சாணி வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாணி வண்டு
Scarabaeus viettei (syn. Madateuchus viettei, Scarabaeidae) in dry spiny forest close to Mangily, western Madagascar
Scarabaeus viettei (syn. Madateuchus viettei, Scarabaeidae) in dry spiny forest close to Mangily, western Madagascar
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Animalia
தொகுதி: Arthropoda
வகுப்பு Insecta
வரிசை: Coleoptera
பெருங்குடும்பம்: Scarabaeoidea

சாணி வண்டு (Dung beetle) என்பது ஒரு வகை உயிரி. இது ஒரு மிமீ முதல் மூன்று செ.மீ வரை என பல அளவுகளில் காணப்படுகிறது. இதன் வடிவம் ஏறக்குறைய தென்னை மரத்தின் குருத்துகளை குடைந்து நாசம் செய்யும் காண்டாமிருக வண்டினை ஒத்திருக்கும். கருமை நிறமுடையது. முன்பகுதி அரைவட்டவடிவில் மண்வெட்டி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னங்கால்கள் குட்டையாகவும் பின்னங்கால்கள் நீண்டும் காணப்படும். மண்வெட்டி போன்ற அமைப்பின் மூலம் சாணத்தின் ஒரு பகுதியை வெட்டி பிரித்து எடுக்கவும் பூமியில் பள்ளம் தோண்டவும் முடியும். இவை விலங்குகளின் சாணத்தை உண்டு வாழ்கின்றன. சிறிய வண்டுகள் சாணக்குவியலுக்குள் புகுந்து அச்சாணக்குவியல் தீரும்வரை அங்கேயே தங்கி வாழும். சாண வண்டுகளுக்கு மோப்ப சக்தி அதிகம். யானை, மாடு போன்ற விலங்குகள் சாணம் போட்டவுடன் அதிலிருந்து வரும் மணம் காற்றில் பரவியவுடன் சாண வண்டுகள் கூட்டமாக வந்து சாணத்தை மொய்த்து கொள்ளும். இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கும் பெண் வண்டுகள் சாணத்தை உருட்டி பந்து போல் செய்து முன் காலகளை முன் பக்கம் ஊன்றிக்கொண்டு பின்னங்கால்களால் சாண உருண்டையை உருட்டிச் செல்லும். அவை தன் எடையைப்போல் பல நூறு மடங்கு எடையை நகர்த்திச் செல்லும் வலிமையுடையது. அவ்வாறு உருட்டிச் செல்லும் சாண உருண்டைகளை ஈரமான இடத்தைத் தேர்ந்தெடுத்து பின்னங்கால்களால் தாங்கியபடி முன்னங்கால்களால் பூமியில் குழி தோண்டிகொண்டு நுழையும். சாண உருண்டையும் குழிக்குள் வந்து சேரும். வெளியேற்றப்பட்ட மண்குழியை மூடிகொள்ளும். வண்டு சாண உருண்டையின் மீது முட்டையிடும். பின் வெளியேறி விடும். முட்டை குஞ்சு பொரித்து சாண உருண்டையை உண்டு வளரும். முழுவளர்ச்சி அடைந்தவுடன் வெளியேறிவிடும். மழை பெய்து பூமி ஈரமாக உள்ள காலங்களில் மட்டுமே வண்டுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியும். சாணத்தைப் பூமியில் புதைத்து வைப்பதால் பூமி வளம் அடையும் என கூறுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணி_வண்டு&oldid=1672530" இருந்து மீள்விக்கப்பட்டது