சாரணர் இயக்கத்தின் உலக அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரணர் இயக்கத்தின் உலக அமைப்பு
தலைமையகம்
சட்டப்பூர்வ இருக்கை: ஜெனீவா, சுவிட்சர்லாந்து

செயல்பாட்டுத் தலைமையகம்: கோலாலம்பூர், மலேசியா

நாடுசர்வதேச அளவில்
நிறுவப்பட்டல்1922[1][2]
Membership
 • 174 அமைப்புகள்[3]
 • 43 மில்லியன் பங்கேற்பாளர்கள் (2021)[4]
பொதுச் செயலர்அகமது ஆலந்தவி[5][6]
உலக சாரணிய குழுத் தலைவர்எட்வர்டு ஆண்ட்ரூ சேப்மன்
வலைத்தளம்
http://www.scout.org
Scouting portal

சாரணர் இயக்கத்தின் உலக அமைப்பு (World Organization of the Scout Movement சுருக்கமாக WOSM / /ˈwʊzəm// ) என்பது மிகப்பெரிய சர்வதேச சாரணிய அமைப்பாகும். இது மொத்தம் 174 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சாரணர் அமைப்புகளாக உள்ளனர், இதில் 43 மில்லியன் பங்கேற்பாளர்கள் உள்ளனர். இந்த அமைப்பு 1922 இல் நிறுவப்பட்டது. [1] [2] இதன் செயல்பாட்டுத் தலைமையகம் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ளது இதன் சட்டப்பூர்வ இருக்கை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது. இது பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் உலக சங்கத்தின் (WAGGGS) நேரிணையாகும்.

"சாரணர் வாக்குறுதி மற்றும் சாரணியச் சட்டத்தின் அடிப்படையில் இளைஞர்களின் கல்விக்கு பங்களிப்பது, மக்களை சுய சார்புடையவர்களாகவும், சமூகத்தில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் சிறந்த உலகத்தை உருவாக்க உதவுவதும்" இதன் முக்கிய நோக்கமாகும். [7] [8]

இது ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின் (ECOSOC) பொது ஆலோசனை நிலையிலுள்ளஒரு அரசு சார்பற்ற அமைப்பாகும் . [9]

வரலாறு[தொகு]

1920 இல் இலண்டனில் உள்ள ஒலிம்பியாவில் 1வது உலக சாரணர் ஜம்போறியின் போது நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் விளைவாக, அங்குள்ள தலைவர்கள் ஆண்கள் சாரணர்கள் சர்வதேச பணியகத்தை (BSIB) உருவாக்க ஒப்புக்கொண்டனர். இலண்டனில் உள்ள 25 பக்கிங்ஹாம் அரண்மனை சாலையில் இல் ஓர் அலுவலகம் நிறுவப்பட்டது, மேலும் ஐக்கிய இராச்சியத்தின் சாரணர் சங்கத்தின் அப்போதைய சர்வதேச ஆணையர் இயூபர்ட் எஸ். மார்ட்டின் கௌரவ இயக்குநராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணியகத்தில் 1922 இல் பாரிஸில் இரண்டாவது சர்வதேச மாநாட்டைத் தயாரிக்கத் திட்டமிட்டனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Constitution of the World Organization of the Scout Movement" (PDF). World Organization of the Scout Movement. January 2011. p. 3. Archived from the original (PDF) on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 February 2015.
 2. 2.0 2.1 2.2 Running a Scout Group. The Boy Scouts Association.
 3. "Scoutisme Congolais joins global Scout Movement as 174th Member Organization". சாரணர் இயக்கத்தின் உலக அமைப்பு. August 9, 2023.
 4. "Final WOSM Census 2022" (PDF). 31 May 2022.
 5. "Next Secretary General – World Organization of the Scout Movement". scout.org. Archived from the original on 16 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
 6. "Alhendawi announces departure – Office of the Secretary-General's Envoy on Youth". United Nations. Archived from the original on 4 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
 7. "Mission". World Organization of the Scout Movement. 2017. Archived from the original on 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2017.
 8. "The Mission of Scouting". World Organization of the Scout Movement. 2007. Archived from the original on 29 June 2009. பார்க்கப்பட்ட நாள் 30 May 2007.
 9. "WOSM and the UN". World Organization of the Scout Movement. 2016. Archived from the original on 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.

மேலும் படிக்க[தொகு]

 • உலக சாரணர் பற்றிய உண்மைகள், பாய் ஸ்கவுட்ஸ் சர்வதேச பணியகம், ஒட்டாவா, கனடா, 1961
 • லாஸ்லோ நாகி, 250 மில்லியன் சாரணர்கள், உலக சாரணர் அறக்கட்டளை மற்றும் டார்ட்நெல் பப்ளிஷர்ஸ், 1985
 • எட்வார்ட் வல்லோரி, "உலக சாரணர்: உலகளாவிய குடியுரிமைக்கான கல்வி", பால்கிரேவ் மேக்மில்லன், நியூயார்க், 2012

வெளி இணைப்புகள்[தொகு]