சார்பூட்ட உயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தன்னூட்ட உயிரிகளுக்கும், சார்பூட்ட உயிரிகளுக்கும் இடையிலான சுற்றுத் தொடர்பின் ஒரு பார்வை.

சார்பூட்ட உயிரி (heterotroph) என்பது, கரிம நிலைப்படுத்தம் செய்ய முடியாததும், தனது வளர்ச்சிக்காகக் கரிமச் சேர்மங்களில் இருந்து கரிமத்தைப் பெறுவனவுமான உயிரியைக் குறிக்கும்.[1][2] சார்பூட்ட உயிரிகள் மேற்படி கரிமச் சேர்மங்களை தன்னூட்ட உயிரிகளையோ, பிற சார்பூட்ட உயிரிகளையோ உண்பதன்மூலம் பெறுகின்றன. அவை எவ்வாறு ஆற்றலைப் பெறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு அவற்றை மேலும் வகைகளாகப் பிரிக்க முடியும். சார்பூட்ட உயிரி ஆற்றலை ஒளியில் இருந்து பெறுமானால் அது ஒளிச்சார்பூட்ட உயிரி எனப்படும். அது வேதியியல் ஆற்றலைப் பயன்படுத்துமானால் அவ்வுயிரியை வேதிச்சார்பூட்ட உயிரி என்பர்.

சூரிய ஒளி அல்லது கரிமமில் சேர்மங்களைப் பயன்படுத்தி காபோவைதரேட்டு, கொழுப்பு, புரோட்டீன் போன்ற கரிமச் சேர்மங்களை உருவாக்கும் தன்னூட்ட உயிரிகளிலிருந்து சார்பூட்ட உயிரிகள் வேறுபட்டவை. இவ்வாறு தன்னூட்ட உயிரிகள் உருவாக்கும் கரிமச் சேர்மங்கள் தன்னூட்ட உயிரிகளுக்கு வேண்டிய ஆற்றலைத் தருவதுபோல், அவற்றை உணவாகக் கொள்ளும் சார்பூட்ட உயிரிகளுக்கும் ஆற்றலை அளிக்கின்றன. உலகில் வாழுகின்ற உயிரினங்களில் 95% அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள், பங்கசுக்கள், பெரும்பாலான பக்டீரியாக்கள் உள்ளிட்டவை சார்பூட்ட உயிரிகளே.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "heterotroph".
  2. Hogg, Stuart (2013). Essential Microbiology (2nd ). Wiley-Blackwell. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-119-97890-9. 
  3. "How Cells Harvest Energy" பரணிடப்பட்டது 2012-07-31 at the வந்தவழி இயந்திரம். McGraw-Hill Higher Education.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்பூட்ட_உயிரி&oldid=3243736" இருந்து மீள்விக்கப்பட்டது