சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி
சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி Zygmunt Florenty Wróblewski | |
---|---|
பிறப்பு | குரோத்னோ, பெலருஸ் | அக்டோபர் 28, 1845
இறப்பு | 16 ஏப்ரல் 1888 கிராக்கோவ், போலந்து | (அகவை 42)
தேசியம் | போலந்து |
துறை | வேதியியல் இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | கீவ் பல்கலைக்கழகம் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | குளிர்வித்தல் திரவமாக்கல் |
சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி (Zygmunt Florenty Wróblewski, 28 அக்டோபர் 1845 – 16 ஏப்ரல் 1888) என்பவர் போலந்து நாட்டு இயற்பியலாளரும், வேதியியலாளரும் ஆவார்.,
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]உருசியப் பேரரசில் குரோத்னோ நகரில் (இன்றைய பெலருசில்) பிறந்தவர் வுரூபிளேவ்ஸ்கி. கீவ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இவர் உருசியப் பேரரசுக்கு எதிராக சனவரி 1863 இல் இடம்பெற்ற கிளர்ச்சியில் பங்குபற்றி ஆறு ஆண்டுகள் வரை மறைவான வாழ்க்கையை மேற்கொண்ட பின்னர், பெர்லின், ஐடெல்பெர்கு நகரங்களில் படிப்பைத் தொடர்ந்தார். மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் 1876 இல் முனைவர் ஆய்வுப் பட்டம் பெற்று ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியரானார். 1880 இல் போலந்து கல்விக் கழகத்தில் உறுப்பினரானார்.
பாரிசில் பேராசிரியர் கையேட்டே என்பவரால் வளிமங்களைக் குளிர்வித்தல் முறையை ஆராய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். கிராக்கோவ் ஜகில்லோனியன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். கிராக்கோவில் வளிமங்களைப் பற்றி படிக்க ஆரம்பித்து விரைவில் கரோல் ஒல்சேவ்ஸ்கியுடன் இணைந்து ஆய்வுகளில் இறங்கினார்.
கார்போனிக் காடியைப் பற்றிய ஆய்வின் போது வுரூபிளேவ்ஸ்கி CO2 ஐதரேட்டைக் கண்டறிந்தார். இது குறித்த அறிக்கையை 1882 இல் சமர்ப்பித்தார்.[1][2][3]
1883 மார்ச் 29 இல் ஒல்சேவ்ஸ்கியுடன் இணைந்து ஆக்சிசனைக் திரவமாக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்தார். அதே ஆண்டு ஏப்ரல் 13 இல் நைதரசனைத் திரவமாக்கினார்.
மறைவு
[தொகு]1888 இல் வுரூபிளேவ்ஸ்கி நீரியத்தின் இயற்பியல் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது புகை போக்கி விளக்கு ஒன்று அவர் மீது வீழ்ந்ததில் பெரும் எரிகாயங்களுக்கு உள்ளானார். கிராக்கோவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ S. Wroblewski (1882 a), "On the combination of carbonic acid and water" , Acad. Sci. Paris, Comptes rendus, 94, pp. 212–213.
- ↑ S. Wroblewski (1882 b), "On the composition of the hydrate of carbonic acid" (in French), Acad. Sci. Paris, ibid., pp. 954–958.
- ↑ S. Wroblewski (1882 c), "On the laws of solubility of carbonic acid in water at high pressures" (பிரெஞ்சு), Acad. Sci. Paris, ibid., pp. 1355–1357.