சாரகுணப் பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாரகுணப் பாண்டியன் என்பவன் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காட்டும் கதையில் வரும் ஒரு புராணப்பாண்டியன். அனாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பில் சென்றபோது திலோத்தமை என்னும் செய்வமகளைக் கண்டு தேரிலேயே கூடினானாம். அவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன். சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் ஐந்து இசைத்தமிழ் நூல்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று இசைநுணுக்கம். இது சிகண்டி என்பவரால் சாரகுமாரன் இசை அறிதற்குச் செய்யப்பட்டது.[1] மேலும் இந்நூல் இடைச்சங்க இலக்கண நூலாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.[2]

புதினம்[தொகு]

நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் நூலில் சாரகுணனின் கதாப்பாத்திரமே நாயகனாக வருகிறது. அதன்படி இவர் இனிய குரல் வளம் கொண்டவராதலால் சாரகுணன் எனப் பெயர் பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005
  2. சங்கம்-முச்சங்கம்
  3. http://www.tamilvu.org/library/nationalized/pdf/48-NA.PARTHASARATHI/KAPADAPURAM.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரகுணப்_பாண்டியன்&oldid=3243663" இருந்து மீள்விக்கப்பட்டது