சர்வீன் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வீன் சவுத்ரி
நாடாளுமன்ற செயலாளரார்
பதவியில்
1998–2003
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர்
பதவியில்
2008–2013
நகர்ப்புறம் மற்றும் ஊரகத் திட்டமிடல் துறை அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சனவரி 1966 (1966-01-21) (அகவை 58)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

சர்வீன் சவுத்ரி (Sarveen Choudhary) (பிறப்பு 1966) வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் ஷாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி அமைச்சரவையில் நகர்ப்புற மற்றும் ஊரகத் திட்டமிடல் துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தார். துமல் அரசாங்கத்தில் இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தார். காங்ரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

இவர், தனது மாணவ வாழ்க்கையின் போது நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம் நடவடிக்கைகளில் பங்கேற்றார். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நாட்டுப்புற நடனப் போட்டிகளிலும் பங்கேற்றார். மேலும், ஐந்து ஆண்டுகள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் சிறந்த நாட்டுப்புற நடனக் கலைஞராக இருந்தார்.

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் செயல் பணியாளரான இவர், 1992 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். பரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் மண்டல் பிரதான், மகிளா மோர்ச்சா (1992-94) ஆகிய பதவிகளை வகித்தப் பின்னர் கட்சியின் மாநில நிர்வாகியானார். 1995–97 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். 1998ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007இல் மீண்டும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர், 03-11-1998 முதல் மார்ச் 2003 வரை கட்சியின் நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தார். 09-01-2008 முதல் திசம்பர் 2013 வரை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருந்தார்

இவர், 2017 திசம்பரில் நான்காவது முறையாக மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mohan, Lalit (6 October 2017). "BJP faces anti-incumbency, Cong remains divided". The Tribune (Chandigarh) இம் மூலத்தில் இருந்து 18 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171018223413/http://www.tribuneindia.com/news/himachal/bjp-faces-anti-incumbency-cong-remains-divided/477963.html. பார்த்த நாள்: 18 October 2017. 
  2. Mohan, Lalit (20 December 2012). "Shanta Kumar faction wiped out in Kangra district". The Tribune (Chandigarh). Tribune News Service இம் மூலத்தில் இருந்து 18 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171018223429/http://www.tribuneindia.com/2012/20121221/himachal.htm%235#5. பார்த்த நாள்: 18 October 2017. 
  3. Thakur, Naresh K (26 February 2014). "BJP choice clear; scramble delays Cong decision". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 18 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171018224006/http://www.hindustantimes.com/punjab/bjp-choice-clear-scramble-delays-cong-decision/story-GixEEpwA2yB8BJLi6D2aOP.html. பார்த்த நாள்: 18 October 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வீன்_சவுத்ரி&oldid=3480638" இலிருந்து மீள்விக்கப்பட்டது