உள்ளடக்கத்துக்குச் செல்

சவுரியா ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சவுரியா (ஏவுகணை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சவுரியா ஏவுகணை
சவுரியா ஏவுகணை, முதல் சோதனையின்போது
வகைBallistic missile.[1]
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்இந்திய பாதுகாப்பு படைகள்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO)
உருவாக்கியது2011
அளவீடுகள்
எடை6.2 டன்[2]
நீளம்10 மீ[2][3]
விட்டம்0.74 மீ[2]
வெடிபொருள்180 கி.கி. முதல் 1000 கி.கி. வரை [4]

இயந்திரம்இரண்டடுக்கு திட எரிபொருள் ஆகாசவாண இயந்திரம்
இயங்கு தூரம்
700 கி.மீ.[2][5] @ 1000 கி.கி. மற்றும் 1900 கி.மீ. @ 180 கி.கி.[6][7]
பறப்பு உயரம்40 கி.மீ.[2]
வேகம்மக் 7.5 [2]
வழிகாட்டி
ஒருங்கியம்
Ring laser gyroscope
ஏவு
தளம்
Canisterized launch from TEL or underground silo[2]

சவுரியா ஏவுகணை (வீரம்), இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் இந்திய பாதுகாப்புப் படைகளின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். ஒலியைவிட அதிவேகமாக செல்லக்கூடிய இந்த ஏவுகணை, ஏவுவாகனத்தில் இருந்து ஏவப்படக்கூடியதாகும். நிலத்தில் இருந்து நிலத்தில் பாயும் இந்த ஏவுகணை 750 முதல் 1900 கி.மீ.[6] வரை இயங்கு தூரம் கொண்டதாகும். சவுரியா ஏவுகணை, ஒரு டன் எடையுள்ள சாதாரண மற்றும் அணு வெடிபொருட்களை எடுத்து செல்லக்கூடியது.[3][8][9]

விவரணம்[தொகு]

சவுரியா ஏவுகணை, நீருக்கடியில் ஏவப்படும் சாகரிகா ஏவுகணையின் நிலப்பதிப்பு என்று நம்பப்படுகிறது.[10] ஆனால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.[7] கையாள்வதையும் ஏவுவதையும் எளிதாக்க சவுரியா ஏவுகணை ஏவுவாகனத்தில் வைக்கப்படுகிறது. ஏவுவாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வாயு உற்பத்திக்கலன் ஏவுகணையை ஏவ பயன்படுத்தப்படுகிறது.

சவுரியா ஏவுகணைகளை எதிரிகளின் கண்காணிப்பிலும் செயற்கைக்கோள்களிடமும் சிக்காமல் நிலத்தடி அறைகளில் மறைத்து வைக்க முடியும். குறுகிய இயங்கு தூரம் கொண்ட ஏவுகணையானதால், அவ்வறைகள் நாட்டின் எல்லைக்கருகில் அமைக்கப்பட வேண்டும் அல்லது ஏவுகணையின் இயங்கு தூரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.[1] சவுரியா ஏவுகணைகள் குறைந்த உயரத்திலும் மக் 7.5 வேகத்தில் செல்லக்கூடியன. சவுரியா ஏவுகணை, நவம்பர் 12, 2008 அன்று 700° செல்சியஸ் பரப்பு வெப்பத்திலும் மக் 5 வேகத்தில் 300 கிலோ மீட்டரைத் தாண்டியது. ஒரே ஏவுவாகனத்தில் எடுத்துச் செல்லக்கூடியது என்பதால் செயற்கைக்கோள்களின் கண்காணிப்பில் சிக்காமல் எளிதில் பயன்படுத்த முடியும். ஏவுவாகனத்தில் உள்ள வாயு உற்பத்திக்கலன் அதிக அழுத்தம் கொண்ட வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் விரிவடைவதன் மூலம் ஏவுகணை ஒன்றரை நொடிகளுக்குள் ஏவப்படுகிறது.[8]

சவுரியா ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சவுரியா ஏவுகணை ஏவப்பட்டு 50 கி.மீ. உயரத்தை அடைந்த பின் ஒலியைவிட அதிவேகமாக செல்லத் துவங்கும். இந்த ஏவுகணை, இலக்கை 20 முதல் 30 மீட்டர் துல்லியத்துடன் தாக்க வல்லது.[5]

சோதனைகள்[தொகு]

சவுரியா ஏவுகணை முதல் முறையாக நவம்பர் 12, 2008 அன்று ஓடிசாவின் சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதிக்கப்பட்டது.[11] மூன்றாவது முறையாக அதன் இறுதி வடிவத்தில் செப்டம்பர் 24, 2011 அன்று சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதனைக்காக ஏவப்பட்டது. ஒலியைவிட 7.5 மடங்கு வேகத்தில் தனது முழு இயங்கு தூரமான 700 கிலோ மீட்டரை 500 வினாடிகளில் கடந்தது. இந்த சோதனைக்குப் பிறகு இந்திய கடற்படைக்காக இந்த ஏவுகணையின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.[2]

உற்பத்தி[தொகு]

இந்த ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முதலில் உற்பத்தியான ஏவுகணைகளிலிருந்து ஒரு ஏவுகணையைத் தேர்ந்தெடுத்து சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Pandit, Rajat (November 13, 2008). "India successfully test fires Shaurya missile". Times of India இம் மூலத்தில் இருந்து 2011-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111010142537/http://articles.timesofindia.indiatimes.com/2008-11-13/india/27899942_1_strike-ranges-surface-to-surface-missile-agni-iii. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Shaurya missile launch successful
 3. 3.0 3.1 ""Shourya missile cannot be easily detected"". Archived from the original on 2008-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 4. [1]
 5. 5.0 5.1 "Shaurya surfaces as India's underwater nuclear missile – 1 – National News – News – MSN India". Archived from the original on 2012-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 6. 6.0 6.1 http://www.indiaresearch.org/Shourya_Missile.pdf
 7. 7.0 7.1 "RIA Novosti: India successfully test-fires ballistic missile". Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
 8. 8.0 8.1 "Missile success – Frontlineonnet". Archived from the original on 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 9. "India successfully test fires 'Shaurya' missile". expressindia.com. November 12, 2008. Archived from the original on செப்டம்பர் 16, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 6, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. "Shourya test-fired successfully". Archived from the original on 2008-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 11. "Shaurya Missile Test this week". Archived from the original on 2011-09-25. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுரியா_ஏவுகணை&oldid=3929659" இலிருந்து மீள்விக்கப்பட்டது