சாபர் சைபுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாபர் சைஃபுல்லா சாங்லிகர் (Zafar Saifullah Sanglikar) 1993 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் மந்திரிசபை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் ஆவார்.[1][2] 1936 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.

சாபர் சைபுல்லா இந்திய நிர்வாக சேவை அதிகாரிகளின் கர்நாடக தொகுதியைச் சேர்ந்தவர்.[3][4] அமைச்சரவை செயலாளராகப் பணியாற்றுவதற்கு முன்பு, இவர் கர்நாடக அரசின் இந்திய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர்,[4] அரியானா ஆளுநரின் ஆலோசகர்,[5] கிராமப்புற மேம்பாட்டுச் செயலர், கர்நாடகா அரசு,[6] உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.[6][7]

2008 ஆம் ஆண்டில் சைஃபுல்லா சுலைமானிசு – லிவ்சு லெசு ஆர்டினரி என்ற புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டார். இந்த புத்தகத்தை இந்திய துணை சனாதிபதி அமீது அன்சாரி வெளியிட்டார்.[8]

இந்தியாவின் அமைச்சரவை செயலாளராக பணியாற்றிய முதல் முசுலீம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சாபர் சைபுல்லா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ex-cabinet secretary Zafar Saifullah is dead". New Kerala. 30 July 2014. பார்க்கப்பட்ட நாள் 12 April 2015.
  2. Television in India: Satellites, Politics and Cultural Change. 30 May 2008. 
  3. "Smaller states: Does size matter?". 2 October 1998. http://www.rediff.com/news/1998/oct/02states.htm. 
  4. 4.0 4.1 Minorities Commission : minor role in major affairs. 
  5. Data India. New Delhi: Press Trust of India. p. 35. பன்னாட்டுத் தர தொடர் எண்:0377-6832. இணையக் கணினி நூலக மையம்:1797778. 
  6. 6.0 6.1 "Karnataka". இந்தியா டுடே (Delhi: Living Media) 6. 1981. பன்னாட்டுத் தர தொடர் எண்:1544-6689. இணையக் கணினி நூலக மையம்:40894687. 
  7. "Saifullah, Zafar: Brief Biography". Reuters. https://www.reuters.com/finance/stocks/officerProfile?symbol=CCLP.BO&officerId=959938. 
  8. "Vice President Releases a Book 'Sulaimanis -Lives Less Ordinary'". Press Information Bureau, Government of India. 1 September 2008. பார்க்கப்பட்ட நாள் 22 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபர்_சைபுல்லா&oldid=3920500" இலிருந்து மீள்விக்கப்பட்டது