சாப்பூர் அணை
சாப்பூர் அணை Shahpur Dam | |
---|---|
நாடு | பாக்கித்தான் |
அமைவிடம் | அட்டோக் மாவட்டம், பஞ்சாப் |
புவியியல் ஆள்கூற்று | 33°37′N 72°41′E / 33.617°N 72.683°E |
நிலை | பயன்பாட்டில் |
திறந்தது | 1986 |
கட்ட ஆன செலவு | 36.5 மில்லியன் பாக்கித்தான் ரூபாய் |
உரிமையாளர்(கள்) | சிறிய அணைகள் நிறுவனம், பஞ்சாப் அரசு |
அணையும் வழிகாலும் | |
வகை | கற்காரை ஈர்ப்பு |
உயரம் | 26 m (85 அடி) |
நீளம் | 93.26 m (306 அடி) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 17,620,000 m3 (14,285 acre⋅ft) |
சாப்பூர் அணை (Shahpur Dam) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாபில் உள்ள நந்தனா ஆற்றில் அட்டாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 26 மீட்டர் (85 அடி) உயரம் கொண்ட இந்த அணை 1,76.20.000 கனமீட்டர் கொள்ளளவு கொண்டதாகும். சுற்றுப்புறங்களில் சமீபத்திய வளர்ச்சியுடன், அணை இப்போது உள்ளூர் மக்களுக்கும் அருகிலுள்ள நகரங்களின் மக்களுக்கும் ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
அமைவிடம்
[தொகு]அட்டாக் மாவட்டத்தில் கலா சிட்டா மலைத்தொடருக்கு அருகிலுள்ள பதே யாங்கு தாலுக்காவில் அணை கட்டப்பட்ட்டுள்ளது. இசுலாமாபாத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் பதே யாங்கிலிருந்து வடக்கில் 8 கிலோமீட்டர் தொலைவிலும் சாப்பூர் அணை உள்ளது. 1982 ஆம் ஆண்டு பஞ்சாப் அரசாங்கத்தின் சிறிய அணைகள் நிறுவனம் அணையை வடிவமைத்து கட்டியது. 1986 ஆம் ஆண்டு 36.5 மில்லியன் பாக்கித்தான் ரூபாய் செலவில் அணையின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maintenance and Operational Activities in the Command Area of Shahpur Dam" (PDF). Irrigation Management Institute. Archived from the original (PDF) on 3 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 August 2012.