சிசிசி ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ivu 1.jpg

மருத்துவத்தில், சிசிசி ஆய்வு (Kidney Ureters Bladder examination - KUB exam.) என்பது வயிறு பகுதி நோய் நிர்ணய சோதனை ஆகும். இது சிறுநீர் சுரப்பி (Kidney), மேல் சிறுநீர்க் குழாய் (Ureter), சிறுநீர் பை (Bladder) போன்ற கழிவகற்ற உறுப்புத் தொகுப்பினை ஒப்புமைக் கூட்டும் சாயப்பொருட்களுடன் ஆராயும் நோயறிகதிரியல் (Diagnostic Radiology) ஆய்வாகும். இப்பகுதியிலுள்ள மருத்துவச் சிக்கல்களை இச்சோதனை தெரிந்துகொள்ள உதவும். கற்கள், புண், புற்று நோய், செயல்படும் முறை போன்ற முக்கிய செயல்பாடுகளை ஆராய பெரிதும் துணைபுரிகிறது. பொதுவாக கதிரியக்கம் இல்லாத ஐயோடின் கலந்த மருந்து ஊசி மூலம் குருதிக் குழாயில் செலுத்தப்படுகிறது. இவ்வாய்வு குருதிக் குழாய் சிறுநீர் சுரப்பி ஆய்வு (IVP- intravenouspylogram) எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிசி_ஆய்வு&oldid=1920843" இருந்து மீள்விக்கப்பட்டது