சரத் குமார் முகோபாத்யாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரத் குமார் முகோபாத்யாய் (Sarat Kumar Mukhopadhyay) இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு வங்காள மொழிக் கவிஞர் ஆவார். மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் கூட இவர் செயல்பட்டார்.

தொழில்[தொகு]

முகோபாத்யாய் 1931 ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம் பூரியில் 1931 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று பிறந்தார் . கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் மற்றும் பட்டய மேலாண்மை நிறுவனத்தில் பட்டய கணக்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றார். இவருடைய முதல் கவிதைப் புத்தகம் சோனார் அரின் (தங்க மான்), 1957 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. [1] கொல்கத்தாவின் கிருட்டிபாசு இதழின் நான்கு பின் நவீனத்துவ பழம்பெரும் கவிஞர்களில் சரத் குமார் முகோபாத்யாயும் ஒருவர் என கருதப்படுகிறார். [2] [3] [4] இவரது முதல் நாவலான சகாபாசு தேசு என்ற வங்காள மொழி இலக்கியப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது, அந்த நேரத்தில் நாவல் வாசகர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் படைப்பாற்றல் எழுத்துத் திட்டத்தில் இவர் ஆலோசகராகப் பணியாற்றினார். [5] 2008 ஆம் ஆண்டில் முகோபாத்யாய் தனது குமர் போரிர் மோட்டோ சந்த் என்ற புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். [6] இவரது கவிதைகளின் தொகுப்பு ராபர்ட் மெக்னமாராவால் தி கேட் அண்டர் தி இசுடேர்சு என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. [7] [8] [9]

சரத் குமார் முகோபாத்யாய் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Who's who of Indian Writers, 1999: A-M. https://books.google.co.in/books?id=QA1V7sICaIwC&pg=PA809&lpg=PA809&dq=Sarat+Kumar+Mukhopadhyay&source=bl&ots=i_p6e5_PIa&sig=MaQ_6abNUPccybYZQfGPCj4hrUs&hl=en&sa=X&ei=kFkbUMOKBMm3rAeU2IHQDQ&redir_esc=y#v=onepage&q=Sarat%20Kumar%20Mukhopadhyay&f=true. 
  2. "'মধ্যরাতে কলকাতা শাসন' শেষ, চলে গেলেন সুনীল-শক্তির সতীর্থ শরৎকুমার মুখোপাধ্যায়". sangbadpratidin (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  3. "Sarat Kumar Mukherjee: শীতেই শরৎ-এর অবসান! প্রয়াত চিরসংযত ও চিরপ্রস্তুত এক কবি". Zee24Ghanta.com. 2021-12-21. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  4. Roy, Arunava Raha (2021-12-21). "কবি শরৎকুমার মুখোপাধ্যায় প্রয়াত". Hindustantimes Bangla (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  5. "Sarat Kumar Mukhopadhyay Archives". Katha Books (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  6. "..:: SAHITYA : Akademi Awards ::." sahitya-akademi.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  7. "Eminent Bengali poet Sarat Kumar Mukherjee dies at age 90". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  8. "Famous Bengali poet and writer Sarat Mukherjee passes away". Business Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-21. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  9. "Robert McNamara". Poets & Writers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.