சான்சிபார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:10, 10 சூன் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (Wiki tamil 100 பக்கம் சன்சிபார்சான்சிபார் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)
சன்சிபாரின் சின்னம்
சன்சிபாரின் வரைபடம்
தன்சானியாவின் ஒரு பகுதியாக சன்சிபார்

சன்சிபார் (Zanzibar, zænzɪbɑː(ɹ)) என்பது தன்சானியா நாட்டின் ஒரு பகுதியாகும். இது இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆபிரிக்கக் கரையில் இருந்து 25-50 கிமீ தொலைவில் உள்ள தீவுகளைக் குறிக்கும். இது இரண்டு பெரிய தீவுகளான உங்குஜா, பெம்பாத் தீவு ஆகியவற்றையும் வேறு பல சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது. உங்குஜா தீவே பெரும்பாலும் சன்சிபார் என்று அழைக்கப்படுகிறது. இத்தீவுகள் முன்னர் சன்சிபார் என்ற தனிநாடாக இருந்தது. டிசம்பர் 10, 1963 இல் இது ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தானின் கீழ் முடியாட்சி ஆனது. ஆனாலும் ஜனவரி 12, 1964 இல் மன்னராட்சி கலைக்கப்பட்டு ஏப்ரல் 26, 1964 இல் தங்கனீக்கா நாட்டுடன் இணைக்கப்பட்டு இரண்டும் தன்சானியா என்றழைக்கப்பட்டன. எனினும் இது தன்சானியாவின் மத்திய ஆட்சியின் கீழ் முழுமையான சுதந்திரம் உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. சன்சிபாரின் தலைநகரம் சன்சிபார் நகரம் ஆகும்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்சிபார்&oldid=2541130" இலிருந்து மீள்விக்கப்பட்டது