உள்ளடக்கத்துக்குச் செல்

சவுன் அடம் இலெவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவான் லெவி
பிறப்புசவான் ஆடம் லெவி[1]
சூலை 23, 1968 (1968-07-23) (அகவை 56)
மொண்ட்ரியால், கியூபெக், கனடா
பணிதிரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
செரினா
பிள்ளைகள்4

சவான் ஆடம் லெவி (ஆங்கில மொழி: Shawn Adam Levy) (பிறப்பு: 23 ஜூலை 1968)[2] என்பவர் கனடா நாட்டுத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு முதல் நைட் அட் த மியுசியம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி மற்றும் தயாரித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு தயாரித்த அறிவியல் புனைகதைத் திரைப்படமான அரைவல் என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரையைப் பெற்றது.

இவர் 2016 முதல் நெற்ஃபிளிக்சு அசல் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்[3] என்ற இணையத் தொடரின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார். இந்த தொடரின் மூன்று பருவங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு அத்தியாயங்களை இவர்இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shawn Adam Levy — The Guild / Members". Directors Guild of America. பார்க்கப்பட்ட நாள் November 12, 2017.
  2. "Shawn Levy — Biography and Filmography - 1968". hollywood.com. February 20, 2015. பார்க்கப்பட்ட நாள் July 23, 2017.
  3. Berkshire, Geoff (July 22, 2016). "'Stranger Things': Shawn Levy on Directing Winona Ryder, Netflix's Viral Model". Variety.
  4. "'Stranger Things' Season 3 Starts Filming Monday". April 21, 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுன்_அடம்_இலெவி&oldid=3848246" இலிருந்து மீள்விக்கப்பட்டது