3 ஆண்டுகள் இம்மாணவர் ஒன்றுகூடல் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். 2013 இலிருந்து ஐந்தாவது துறையாகிய தொழில்நுட்பத்துறையையும் இணைத்து இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாணவரது தனித்துவமான திறன்கள் வெளிப்படுவதற்கும் செயற்றிறன்மிக்கவராய் உருவாகுவதற்கும் இம்மன்றம் களம் அமைத்துக் கொடுக்கின்றது.

விவசாய விஞ்ஞான மன்றம்

பத்தாண்டு காலப்பகுதியில் கல்லூரியின் சுற்றுப் புறச் சூழல் மிகவும் அழகான முறையில் ஆக்கப்பட்டுள்ளது. 2004 இல் பூங்கா அமைக்கப்பட்டு பூக்கன்றுகள் நாட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. அதன்பின்னர் சுயுயுN பகுதியில் மரங்கள் நாட்டப்பட்டு குளிர்மையும் பசுமையும் நிறைந்த சூழலாய் மிளிர்கின்றது. இச் செயற்பாடுகளைக் கல்லூரியின் விவசாய விஞ்ஞான மன்றம் சிறப்புறச் செய்து வருகின்றது. பாடசாலையின் மதில் சிறப்புற அமைக்கப்பட்ட பின்னர் மதிலுக்கு அரணாகச் சிறந்த முறையில் பூங்கன்றுகளும், அழகுத்தாவரங்களும் நாட்டப்பட்டு அவற்றை மிகவும் சிறந்த முறையிலும் பேணி வருகின்றனர். இம்மன்றத்தினருடன் இணைந்த வகையில் உயர்தர மாணவர்களும் தமது செயற்றிட்டமாகச் சூழலை அழகுபடுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அமைப்புக்கள்[தொகு]

பரியோவான் முதலுதவிச் சங்கம்

மிகக் குறைந்த எண்ணிக்கையினர் 2005 ஃ 2006 ஆம் ஆண்டுகளில் இதில் அங்கத்தவராயிருந்துள்ளனர். 2007 இல் 216 மாணவர்களே உறுப்பினர்களாக இருந்து செயற்பட்ட இச்சங்கத்தில் 2010 ஃ 2011 காலப்பகுதியில் 146 மாணவர் மேலதிகமாகப் பயிற்சி பெற்று இணைந்துள்ளனர். வருடந்தோறும் புதிதாக மாணவர்கள் பயிற்சி பெற்று இணைந்துள்ளனர். 2013 இல் 220 மாணவர் புதிதாகப் பயிற்சி பெற்றனர். மாணவர்களுக்குப் பயிற்சி முடிவில் கொழும்பு தலைமைச் செயலகத்தினால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. பாடசாலை ஆரம்பமாகும், முடிவடையும் வேளைகளில் வீதி யொழுங்குச் செயற்பாடுகளில் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றனர். பாடசாலை நிகழ்வுகளிலும் இவர்களது பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சாரணர் குழு

2007 இல் 64 மாணவர்கள் அங்கத்தினராக இருந்துள்ளனர். 2011 இல் புதிதாக 70 மாணவர்கள் இணைந்து சின்னஞ்சூட்டப் பெற்றனர் 2013 இல் 35 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் புதிதாகச் சின்னஞ் சூட்டப்பட்டு இணைந்து கொண்டனர். ஒவ்வொரு வருடமும் பேடன்பவல் நினைவு தினம் கொண்டாடுவதுடன், சாரணர் ஜம்போறியில் அகில இலங்கை ரீதியாகவும் பங்குபற்றி வருகின்றனர். கொழும்பு நாலந்தாக் கல்லூரியில் நடைபெற்ற நட்புறவுப் பாசறையில் தென்மராட்சிக் கல்வி வலயம் சார்பாக எமதுகல்லூரி மாணவன் ஸ்ரீ.கிறீடி பங்குபற்றி சிறந்த இளம் சாரணர் என்ற சிறப்பைப் பெற்றார். 2012 இல் சாரணர் சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு தின ஆசிய - பசுபிக் 24 ஆவது ஜம்போறியில் எமது சாரணர் குழுவினர் இணைந்து கொண்டனர். 2013 இல் 2014 இலும் இவர்கள் செயற்பாடுகளில் வளர்ச்சிப் போக்கினைக் காண முடிகின்றது.

பெண்கள் வழிகாட்டி

2009 இல் நான்காவது கண்டி கன்பரி நிகழ்வில் பங்குபற்றிச் சிறப்புறப் பணியாற்றியுள்ளது. ஜம்போறி நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளது. 2011 இல் தி.ஆரணி என்ற மாணவி சார்க் அமைப்பு பூட்டானில் ஒழுங்கமைத்த நல்லெண்ணப் பாசறையில் இலங்கை சார்பான ஒரேயொரு தமிழ்மாணவியாகப் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். ஆனால் 2012 இன் பின்னர் இவ் அமைப்பின் செயற்பாடுகள் முன்னேற்றகரமானவையாக அமையவில்லை என்பது ஆவணப்பதிவுகள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது.

லியோக்கழகம்

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 20 மாணவர் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர். அதே ஆண்டில் மேலும் மாணவர்கள் இணைந்து கொண்டதால் 48 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியது. 2007 இல் நீர்கொழும்பு லியோக்கழக அனுசரணையுடன் 35,000 ரூபா பெறுமதியான பாதணிகள் எமது கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 2007 இல் இக்கழகத்தின் சிறந்த செயற்பாட்டிற்காக ஐந்து தேசிய மட்ட விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2007 இல் மேலும் 32 மாணவர்கள் இக்கழகத்தில் இணைந்துள்ளனர். 2008 இன் பின்னர் இதன் செயற்பாடுகள் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லை.

கடேற் அமைப்பு

எமது கல்லூரியில் 2013 இல் இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் தொடர்ச்சியான பயிற்சியினால் மிகச் சிறந்த அமைப்பாகத் திகழ்கின்றது. 2ஆம் லெப்டினன்ட் திரு.பு.உதயகுமார் ஆசிரியரின் வழிகாட்டலில் எமது கல்லூரி மாணவர்களான ஜீ.கபில்ராஜ், சி.சதுர்சன் ஆகியோர் கண்டி றன்தம்பேயில் நடைபெற்ற 20 ஆவது தேசிய மாணவர் படையணிப் பயிற்சியில் பங்குபற்றி 'சார்ஜன்' தரத்தைப் பெற்றுள்ளனர். மேலும் 2014 இல் 25 மாணவர்கள் றன்தம்பேயில் பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளனர். கல்லூரி நிகழ்வுகளின் போது இவர்களின் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. கடேற் அணியை பாடசாலைகளில் மேம்படுத்தும் நோக்கமாக கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிபர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவ இராணுவப் பயிற்சியூடாக எமது அதிபர் திரு.அ.கயிலாயபிள்ளை அவர்கள் கப்டன் தர வரிசையை பாதுகாப்பு அமைச்சு செயலாளரிடமிருந்து பெற்றுள்ளார்.

போட்டிகள்[தொகு]

இக்கல்லூரியில் மாணவர்களின் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

 • தமிழ்மொழிததினப்போட்டி
 • ஆங்கிலமொழித்தினப்போட்டி
 • வணிகப்போட்டி
 • சமூக விஞ்ஞானப்போட்டி
 • கணித வினாடிவினாப்போட்டிகள்
 • கணித ஒலிம்பியாட்போட்டி
 • சமயப்போட்டிகள்உசாத்துணை நூல்கள்[தொகு]

1. 2004 - 2016 ஆம் ஆண்டு வரையான தாமோதரன் ஆண்டு இதழ்கள்

2. தடம் சஞ்சிகை - பருவ இதழ்கள் (2014, 2015, 2016)

3. கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்க வருடாந்த செயற்பாட்டு அறிக்கைகள்

 1. தாமோதரன் ஆண்டு மலர் 2014