சம்பொவாங்கோ டெல் சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பொவாங்கோ டெல் சர்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்சம்பொவாங்கா தீபகற்பம்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

சம்பொவாங்கோ டெல் சர் (Zamboanga del Sur) என்பது பிலிப்பீன்சின் மின்டனாவுப் பகுதியில், சம்பொவாங்கா தீபகற்பம் பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பகாடியன் ஆகும். இம்மாகாணம் 1952 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அந்தோனியோ செரில்லிஸ் (Antonio Cerilles) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,499.46 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக சம்பொவாங்கோ டெல் சர் மாகாணத்தின் சனத்தொகை 1,010,674 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 25ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 27ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 779 கிராமங்களும், 26 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் வாழும் மக்களில் 45 வீதமானோர் இசுலாமியர்க?ள், மேலும் ரோமன் கத்தோலிக்கர்கள் இம்மாகாணத்தில் சிறுபான்மையினராகக் காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. 21 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |https://www.webcitation.org/6DpMOBTiK?url= ignored (உதவி)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. 2017-01-05 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரபூர்வ இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பொவாங்கோ_டெல்_சர்&oldid=3552958" இருந்து மீள்விக்கப்பட்டது