சாலினி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாலினி சிங் (Shalini Singh) ஓர் இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். இவர், தில்லியில் தி வீக்லியின் முதன்மை நிருபராக இருந்தார். பாலினம் மற்றும் பெண்கள் பிரச்சினைகள், கலைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல செய்தி அம்சங்கள் மற்றும் சமூகப் போக்குகள் குறித்தும் எழுதினார். [1] 2010 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டுறவு மையத்தில், கோவாவில் [2] சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் திட்டமிடப்படாத சுற்றுலாவால் ஏற்பட்ட அழிவுகளை வெளிக்கொண்டுவந்தார்.

இவர் கவுண்டர்மீடியா அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர் மற்றும் கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தில் தொடர்ந்து பங்களிப்பவராவார். [3]

2017-2018 ஆம் ஆண்டிற்கான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைக்கான நீமன் அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்தார். [4]

விருதுகள்[தொகு]

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த இவரது பணிக்காக 2013 இல் தி இந்தியன் எக்ஸ்பிரசின் ராம்நாத் கோயங்கா விருதையும் [5] மற்றும் 2011 இல் தி ஸ்டேட்ஸ்மேன் வழங்கிய முதல் குசுரோ இரானி பரிசையும் பெற்றார் [6]

குறிப்புகள்[தொகு]

  1. "Author: Shalani Singh". http://www.theweek.in/authors.html?author=Shalini-Singh. 
  2. Singh, Shalini (10 June 2014). "Is India's Sunshine State Gouging Itself Out?".
  3. "கவுண்டர்மீடியா அறக்கட்டளை".
  4. "alumni of neeman".
  5. "Hindustan Times journalists win Ramnath Goenka award". Hindustan Times. 24 July 2013. http://www.hindustantimes.com/delhi/hindustan-times-journalists-win-ramnath-goenka-award/story-K2s50OE1CyRnLPYMfOACWO.html. 
  6. "IE correspondent wins first prize for rural reporting". The Indian Express. 17 September 2011. http://archive.indianexpress.com/news/ie-correspondent-wins-first-prize-for-rural-reporting/847894/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலினி_சிங்&oldid=3809572" இலிருந்து மீள்விக்கப்பட்டது