சிங்கப் பாறை சுரங்கம் (ஹொங்கொங்)
சிங்கப் பாறை சுரங்கம் (ஹொங்கொங்) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சிங்கப் பாறை சுரங்கத்தின் நுழைவாயில் | |||||||||||
சீன எழுத்துமுறை | 獅子山隧道 | ||||||||||
எளிய சீனம் | 狮子山隧道 | ||||||||||
|
சிங்கப் பாறை சுரங்கம் (Lion Rock Tunnel) என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்ட முதல் சுரங்கப் பாதையாகும். இது இரட்டைச் சுரங்கப் பாதைகளைக் கொண்டுள்ளன. கவுலூன் டொங் இற்கு அருகாமையில் புதிய கவுலூண் பகுதியில் இருந்து, புதிய கட்டுப்பாட்டுப் பகுதியில் சா டின் எனும் நகரை இச்சுரங்கப் பாதை இணைக்கிறது. போவதற்கும் வருவதற்கும் என அமைக்கப்பட்டிருக்கும் இந்த இரட்டைச் சுரங்கப் பாதையில், போவதற்கு இரண்டு பாதைக்கோடுகள், வருவதற்கு இரண்டு பாதைக் கோடுகள் என, மொத்தம் நான்கு பாதை கோடுகளைக் கொண்டுள்ளன. இச்சுரங்கப் பாதை சா டின் நகர நுழைவாயில் பகுதியில், சுரங்கத் தீர்வை வரி செலுத்தகங்களைக் கொண்டுள்ளன.
இந்த சிங்கப் பாறை சுரங்கத்தில் ஒரு முறை பயனிப்பதற்கான சுரங்கத் தீர்வை வரி HK$ 8.00 டொலர்கள் ஒரு வாகனத்திற்கு அறவிடப்படுகின்றது.
வரலாறு
[தொகு]இந்த சிங்கப் பாறை சுரங்கம், 1967 நவம்பர் 14 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இது இரட்டை பாதைகளைக் கொண்ட, ஒற்றைக் குழல் சுரங்கமாகும். இந்த சுரங்கப் பாதையின் நீளம் 1.43 கிலோ மீட்டர்களாகும். இந்த சுரங்கத்தின் வடிவமைப்பாளர், யொங் ஹு யொங் (Young Au Young) எனும் பெயர்க்கொண்ட கட்டிடக் கலைஞராவர்.
மேலதிக தகவல்கள்
[தொகு]சுரங்கப் பாதையின் உற்புரம் இருள் நிறைந்ததாக அல்லாமல், சுரங்கப் பாதையின் ஆரம்பம் முதல், முடிவு வரை மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, பயணத்தின் போது இரவு, பகல் எனும் வேறுபாடு இல்லாமல், ஒரே ஒளிக்கோலமாக காட்சியளிக்கும்.[1] சுரங்கத்தின் இரண்டு பக்கச் சுவர்களும் பொருத்துத் தகடுகளால் வடிவமைப்பட்டுள்ளன. சுரங்கத்தின் உள்ளே ஏதேனும் ஆபத்து அல்லது விபத்து நேர்ந்தால், அவசர தேவைகளுக்காக, பக்கச் சுவர்களில் பாதுகாப்பு வழிகள் உள்ளன. அவை அவசரத் தேவையின் போது அதிகாரம் பெற்றவர்களால் மட்டுமே திறக்கக் கூடிய பாதுக்காப்பு வழிகளாகும். மற்றும் அவசர ஒக்சிசன் வசதி, உள்ளேயே முதலுதவி பெட்டிகள், உடனடி தீயணைப்பு சாதனங்கள் என்பனவும் உள்ளன.
இந்த சுரங்கப் பாதையில் ஈருருளி செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் யாரும் உள்ளே நடந்து செல்லவதற்கும் அனுமதி இல்லை. ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் சுரங்கப் பாதையின் பராமறிப்பு பணிகளின் போது ஒறு வழி பாதை மூடப்பட்டு, கண்காணிப்பும், தூய்மைப் படுத்தலும் நடைபெறும்.
இதன் ஐ.எஸ்.ஓ சான்று (ISO 9001 and OHASA18001 - 2004 இல்).