சரவ்ஜித் கவுர் மனுகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவ்ஜித் கவுர் மனுகே
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
முன்னையவர்எஸ். ஆர். காலெர்
தொகுதிஜாக்ரான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூலை 1972 (1972-07-25) (அகவை 51)
ஜாக்ரான், Punjab, இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்எஸ். சுக்வீந்தர் சிங்
பிள்ளைகள்2. ஒரு மகன், ஒரு மகள்
பெற்றோர்(s)எஸ். குல்வந்த் சிங், அர்செட் கௌர்

சரவ்ஜித் கவுர் மனுகே (Saravjit Kaur Manuke) பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர். [1] ஆவார். .

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர், முதல் முறையாக இவர் 2017 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 16 மார்ச் 2017 அன்று இவர் கட்சியின் உயர்மட்டக் குழுவின் மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2] இவர், தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்பித்தல் பணியாற்றினார். பின்னர் இவர் தனது பணியை விட்டுவிட்டு, பிரபல இந்திய அரசியல்வாதியான அரவிந்த் கெஜ்ரிவால் நிறுவிய ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2017ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜாக்ரான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[3] இவர் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார். பஞ்சாப் முன்னாள் மாநில அமைச்சரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான மல்கித் சிங் தக்கா என்பவரை தோற்கடித்தார். இவர் இரண்டு முறை பஞ்சாப் சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சரவ்ஜித் கவுர் மனுகே 61,521 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 45.35% ஆகும்.[4]

எதிர்கட்சித் தலைவர்[தொகு]

2017ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் சட்டமன்றத்தில் 20 இடங்களைப் பிடித்தது. சரப்வித் கவுர் மனுகே பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இவர் அரசியலுக்கு வெளியே சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளார். இவர் ஜாக்ரான் பொருளாதார சங்கத்திலும் தொடர்பு கொண்டுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Members". punjabassembly.nic.in.
  2. "AAP's new leaders after election".
  3. Punjab assembly constituency-Jagraon
  4. Jagraon assembly election பரணிடப்பட்டது 2020-10-21 at the வந்தவழி இயந்திரம் www.electionsinindia.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவ்ஜித்_கவுர்_மனுகே&oldid=3439228" இலிருந்து மீள்விக்கப்பட்டது