சாலியன்ட் (புவியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமீபியா நாட்டின் வடகிழக்கிலுள்ள கேப்ரிவி நிலப்பகுதி
இந்திய-சிக்கிம் எல்லை

சாலியன்ட், புவியியல் அல்லது தனி நிலப்புறநீட்சி (Salient (geography), panhandle[1] or bootheel) என்பது நாடுகளுக்கிடையே இருக்கும், தனித்துவமான நில நீட்சி ஆகும்.[2] தீபகற்பம் என்பது முப்புறமும் நீரும், ஒரு புறம் நிலமும் சூழ்ந்து இருக்கும். இத்தனி நிலப்புறநீட்சியானது, குறைந்த பட்சம் இருபுறம் வெவ்வேறு சட்ட ஆட்சி நடத்தும், இரு நாடுகளுக்கிடையே உள்ள நிலப்பகுதியாகும். இச்சொல்லானது, படைத்துறையினர் பயன்படுத்தும் கலைச்சொல்லில் (Salient (military)) இருந்து பிறந்ததாகும். வெவ்வேறு நில ஆளுமை ஆட்சி நடத்துபவர்களுக்கு இடையே பொருளாதார, இட அமைப்பியல் தேவைகளுக்காக இணைந்து செயற்பட உதவுகிறது. உலகின் பல நாடுகளுக்கிடைய இத்தகைய நிலப்பகுதிகள் வேறுபட்ட நாடுகளுக்கு இடையே நிருவாக ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் சிக்கிம் எல்லையில் இத்தகைய பகுதி உள்ளதைக் கூறலம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலியன்ட்_(புவியியல்)&oldid=3893741" இலிருந்து மீள்விக்கப்பட்டது