உள்ளடக்கத்துக்குச் செல்

சமீரா சனீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமீரா சனீசு (Sameera Saneesh பிறப்பு 27 ஜூன் 1983) ஓர் இந்திய கேரள , ஆடைகலன் வடிவமைப்பாளர் ஆவார். தனது உடை வடிமைப்புப் பணிக்காக பரவலாக அறியப்பட்டவர். இவர் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.[1] சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான (2014 மற்றும் 2018) இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றவர்.[2] மார்ச், 2019 நிலவரப்படி, அவர் சுமார் 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். [2] [3] இவர் பரவலாக கேரள ஊடகங்களால் "மலையாளத் திரையுலகின் பரபரப்பான ஆடை வடிவமைப்பாளர்" என்று வர்ணிக்கப்படுகிறார்.[3]

சமீரா, கொச்சி தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் அலங்கார உடை வடிவமைப்பில் பட்டயம் பெற்றுள்ளார். [1] இவர் தனது தொழில் வாழ்க்கையை ரேமண்டின் உள்ளக வடிவமைப்பாளராகத் தொடங்கினார்.[1] இவர் ஏற்கனவே கொச்சியில் படிக்கும் போது விளம்பர படங்களுக்கான ஆடைகளை செய்ய ஆரம்பித்திருந்தார். இவர் "சௌந்தர்யா சில்க்ஸ்" துணிக்கடைக்கான தொலைக்காட்சி விளம்பரங்களுடன் தொடங்கினார்.[3] மைசூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட சீமாசு நிறுவனத்திற்கான இவரது விளம்பரம் பரவலாகப் பாராட்டப்பட்டது.[3] அவர் பீமா, ஆலுக்காசு, கல்யாண் சில்க்ஸ், தத்ரி, நிரபாரா மற்றும் வி.கே.சி. க்கான தொலைக்காட்சி விளம்பரங்களுக்கான ஆடைகளை வடிவமைத்தார்.[1] இந்த தொலைக்காட்சி விளம்பரங்களில் சில தென்னிந்தியாவின் முக்கிய திரைப்பட நடிகர்களான நித்யா மேனன், பிரித்விராஜ் சுகுமாரன் போன்றவர்கள் நடித்திருந்தனர்.[4]

சமீரா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தி வைட் எலிபண்ட், 2008 ஆம் ஆண்டு ஐஜாஸ் கான் இயக்கிய இந்திப் படத்தில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.[1] ஆஷிக் அபுவின் இயக்கத்தில் டாடி கூல் 2009இல் வெளியானது.[5] சமீரா தற்போது [[லிம்கா சாதனைகள் புத்தகம்|லிம்கா சாதனைகள் புத்தக] விருதை "மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு ஆடைகளை வடிவமைத்ததற்காக" இடம்பெற்றுள்ளார்.[5] திரைப்பட கதாபாத்திரங்களுக்காக ஆடைகளை வடிவமைத்து உருவாக்கும் சுமார் 25 பேர் கொண்ட ஒரு துணைக்குழு இவரிடம் உள்ளது.[2]

சுயசரிதை

[தொகு]

ஜூன், 1983 இல் இப்ராகிம் மற்றும் ஜமீலா தம்பதியினருக்கு மகளாக சமீரா பிறந்தார். கொச்சி பாரத் மாதா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.[1] வரைதல் மற்றும் துணி ஓவியம் மீதான அரரது விருப்பமே அலங்கார வடிவமைப்பு துறையில் பட்டயம்பெறக் காரணமாக அமைந்தது. [3] இவர் கொச்சியைச் சேர்ந்த பொறியாளர் சனீஷ் கேஜே என்பவரை மணந்தார்.[1] இவர் தனது மறைந்த தாய் ஜமீலாவை தனது வாழ்க்கையில் பெரும் செல்வாக்கான நபராகக் குறிப்பிட்டுள்ளார். [1] கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சப்யசாச்சி முகர்ஜி, சமீரா சனீசுவிற்கு "பிடித்த வடிவமைப்பாளர்" ஆவார்.[1]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

2009 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான கேரளா கஃபே திரைப்படத்தில் நடித்தார். இதனை லால் கோசு, சஜி கைலாசு ரேவதி, சியாம் பிரசாத், அன்வர் ரசீத்து, பி. உன்னி கிருஷ்ணன், அஞ்சலி மேனன், எம். பத்மகுமார், சங்கர் ராம்கிருட்டிணன் மற்றும் உதய் கிருட்டிணன் ஆகியோர் இயக்கி இருந்தனர். அதே ஆண்டில் டாடி கூல் திரைப்படத்தில் நடித்தார். மலையாளத் திரைப்படமான இதை ஆசிக் அபு இயக்கியிருந்தார்.

2010 ஆம் ஆண்டில் கதா துடருன்னு, பெஸ்ட் ஆக்டர், அகதான், மலர்வாடி ஆர்ட்சு கிளப், பிரஞ்செட்ட்யான் அண்ட் டெஹ் செயிண்ட் , இன் தெ கோஸ்ட் ஹவுசு இன்ன் ஆகிய மலையாளத் திரைப்படங்களில் நடித்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Sathyendran, Nita. (11 October 2011). In vogue in Mollywood. The Hindu. Retrieved from http://www.thehindu.com Wayback Machine Archive Link
  2. 2.0 2.1 2.2 Baby, Ansu Anna. (3 March 2019). Two state awards, record films make Sameera the star costumer. Malayala Manorama. Retrieved from english.manoramaonline.com
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 The New Indian Express Staff. (25 July 2011). The Superhit Couturier. The New Indian Express. Retrieved from http://www.newindianexpress.com
  4. Onmanorama Staff. (25 November 2015). My costumes look the best on Mammootty!. Malayala Manorama. Retrieved from http://english.manoramaonline.com
  5. 5.0 5.1 James, Anu. (27 March 2015). Malayalam Costume Designer Sameera Saneesh Enters Limca Book of Records. International Business Times. Retrieved from http://www.ibtimes.co.in Wayback Machine Archive Link
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீரா_சனீசு&oldid=3287596" இலிருந்து மீள்விக்கப்பட்டது