சராகி போர்

ஆள்கூறுகள்: 33°33′15″N 70°53′15″E / 33.55417°N 70.88750°E / 33.55417; 70.88750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சராகி சண்டை

சராகி போக்களத்தின் வரைபடம்
நாள் 12 செப்டம்பர் 1897
இடம் தீரா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பிரித்தானிய இந்தியா
33°33′15″N 70°53′15″E / 33.55417°N 70.88750°E / 33.55417; 70.88750
பிரிவினர்
பிரித்தானியப் பேரரசு பிரித்தானியப் பேரரசு

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு பிரித்தானிய இந்தியா

அப்பிரிடிகள்
ஓரக்ழாய்
தளபதிகள், தலைவர்கள்
இசார் சிங்   குல் பட்சா
பலம்
21[1] 10,000 to 12,000[2][3]
இழப்புகள்
இறப்பு 21 [1] 450
இறப்பு மற்றும் காயமடைந்தோர் [4][5]
See Aftermath section

சராகி சண்டை (Battle of Saragarhi) பிரித்தானிய இந்தியாவின் சீக்கியப் படையின் சிறிய அளவிளான சீக்கிய வீரர்களுக்கும், ஆப்கானித்தான் பஷ்தூன் பழங்குடி வீரர்களுக்கும் இடையே 12 செப்டம்பர் 1897 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் தீரா எனுமிடத்தில் நடைபெற்ற வீரமிக்க போராகும்.[6] [7] சராகி போர் என்பது மனித வரலாற்றில் துணிச்சலான செயல்களுக்கான கதைகளில் முக்கியமான சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.[8] 36வது சீக்கிய படையின் இருப்பத்தோரு வீரர்கள் ஹவில்தார் இஷார் சிங் தலைமை தாங்கி செல்லப்பட்டனர், இவர்கள் 10,000 பேர்கள் இணைந்த பெரிய ஆப்கானித்தான் வீரர்களின் தாக்குதலை பல மணிநேரங்கள் எதிர்த்து தாக்கு பிடித்தனர். இந்த 21 சீக்கிய ராணுவத்தினரும், சரணடைய முன்வராமல், சாகும் வரை போராடி இறந்தனர். இவர்களுடைய மிக உயர்ந்த, தியாகத்தை கவுரவிக்கும் விதமாக பிரித்தானிய நாடாளுமன்றம் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தியது, இறந்த வீரர்கள் அனைவருக்கும் இந்திய கவுரவ ஆணையை வழங்கியது (விக்டோரியா பதக்கத்திற்கு ஈடானது) . இந்த போரானது, தெர்மோபைலே போருடன் ஒப்பிடப்படுகிறது,[9] இந்த போரில் ஒரு சிறிய கிரேக்கப் படை, முதலாம் செர்கஸ்சின் மிகப்பெரிய பாரசிகப் படையை எதிர்கொண்டது (கிமு 480)

இந்த சராகர்ஹி சண்டையை நினைவுகூர்ந்து, சீக்கிய இராணுவப் பிரிவினர், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 ஆம் தேதி, சராகி போர் நாளை அனுசரிக்கின்றனர். சீக்கிய ராணுவ நபர்கள் மற்றும் உலகெங்கும் சீக்கிய ராணுவத்தைச் சார்ந்த பொதுமக்கள் ஆகியோர் செப்டம்பர் 12 ஆம் நாள் இதை அனுசரிக்கின்றனர்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "No. 26937". இலண்டன் கசெட். 11 February 1898. p. 863.
  2. Tom Lansford (2017). Afghanistan at War: From the 18th-Century Durrani Dynasty to the 21st Century. பக். 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781598847604. https://books.google.com/books?id=XxwIDgAAQBAJ&q=600+killed+saragarhi&pg=PA408. "The Orakzais were joined by Afridis swelling their numbers to more than 10000. Groups of the tribesmen attacked Sangar on the night of September 11. The post was on a high ridge and well fortified. Although there were only 44 Sikh troops, the garrison repulsed the attack. The following morning, the natives attacked Saragarhi. The garrison numbered 21 Sikhs, led by Havildar Ishar Singh. Instead of withdrawing to one of the other posts, the Sikhs decided to remain in an effort to maintain communication between the two forts." 
  3. Sharma, Gautam (1990). Valour and Sacrifice: Famous Regiments of the Indian Army. Allied Publishers. பக். 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8170231400. https://books.google.com/books?id=xLrTzZd0j1kC&pg=PA185. பார்த்த நாள்: 22 February 2019. "A mass attack came on Saragarhi on September 12 and the 21 strong detachment fought one of the most unequal engagements in the history of warfare. There were fierce onslaughts by the 10,000 Orakzai and Afridi tribesmen. The outnumbered defenders returned the fire in a most determined manner. After a series of abortive attempts, the tribesmen managed to reach the wall of the post by using an ingenious method. Effecting a breach, they were face to face with the brave Sikhs, most of whom had been wounded." 
  4. Col Kanwaljit Singh, Maj H S Ahluwalia (1987). "Saragarhi (1897)". Saragarhi Battalion: Ashes to Glory. Lancer International. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170620228. https://www.google.com/books/edition/Saragarhi_Battalion_Ashes_to_Glory/SAGzBgAAQBAJ. "The gallant defence of Saragarhi by Havildar Ishar Singh and twenty other ranks and a follower is estimated to have lost the enemy about four hundred and fifty killed and wounded" 
  5. Dennis Showalter (2013). Imperial Wars 1815–1914. Amber Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781782741251. https://www.google.com/books/edition/Imperial_Wars_1815_1914/AvKxAgAAQBAJ. "The Sikhs were wiped out after inflicting 450 casualities on their attackers." 
  6. சரகர்ஹி யுத்தம்
  7. Stewart, Jules (15 August 2011). On Afghanistan's Plains: The Story of Britain's Afghan Wars. I.B. Tauris. 
  8. "The Sunday Tribune - Books". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  9. "The battle of Saragarhi". பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  10. Singh, Jaisal (13 September 2014). "The 21 Sikhs of Saragarhi". Business Standard India. https://www.business-standard.com/article/specials/the-21-sikhs-of-saragarhi-114091101117_1.html. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சராகி_போர்&oldid=3280007" இலிருந்து மீள்விக்கப்பட்டது