சாய் ஆறு (ஆதி கங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாய் ஆறு (சாய் சேது)(Sai River), ஆதி கங்கை[1] என்றும் அழைக்கப்படுகிறது. சாய் ஆறு இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோமதி ஆற்றின் துணை ஆறாகும்.[2]

நிலவியல்[தொகு]

சாய் ஆறு ஹார்தோய் மாவட்டத்தில் உள்ள பார்சோய் என்ற கிராமத்தில் உள்ள மலை உச்சியில் பிஜ்வான் ஜீல் என்ற பரந்த குளத்தில் உருவாகிறது. இந்த ஆறு இலக்னோவினை உன்னாவோவிலிருந்து பிரிக்கிறது. இந்த ஆறு தெற்கு நோக்கி ராபெர்லி பகுதிக்கு வருகிறது. பின்னர் மேற்கே பிரதாப்கர் மற்றும் ஜான்பூருக்கும் கிழக்கு திருப்பி குளிசுசார்நாத்திற்கு செல்கிறது. அங்கிருந்து மற்றுமொரு சண்டிகா தம் பகுதிக்குச் செல்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் சாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. சனி தேவ் தாம் சாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பர்சாதிபூரில் அமைந்துள்ளது.

கலாச்சாரம்[தொகு]

பக்தர்கள் சாய் ஆற்றில் குளித்துவிட்டு, பாபா குய்சர்நாத்தை வணங்குகிறார்கள். இது இந்து சமயத்தின் மிகவும் புனிதமான நதிகளில் ஒன்றாகும். இது புராணங்களிலும்[3] கோஸ்வாமி துளசிதாசரின் ராமசரிதமனாஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இதன் மத முக்கியத்துவத்துடன், இந்த நதி இதன் கரையில் வசிக்கும் இலட்சக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாகும். இவர்கள் தங்களின் அன்றாட பயன்பாடுகளுக்காக இந்த ஆற்றினைச் சார்ந்துள்ளனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சாய் ஆறு, Pratapgarh". tamil.nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  2. "Gomti River". 117.252.14.242. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  3. "Ramayan-fame Sai river needs a new lease of life". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  4. "Sai River, Pratapgarh". www.nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_ஆறு_(ஆதி_கங்கை)&oldid=3183130" இலிருந்து மீள்விக்கப்பட்டது