சல்மா கதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சல்மா கதுன் (Salma Khatun பிறப்பு: அக்டோபர் 1, 1990, குல்னா, வங்காளதேச ) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை சுழற் பந்துவீச்சாளராகவும் செயல்படுகிறார். மேலும் இவர் வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் உள்ளார்.[1] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பெண் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவும் இவர் அரியப்படுகிறார்.[2] இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டி வடிவங்களில் விளையாடி வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

சல்மா கதுன் அக்டோபர் 1, 1990 அன்று வங்காளதேசத்தின் குல்னாவில் பிறந்தார். இவர் முதலில் குல்னாவில் சிறுவர்களுடன் துடுப்பாட்ட விளையாடத் தொடங்கினார். இவர் இம்தியாஸ் ஹொசைன் பிலு எனும் பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்றார்.

தொழில்[தொகு]

ஆசிய விளையாட்டுக்கள்[தொகு]

சீனாவின் தேசிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2010 ல் ஆசிய விளையாட்டு பெண்கள் துடுப்பாட்டப் போட்டியில் வங்காளதேச பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. சீனாவின் குவாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருமனா அணியின் சார்பாக இவர் பங்கேற்றார் [3][4] அந்தப் போட்டித் தொடரில் இவர் மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்கெடுத்தார்.[5]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

ஒருநாள்[தொகு]

2011 ஆம் ஆண்டில் ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடருக்கான தகுதிச் சுற்றில் நவம்பர் 26 இல் சாவரில் அயர்லாந்து பெண்கள் துடுப்ப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

2019 ஆம் ஆண்டில் வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவமபர் 4, லாகூரில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 9.2 ஓவர்கள் வீசி 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசி இரு இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் மட்டையாட்டத்தில் 8 பந்துஇகளைச் சந்தித்து ஓர் ஓட்டம் எடுத்து பிஸ்மா மரூஃப் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார்.[6]

இருபது20[தொகு]

சல்மா நவம்பர் 26, 2011 அன்று அயர்லாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அரிமுகமானார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் ஆசியக் கோப்பைத் தொடரில் இவர் வங்காளதேச பெண்கள் அணி சார்பாக விளையாடினார். மேலும் அந்தத் தொடரில் வங்காளதேச அணி கோப்பையினை வென்றது. ஆசியக் கோப்பையில் வங்காளதேச பெண்கள் அணி கோப்பையினை வெல்வது இதுவே முதல் முறையாகும்.[7] அதே மாதத்தின் பிற்பகுதியில், 2018 ஐ.சி.சி மகளிர் உலக இருபதுக்கு -20 தகுதிப் போட்டிக்கு பங்களாதேஷின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[8]

அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 போட்டிக்கான வங்காளதேச அணியின் தலைவனாகத் தேர்வு செய்யப்பட்டார்.[9][10] இந்தத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அத்கிக இலக்குகளைக் கைப்பற்றிய வங்காளதேச வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்..[11]

ஆகஸ்ட் 2019 இல், ஸ்காட்லாந்தில் நடைபெறும் 2019 ஐ.சி.சி மகளிர் உலக இருபதுக்கு -20 தகுதிப் போட்டிக்கான வங்காளதேச அணியின் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[12][13]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_கதுன்&oldid=3243338" இருந்து மீள்விக்கப்பட்டது