உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லஸ்-யூஜின் டெலானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லஸ்-யூஜின் டெலானே
சார்லஸ்-யூஜின் டெலானே
பிறப்பு(1816-04-09)9 ஏப்ரல் 1816
லுசிக்னி சர் பார்சு,பிரான்சு
இறப்பு5 ஆகத்து 1872(1872-08-05) (அகவை 56)
செர்பர்கு,பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
துறைவானியல்
வான இயக்கவியல்
பணியிடங்கள்பாரிஸ் கண்காணிப்பகம்
அறியப்படுவதுநிலவின் இயக்கக்கோட்பாடு,கோள்களின் இயக்கக் கோட்பாடு

சார்லஸ்-யூஜின் டெலானே (பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ʃaʁl øʒɛn dəlonɛ]; 9 ஏப்ரல் 1816 – 5 ஆகஸ்ட் 1872) ஒரு பிரெஞ்சு வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். அவரது சந்திரனின் இயக்கம் குறித்த ஆய்வுகள் கோள்களின் இயக்கக் கோட்பாடுகள் ஆகியவற்றால் அறியப்படுபவர். தனது இருபது வருட ஆய்வில் சந்திரனின் கோட்பாடு குறித்த இரண்டு ஆய்வுத் தொகுதிகளை வெளியிட்டார். நிலவின் தீர்க்கரேகை, அட்சரேகை மற்றும் இடமாறு ஆகியவற்றை எல்லையற்றதொடர்களாகக் கண்டறிந்தார். இவரது ஆய்வுகள் வானியல், கணிதம் ஆகிய இரண்டையும் முன்னேற்றுவதில் முக்கியமானவை.[1]

வாழ்க்கை[தொகு]

சார்லஸ் யூஜின் பிரான்சிலுள்ள லுசிக்னி சர் பார்சுவில், ஜாக்குஸ் ஹூபர்ட் டெலனே- கேட்டரின் சாய்ஸ்லெட் ஆகியோருக்கு பிறந்தார்,[2] டெலானே சோர்போனில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ல் ஜீன்-பாப்திஸ்ட் பயோட்டின் கீழ் படித்தார். சந்திரனின் இயக்கவியல் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டார். அவர் 1860 மற்றும் 1867 ஆம் ஆண்டுகளில் 900 பக்கங்கள் கொண்ட தலைப்பில் இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். சந்திரனின் நிலையைக் கண்டறிவதற்கான அவரது இடையூற்ருக் கோட்பாடு வெளிப்பாடு நடைமுறைப் பயன்பாட்டிற்கு மிகவும் மெதுவாக ஒன்றிணைந்தது, ஆனால் செயல்பாட்டு பகுப்பாய்வு [3] மற்றும் கணினி இயற்கணிதம் ஆகியவற்றின் வளர்ச்சியில் ஒரு ஊக்கியாக இருந்தது.[4]

டெலானே 1870 இல் பாரிஸ் ஆய்வகத்தின் இயக்குநரானார், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் செர்போர்க் அருகே படகு விபத்தில் மூழ்கினார்.[3] அவரைத் தொடர்ந்து அகாடமியில் ஜீன் கிளாட் பொக்கே. பீட்டர் குத்ரி டெய்ட்ஆகியோர் இவரைப் பின்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டனர். பீட்டர் குத்ரி டெய்ட் 1867 இல்வெளியிட்ட தனது 244 பக்கங்கள் கொன்ட புத்தகத்திற்கு டெலானேயின் நினைவாக டிடோனியா என்று பெயரிட்டார்.

சிறப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Obituary: M. Charles E. Delaunay". MNRAS 33: 203–209. February 1873. doi:10.1093/mnras/33.4.190. Bibcode: 1873MNRAS..33..190.. http://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015065215124;view=1up;seq=227. 
  2. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  3. 3.0 3.1 O'Connor & Edmund
  4. R. Pavelle, M. Rothstein and J. Fitch, "Computer Algebra", Scientific American, 245 (6), pp.102-113 (December 1981)
  5. Gold Medal Winners (PDF), Royal Astronomical Society, archived from the original (PDF) on 24 September 2015, பார்க்கப்பட்ட நாள் 4 November 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்-யூஜின்_டெலானே&oldid=3807054" இலிருந்து மீள்விக்கப்பட்டது