உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்காசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்காசோ
1880களில் சிக்காசோக்கள்
மொத்த மக்கள்தொகை
(38,000 [1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஐக்கிய அமெரிக்கா (ஒக்லஹோமா, மிசிசிப்பி, லூசியானா)
மொழி(கள்)
ஆங்கிலம், சிக்காசோ
சமயங்கள்
புரட்டஸ்தாந்தம், பிற
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தொல்குடி அமெரிக்கர், ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள், சொக்டோ

சிக்காசோ ஐக்கிய அமெரிக்காவில் வாழும் தொல்குடி அமெரிக்க இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முன்னர் அலபாமாவின், ஹண்ட்ஸ்வில் பகுதிக்கு மேற்கில் மிசிசிப்பி, தென்னசிப் பகுதிகளில் அமைந்திருந்த தென்னசி ஆற்றோரம் வாழ்ந்து வந்தனர். ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இவர்கள் அங்கிருந்து கிழக்காகச் சென்று, மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். சிக்சோக்கள், முதல் ஐரோப்பியர் வருகையில் இருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவுக்குத் துரத்தப்படும் வரை வடகிழக்கு மிசிசிப்பியில் வாழ்ந்து வந்ததாகவே எல்லா வரலாற்றுப் பதிவுகளும் குறிப்பிடுகின்றன. இவர்கள், சிக்காசோ மொழி போன்ற ஒரு மொழியைப் பேசும் சொக்ட்டோக்களுக்கு உறவுடையவர்கள். இவ்விரு மொழிகளும் சேர்ந்து முஸ்கோஜிய மொழிகளின் மேற்குக் குழுவை உருவாக்குகின்றன.

சிக்காசோக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். இப்பிரிவுகள், இம்ப்சக்தயா, இஞ்சுத்வாலிப்பா என்பனவாகும். இந்தியர் அகற்றல் சட்டத்தின் அடிப்படையில் ஒக்லஹோமாவுக்கு அகற்றப்பட்ட ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் இக் குழுவினரும் அடங்குவர். இவ்வினக்குழுவினர் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களுள் 13 ஆவது பெரிய பழங்குடியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்காசோ&oldid=2712868" இலிருந்து மீள்விக்கப்பட்டது