உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்காசோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்காசோ மொழி
முஸ்கோஜியம்
  • மேற்கு முஸ்கோஜியம்
    • சிக்காசோ மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2nai
ISO 639-3cic

சிக்காசோ மொழி முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தொல்குடி அமெரிக்க மொழியாகும். ஒட்டுநிலை மொழியாகிய இது எழுவாய் செயப்படுபொருள் பயனிலை என்னும் ஒழுங்கையுடைய மொழியாகும். இம்மொழி, சொக்ட்டோ மொழிக்கு நெருங்கிய உறவுடையது எனினும், இவற்றில் ஒன்றைப் பேசுவோர் மற்றதை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும் என்பதற்கில்லை. தற்போது தென்கிழக்கு ஒக்லஹோமாவில் அடாவைச் சுற்றிய பகுதிகளில் வாழ்ந்து வரும் சிக்காசோ பழங்குடியினர் இம் மொழியைப் பேசுகின்றனர்.

ஒலிகள்

[தொகு]

மெய்யொலிகள்

[தொகு]

சிக்காசோ மொழியில் 16 மெய்யொலிகள் உள்ளன. கீழுள்ள அட்டவணையில் மெய்யொலிகள் ஒலியெழுத்தாக எழுதப்பட்டுள்ளன. ஒலியெழுத்து, அனைத்துலக ஒலியியல் எழுத்து முறையிலிருந்து வேறுபடும்போது, ஒவ்வொரு மெய்யொலியினதும் ஒலியியல் குறிகள் அனைத்துலக ஒலியியல் எழுத்துக்களிலும் தரப்பட்டுள்ளன.

  இதழொலி நுனியண்ணம் பின்-நுனி-
யண்ணம்
மெல்லண்ணம் குரல்வளை-
யொலி
நடுவண் பிரிவழி-
யொலி
மூக்கொலி m n        
வெடிப்பொலி p   b t     k ' /ʔ/
வெடிப்புரசொலி     ch /tʃ/    
உரசொலி f s lh /ɬ/ sh /ʃ/   h
உயிர்ப்போலி     l y /j/ w  
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்காசோ_மொழி&oldid=2081703" இலிருந்து மீள்விக்கப்பட்டது