ஐதரசன் தொழில்நுட்பங்களின் காலக்கோடு
Appearance
ஐதரசன் தொழில்நுட்பங்களின் காலக்கோடு (Timeline of hydrogen technologies) எனும் இக்கட்டுரையில் ஐதரசனை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்ட ஆண்டுகள் ஏறுவரிசையில் தரப்பட்டுச் சிறு குறிப்புக்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.
காலக்கோடு
[தொகு]1600கள்
[தொகு]- 1625 - ஹைட்ரஜன் என்பதன் முதல் வரையறுப்பு ஜொஹான் பாப்டிஸ்டா வான் ஹெல்மோன்ட்டினால் தற்பட்டது. "வளிமம்" (வாயு; gas) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்.
- 1650 - தியோடர் டி மேயெர்ன், நீர்த்த கந்தக அமிலத்தை இரும்பின் மீது வினைபுரியச் செய்து வளிமம் அல்லது "எரியாக் காற்று" (inflammable air) என்பதைப் பெற்றார்.
- 1662 - பாயிலின் விதி (அழுத்தத்தையும் கனஅளவையும் தொடர்புறுத்தும் வளிம விதி)
- 1670 - இராபர்ட் பாயில் உலோகங்களை (மாழை) புளிமங்களுடன் (acids) வினைபுரியச் செய்து ஐட்ரசனைப் பெற்றார்.
- 1672 - "சுடருக்கும் காற்றுக்கும் இடையிலான உறவை விளக்கும் புதிய ஆய்வுகள்" (New Experiments touching the Relation between Flame and Air) இராபர்ட் பாய்லேவினால் எழுதப்பட்டது.
- 1679 - டெனிஸ் பாபின் - பாதுகாப்புத் திறப்பிதழ் (safety valve)
1700கள்
[தொகு]- 1700 - நிகோலஸ் லேமெரி என்பவர் கந்தகக் காடி/இரும்பு வினையில் உற்பத்தியான வளிமம் (ஹைட்ரஜன்) காற்றில் வெடிக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.
- 1755 - பல்வேறு வளிமங்கள் இருப்பதை ஜோசப் பிளாக் உறுதி செய்தார் / உள்ளுறை வெப்பம் (மறை வெப்பம்)
- 1766 - "செயற்கைக் காற்றுகள்" (On Factitious Airs) - எரியணுக்கள் நீக்கப்பட்ட காற்று" என்பதை துத்தநாகத்தை ஐட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து காற்றை விட 7 முதல் 11 மடங்கு இலேசான ஒரு வளிமத்தைப் பிரித்தெடுத்தார்..
- 1774 - ஜோசப் பிரீஸ்ட்லி ஆக்சிசனைப் பிரித்தெடுத்து வகைப்படுத்தினார்.
- 1780 - ஃபெலிஸ் ஃபோன்டானா நீர் வளிம மாற்று வினையைக் கண்டறிந்தார்.
- 1783 - ஆன்டோய்ன் லவோய்சியர் ஹைட்ரஜனுக்குப் பெயரளித்தார். (கிரீக்கு: hydro = நீர், genes = -இலிருந்து பிறந்த)
- 1783 - ஜாக்குவெஸ் சார்லெஸ் தனது முதல் ஹைட்ரஜன் வளிக்கூடான (balloon) "லா சார்லியெர்" (La Charlière) என்பதில் பறந்தார்.
- 1783 - அந்துவான் இலவாசியே என்பவரும் பியர் சிமோன் இலப்லாசு என்பவரும் ஹைட்ரஜனின் எரிதன்மையை பனிக்கட்டி கலோரிமானி கொண்டு அளந்தனர்.
- 1784 - ஜீன் பியெர்ரி ப்ளஞ்சார்ட் என்பவர் ஹைட்ரஜன் வளிக்கூடு மூலம் ஒரு மென்வானூர்தி உருவாக்கினார், ஆனால் அது பறக்கவில்லை.
- 1784 - இல்வாசியே மாய்ஸ்னியர் இரும்பு-நீராவி செயல்முறை கண்டறியப்பட்டது.[1] இதில் நீராவியை 600 °C என்ற செஞ்சூட்டு நிலையிலுள்ள இரும்பின் மீது பாய்ச்சி ஹைட்ரஜன் பெறப்பட்டது.எஆசு:10.1080/00033798300200381.
- 1785 - ஜீன்-ஃப்ராங்கோயிஸ் பிலாட்ரெ டி ரோசியெர் கலப்பின ரோசியெர் வளிக்கூட்டை (balloon) உருவாக்கினார்.
- 1787 - சார்லசின் விதி (கன அளவையும் வெப்பநிலையையும் தொடர்புறுத்தும் வளிம விதி)
- 1789 - ஜான் ருடால்ஃப் டெய்மானும் ஆட்ரியான் பேட்ஸ் வான் ட்ரூஸ்ட்விச்சுக்கும் ஒரு நிலைமின் இயந்திரத்தையும் லேய்ட்ன் கொள்கலனையும் கொண்டு தண்ணீரை மின்னாற்பகுப்பு செய்தனர்.