சாந்திரா மூர் பேபர்
சாந்திரா மூர் பேபர் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 28, 1944 போசுடன், MA, அமெரிக்க ஒன்றிய நாடு |
வாழிடம் | கலிபோர்னியா, அமெரிக்க ஒன்றிய நாடு |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு இலிக் வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | சுவார்த்மோர் கல்லூரி ஆர்வார்டு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | வேரா உரூபின் |
அறியப்படுவது | பேபர்-ஜாக்சன் உறவு, இலிக் வான்காணகம் வடிவமைப்பு |
விருதுகள் | வானியற்பியலுக்கான டான்னி ஃஈன்மேன் பரிசு (1985) புரூசு பதக்கம் (2012) தேசிய அறிவியல் பதக்கம் (2013) |
சாந்திரா மூர் பேபர் (Sandra Moore Faber ( பிறப்பு 1944) ஒரு கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல், வானியற்பியல் பேராசிரியர். இவர் இலிக் வான்காணகத்தில் பணிபுரிகிறார். இவர் பால்வெளிகளின் பொலிவை அவற்றில் அமைந்த விண்மீன்களின் வேகத்துடன் உறவுபடுத்தி பல கண்டுபிடிப்புகளை ஆற்றியுள்ளார். மேலும் இவர் பேபர்- ஜாக்சன் உறவைக் கண்டறிந்தார். அவாயில் அமைந்த கெக் வான்காணகத்தை வடிவமைத்து நிறுவியதில் பேபருக்கு பெரும்பங்குண்டு.
கல்வி
[தொகு]பேபர் 1966,இல் சுவார்த்மோர் கல்லூரியில் பயின்று இயற்பியலில் உயர்தகைமையுடன் இளவல் பட்ட்த்தைப் பெற்றார். இவர் 1972 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வானியலில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
தொழில்முறைப்பணி
[தொகு]பேபர் ஏழு சாமுராய் என்ற குழுவின் தலைவராவார். இக்குழு மாபெரும் கவர்வி அல்லது ஈர்ப்பி எனும் பொருண்மைச் செறிவைக் கண்டுபிடித்தது. இவர் நூக்கர் குழுவின் முதன்மை ஆய்வாளரும் ஆவார். இக்குழு அப்புள் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்திப் பால்வெளிகளின் மையத்தில் உள்ள மீப்பொருண்மை வாய்ந்த கருந்துளைகளைக் கண்டுபிடித்தது. இவர் முதன்முதலாக, அப்புள் தொலைநோக்கியை அகற்புல கோள் ஒளிப்படக் கருவியாகப் பயன்படுத்தினார். இக்குழு அகற்புலக்கோள் ஒலிப்படக் கருவிக் குழு எனப்பட்டது. இவர் அப்புள் முதன்மையில் கோளப் பிரழ்வை வடிவமைத்தார்.
பேபர் கூறுகிறார், "நாம் ஆய்வதன் விளைவுகளைப் பற்றிக் கட்டாயமாக நாமே எண்ணிப்பார்த்தல் வேண்டும் என நான் நம்புகிறேன். மாந்தரினம் எங்கே போகிறது என இது பல வாய்ப்புகளை நல்குகிறது." [சான்று தேவை]
இவர் ஒரு நிறுவனத்தில் (UCSC) புடவியின் படிமலர்ச்சியிலும் பால்வெளிகளின் தோற்றத்திலும் படிமலர்ச்சியிலும் தன் தேடலைக் குவித்துச் செயற்பட்டார். மேலும் இவர் கெக் வான்காணகத்தின் ஒரு கருவியின் (DEIMOS) உருவாக்கத்திலும் பங்கேற்றார். இதைக் கொண்டு நெடுந்தொலைவில் உள்ள பால்வெளிகளின் கதிர்நிரல்களை படம்பிடித்து பதிவு செய்தார். 2012 ஆகத்து 1 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வான்காணகங்களின் இடைநிலை இயக்குநரானார்.
சாந்திரா பேபர் வானியல் வானியற்பியல் மீள்பார்வை இதழின் இணை ஆசிரியர் ஆவார்.
விருதுகள்
[தொகு]பேபர் 1985 இல் அமெரிக்க நாட்டுத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2001 ஏப்பிரல் 29 இல் அமெரிக்க மெய்யியல் கழகதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1985 இல் வானியற்பியலுக்கான டான்னி ஃஈன்மேன் பரிசைப் பெற்றார். மேலும் 2006 இலார்வார்டு நூற்றாண்டுப் பதக்கத்தைப் பெற்றார்.
இவர் 2009 இல் ஃபிராங்ளின் நிறுவன போவர் விருதைப் பெற்றார். முப்பது ஆண்டுகளாக பால்வெளிகளின் தோற்றத்தையும் படிமலர்ச்சியையும் தொடர்ந்து ஆய்வு செய்த்தற்காகவும் வானியல் குமுகத்துக்கான கலைநயம் மிக்க வானியல் கருவிகளைப் புதிதாகப் புனைந்ததற்காகவும் ஃபிராங்ளின் நிறுவனத்தின் அறிவியல் அருஞ்செயல் விருதைப் பெற்றார். இவரது ஆய்வு அண்டவியலையும் அதன் படிமத்தையும் பற்றிய புரிதலைப் புரட்சிகரமாக மாற்றியது.
இவர் 2012 மே மாதத்தில் பசிபிக் வானியல் கழகத்தில் இருந்து புரூசு பதக்கத்தைப் பெற்றார்.[1] இவர் 2012 செப்டம்பரில் செருமானிய வானியல் கழகத்தின் கார்ல் சுவார்சுசைல்டு பதக்கத்தைப் பெற்றார்.[2]
இவர் 2013 பிப்ரவரியில் க்டியரசுத் தலைவர் பாரக் ஒபாமாவிடம் இருந்து அறிவியலுக்கான தேசிய பதக்கத்தைப் பெற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Astronomical Society of the Pacific Honors Dr. Sandra Moore Faber with Prestigious Bruce Gold Medal Award" பரணிடப்பட்டது 2013-01-17 at the வந்தவழி இயந்திரம். Accessed June 1, 2012.
- ↑ Press Release[தொடர்பிழந்த இணைப்பு] by the Astronomische Gesellschaft, 2012-08-03.
- ↑ "UCSC astronomer Sandra Faber to receive the National Medal of Science"
வெளி இணைப்புகள்
[தொகு]- Dr. Faber's page @ UCSC பரணிடப்பட்டது 2012-02-19 at the வந்தவழி இயந்திரம்
- See video of Dr. Faber @ Meta-Library.net பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- UC Santa Cruz's biography of Sandra Faber
- யூடியூபில் Video of Faber explaining How Galaxies Were Cooked from the Primordial Soup, from the Silicon Valley Astronomy Lectures
- Oral History interview transcript with Sandra M. Faber 31 July 2002, American Institute of Physics, Niels Bohr Library and Archives பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Video of Faber talking about her work, from the National Science & Technology Medals Foundation
- Photographs of Sandra Faber from the UC Santa Cruz Library's Digital Collections பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்