சான் ஓசே பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சான் ஓசே பல்கலைக்கழகம் (San Jose State University), அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே நகரத்தில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 154 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள இப்பல்கலைக்கழகத்தில், முப்பதாயிரத்திற்கு மேலான மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பயின்று வருகின்றனர்.

அருகிலுள்ள சிலிகான் பள்ளத்தாக்கு (மென்பொருள்) நிறுவனங்கள் இங்கே பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு வளாகங்கள் சொந்தமாகும். தெற்கு வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டு அரங்கம் அமைந்து மாணவர்களுக்குப் பயன்படுகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் அறிவியல், வேதியியல், இயற்பியல், சமூகவியல், விலங்கியல், தாவரவியல், பொறியியல் (மென்பொருள் மற்றும் பல), கலைக் கல்லூரி, இலக்கியம் மற்றும் இதழியல் சம்பந்தப்பட்ட படிப்பைக் கற்கலாம். இங்கே 70களில் புகழ்பெற்ற நடிகர் குர்த்வூத் ஸ்மித் படித்தார்.