உள்ளடக்கத்துக்குச் செல்

சாய்சுமின் லம்போரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய்சுமின் லம்போரியா
சாய்சுமின் லம்போரியா
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியா
பிறப்பு30 ஆகத்து 2001 (2001-08-30) (அகவை 23)[1]
பிவானி, அரியானா[2]
உயரம்174 cm (5.71 அடி)
விளையாட்டு
விளையாட்டுகுத்துச்சண்டை
பதக்கத் தகவல்கள்

சாய்சுமின் லம்போரியா (பிறப்பு: 30 ஆகஸ்ட் 2001) இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஓர் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் இலகு ரக எடைப்பிரிவில் (60 கிலோ) பிரிவில் போட்டியிட்டு 2022 பிர்மிங்காமில் நடந்த 2022 பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

லம்போரியா ஓர் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது கொள்ளு தாத்தா ஹவா சிங் ஒரு குத்துச்சண்டை வீரர் மற்றும் இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். அவரது தாத்தா கேப்டன் சந்தர் பான் லம்போரியா ஒரு மல்யுத்த வீரர். குத்துச்சண்டையில் தேசிய சாம்பியன்களான இவரது மாமாக்கள் சந்தீப் சிங் மற்றும் பர்விந்தர் சிங் ஆகியோரால் இவர் பயிற்றுவிக்கப்பட்டார்.

குத்துச்சண்டை

[தொகு]

லம்போரியா இலகு ரக எடைப்பிரிவில் (60 கிலோ) பிரிவில் போட்டியிட்டு 2022 பிர்மிங்காமில் நடந்த 2022 பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்சுமின்_லம்போரியா&oldid=3909801" இலிருந்து மீள்விக்கப்பட்டது